ரொம்ப நாளா மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருந்த கேள்வி!
எத்தனையோ நண்பர்களுக்கு,உடன் பணிபுரியும் சகாக்களுக்கு, நாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு உண்டு மகிழ்ந்ததுண்டு! ஆனால் நாம் நம் பெற்றோர்களின் திருமண நாள் அவ்வளவாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோமா?
சகோதர சகோதரிகளின் கல்யாண நாளினை கூட நாம் வெகு எளிதாக வாழ்த்து சொல்லி கொண்டாடும் மனநிலை பெற்றிருந்தாலும் கூட,
அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனநிலையுடன் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் எனக்கு தெரிந்த மட்டில் கொஞ்சம் குறைவுதான்!
இத்தனைக்கும் அது ஒன்றும் அவ்ளோ பெரிய தவறான விசயமும் கூட இல்லை! ஆனாலும் கூட ஏதோ மனதளவில் ஒரு கூச்சம்!
சொல்லுங்களேன்! எத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் தாய் தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறீர்கள்?
இது வரை எப்படியோ!? இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்! -
சின்ன சின்ன அன்பில்,வாழ்த்துக்களில்,மகிழ்ச்சிகளில் தானே, இனிய வாழ்க்கை இருக்கிறது!
பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்!
# ஆயில்யன்
Labels: என் உள்ளத்தில், விவாதம்
Subscribe to:
Post Comments (Atom)
31 பேர் கமெண்டிட்டாங்க:
நல்ல யோசனை
எங்கள் வீட்டில் அனைவரும் கூடி கொண்டாடுவது எங்கள் பெற்றோர்களின் திருமணநாள், அன்னையர் தினம், தந்தையர் தினம் தான்.
இன்னும் இரண்டு நாள்களில் எங்களுக்கு தந்தையர் தினம் வருகின்றது :)
என் பெற்றோர்களின் கல்யாண நாள் அவங்களுக்கே தெரியாதே ? என்ன செய்ய
// இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்!//
சரியாப்போச்சு அவிங்களுக்கே அவிங்க கல்யாண தேதி நெனப்பிருக்குரதில்ல.
இதுல நாம எங்க வாழ்த்துறது.
தெரிஞ்ச வாழ்த்தலாம் தப்பில்லை.
நல்ல யோசனைதான்.
:)
mmmmm நல்ல சிந்தனைதான். இப்பொழுது அதிக வாழ்த்துகள் இல்லை எனினும் - சிலர் இன்றும் தங்களது பெற்றோரை வாழ்த்துகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
தெரிஞ்ச வாழ்த்தலாம் தப்பில்லை.
நல்ல யோசனைதான்.
repeatu ;)
ஆயில்யன் ரொம்ப உண்மையான விஷயம்.
எங்க பெற்றோரின் 225ஆவது கல்யாண நாள் அன்றுதான் ,என் மாமா மூலமாக இது தெரியும். அதுவரை என் திருமண நாள் தான் எனக்க்குப் பெரியதாகத் தெரிந்தது:)
அன்றிலிருந்து இப்போது மனதில் வாழ்த்துவது வரை நான் மறக்கவில்லை. அம்மா வெட்கப்படுவார் அவரது எழுபதூ வயதில் கூட.என் அம்மாவே அம்மா!!!
ஜீவ்ஸ் எந்தத் தமிழ் மாசம் நடந்ததுன்னு கேளுங்க. சரியாச் சொல்லுவாங்க.
அந்த மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமை வாழ்த்துக்கள் சொல்லலாம். முக்கால் வாசி கல்யாணங்கள் அப்ப எல்லாம் வெள்ளியில் இருக்கும்:)
அண்ணே அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்...
நான் கேட்டிருக்கேன் ஆனா அம்மா சொன்தில்லை இதவரையும்...
இருந்தாலும் அம்மா அப்பா சம்பந்தமான பல விசயங்களை நான் கேட்டு தெரிஞ்சுகிட்டுருக்கேன் கடந்த நாட்டகளில்...
நான் எப்போதும் அப்பா அம்மாவின் பிறந்த தினத்தையும்,திருமண நாளையும் மறப்பதில்லை.
3 தினங்களும் ஒரே மாதத்தில் அமைகிறது.
//tamil cinema said...
நல்ல யோசனை//
நன்றி !
// thooya said...
எங்கள் வீட்டில் அனைவரும் கூடி கொண்டாடுவது எங்கள் பெற்றோர்களின் திருமணநாள், அன்னையர் தினம், தந்தையர் தினம் தான்.
இன்னும் இரண்டு நாள்களில் எங்களுக்கு தந்தையர் தினம் வருகின்றது :)//
சொல்லவே வேணாம் கலக்கிடுவீங்க எனக்கும் இனிப்பு அனுப்புங்க!
//jeeves said...
என் பெற்றோர்களின் கல்யாண நாள் அவங்களுக்கே தெரியாதே ? என்ன செய்ய//
ம்ம் 1ம் சொல்ல தோணலை!
//கார்த்திக் said...
// இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்!//
சரியாப்போச்சு அவிங்களுக்கே அவிங்க கல்யாண தேதி நெனப்பிருக்குரதில்ல.
இதுல நாம எங்க வாழ்த்துறது. தெரிஞ்ச வாழ்த்தலாம் தப்பில்லை.
நல்ல யோசனைதான்./
நெனைப்பு இருக்கும்!
தெரிஞ்சுக்கிட்டு வாழ்த்துங்களேன்!
//பாரதி said...
:)//
நன்றி பாரதி!
// cheena (சீனா) said...
mmmmm நல்ல சிந்தனைதான். இப்பொழுது அதிக வாழ்த்துகள் இல்லை எனினும் - சிலர் இன்றும் தங்களது பெற்றோரை வாழ்த்துகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.//
நல்ல விசயம்தான்!
//கானா பிரபா said...
தெரிஞ்ச வாழ்த்தலாம் தப்பில்லை.
நல்ல யோசனைதான்.
repeatu ;)//
தெரிஞ்சுக்கிட்டும் வாழ்த்தலாமே!
//வல்லிசிம்ஹன் said...
ஆயில்யன் ரொம்ப உண்மையான விஷயம்.
எங்க பெற்றோரின் 225ஆவது கல்யாண நாள் அன்றுதான் ,என் மாமா மூலமாக இது தெரியும். அதுவரை என் திருமண நாள் தான் எனக்க்குப் பெரியதாகத் தெரிந்தது:)
அன்றிலிருந்து இப்போது மனதில் வாழ்த்துவது வரை நான் மறக்கவில்லை. அம்மா வெட்கப்படுவார் அவரது எழுபதூ வயதில் கூட.என் அம்மாவே அம்மா!!//
நன்றி வல்லியம்மா!
//வல்லிசிம்ஹன் said...
ஜீவ்ஸ் எந்தத் தமிழ் மாசம் நடந்ததுன்னு கேளுங்க. சரியாச் சொல்லுவாங்க.
அந்த மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமை வாழ்த்துக்கள் சொல்லலாம். முக்கால் வாசி கல்யாணங்கள் அப்ப எல்லாம் வெள்ளியில் இருக்கும்:)//
நீங்கள் சொல்வதும் கூட சரிதான்!
ஜீவ்ஸ் அண்ணாச்சி கேட்டுக்கோங்க!
//.king... said...
அண்ணே அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்...//
கண்டிப்பா கேட்டு மறக்காம வாழ்த்துக்களை தெரிவியுங்கள்!
//king... said...
நான் கேட்டிருக்கேன் ஆனா அம்மா சொன்தில்லை இதவரையும்..//
உறவுகளில் கூட விசாரித்தால் தெரிந்துவிடும்!
//ஹேமா said...
நான் எப்போதும் அப்பா அம்மாவின் பிறந்த தினத்தையும்,திருமண நாளையும் மறப்பதில்லை.
3 தினங்களும் ஒரே மாதத்தில் அமைகிறது.//
ரொம்ப அரிதாய் கிடைக்கும் இது போன்ற அம்சங்கள் ! வாழ்த்துக்கள்!
//Jeeves said...
என் பெற்றோர்களின் கல்யாண நாள் அவங்களுக்கே தெரியாதே ? என்ன செய்ய//
இதான் சாமி ப்ரச்சனை :(
பதிவுக்கே ரிப்பீட்டு :))
என் பெற்றோரின் 25வது திருமணனாளுக்கு அம்மாவுக்கு பட்டுப்புடவ எடுத்துதரனுமென்று அப்பாவிடம் கூற,அம்மா வெட்க்கப்பட ., இனிமையான தருனங்கள் அவை.
ஏனோ இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன:
“ சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு...”
அண்ணனுக்கு கல்யாணம் எப்போதோ?
அட்வான்சு வாழ்த்துக்கள்...
இதையெல்லாம் ஒண்ணுவிடாம செஞ்சுடுவோமே(எப்படியெல்லாம் ஐஸ் வைக்கலாமோ அதையெல்லாம் விடமாட்டோம்!!)...அதுவும் நாமே வரைஞ்சு, ஸ்டாம்ப் ஒட்டாம நம்ம வீட்டுக்கு அனுப்பினா..சந்தோஷமே தனி!! :-))
சரியா சொன்னீங்க அண்ணே...
நானும் பல முறை என்னையே கேட்டுக்ர கேள்வியும் கூட இது தான்.... என் பெற்றோரின் இந்த வருட திருமண நாளன்று வாழ்த்து
சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து உள்ளேன்,,, :))
Post a Comment