விடியும் பூமி அமைதிக்காக விடியவே...!

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை
பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி
கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ (வெள்ளைப்பூக்கள்)

எங்கு சிறு குழந்தை - தன்
கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர்
ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே

செப்டம்பர் - 21 - உலக சமாதான நாள்!

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அமைதியில்லா உலகம் நிம்மதி அடையவேண்டும் இந்த நாளே ஒவ்வொரு நாளும் நிஜமான நாளாக இருக்க வேண்டும்

said...

உலகம் அமைதி பெற நாம் அனைவரும் உறுதி கொள்வோம்... :)

said...

கவிதை ஆயில்யன் எழுதியதோ என்று ஓடோடி வந்தேன்.. அப்படியே காதல் கவிதை எழுதச் சொல்லத் தான்.. ;)

said...

//கானா பிரபா said...
அமைதியில்லா உலகம் நிம்மதி அடையவேண்டும் இந்த நாளே ஒவ்வொரு நாளும் நிஜமான நாளாக இருக்க வேண்டும்

21 September, 2008 7:30 PM
///

நம்பிக்கை வெல்லும்!

said...

//தமிழ் பிரியன் said...
உலகம் அமைதி பெற நாம் அனைவரும் உறுதி கொள்வோம்... :)
//

நன்றி தமிழ்!

said...

/தமிழ் பிரியன் said...
கவிதை ஆயில்யன் எழுதியதோ என்று ஓடோடி வந்தேன்.. அப்படியே காதல் கவிதை எழுதச் சொல்லத் தான்.. ;)
//

ஏன் அண்ணா உங்களுக்கு இம்புட்டு கொலவெறி?????

Anonymous said...

எங்கு பார்த்தாலும் வன்முறையும் தீவிரவாதமும் அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூக கேடுகளில் இருந்து நம் சந்ததிகளை காப்பாற்ற இந்த உலகில் அமைதி ஏற்படுத்தும் முயற்ச்சிகளில் நம் பங்கையும் அளிப்போம்.

said...

"துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ"

What a nice words....

a good article form a nice person for correct day....

said...

கவிதை ஆயில்யன் எழுதியதோ என்று ஓடோடி வந்தேன்.. அப்படியே காதல் கவிதை எழுதச் சொல்லத் தான்.. ;)

Reepityeee.....

Tamil anna adichi Adunga.... Ready count down start....1 2 3..

said...

super aayilya :)

said...

அமைதி அமைதியாய் வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

அமைதி, அடித்துப்பறிக்கவேண்டிய சாமான்.

பாடல் வரிகள் அருமை.

ஆனால் இது, எங்களை, எங்கள் மக்களின் போராட்டத்தை மிக நுணுக்கமாக கொச்சைப்படுத்திய படம்.

said...

2002ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்திற்கு பயங்கர “எதிர்பார்ப்புடன்” (காதலர் தினம் - தலைப்பில் வேறு முத்தம் இருக்கிறது) சென்று படம் ஆரம்பிக்கும் வரை ஏக கலாட்டா செய்தவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உறைந்து விட்டனர்.

அதன் பிறகு கனத்த மௌனம் தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் முழுத்திறமையும் வெளிவந்த கடைசி படம் என்று நினைக்கிறேன். (இதன் பின் ஆய்த எழுத்து, நியூ தவிர பிற படங்கள் சாதா தான்)

-0-

சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

-0-

பொருத்தமான நேரத்தில் பதிந்ததற்கு நன்றி

said...

பொருத்தமான வரிகள்...

said...

// மது... said...
எங்கு பார்த்தாலும் வன்முறையும் தீவிரவாதமும் அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூக கேடுகளில் இருந்து நம் சந்ததிகளை காப்பாற்ற இந்த உலகில் அமைதி ஏற்படுத்தும் முயற்ச்சிகளில் நம் பங்கையும் அளிப்போம்.
///

உங்களின் கருத்துக்களோடு இணைகிறேன்!

நன்றி அக்கா! :)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
"துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ"

What a nice words....

a good article form a nice person for correct day....
//

நன்றி சுடர்!

said...

//சென்ஷி said...
super aayilya :)
//

நன்றி குருவே :)

said...

//மு.மயூரன் said...
அமைதி அமைதியாய் வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

அமைதி, அடித்துப்பறிக்கவேண்டிய சாமான்.

பாடல் வரிகள் அருமை.

ஆனால் இது, எங்களை, எங்கள் மக்களின் போராட்டத்தை மிக நுணுக்கமாக கொச்சைப்படுத்திய படம்.
///
நன்றி மயூரன்!

said...

//புருனோ Bruno said...
2002ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்திற்கு பயங்கர “எதிர்பார்ப்புடன்” (காதலர் தினம் - தலைப்பில் வேறு முத்தம் இருக்கிறது) சென்று படம் ஆரம்பிக்கும் வரை ஏக கலாட்டா செய்தவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உறைந்து விட்டனர்.

அதன் பிறகு கனத்த மௌனம் தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் முழுத்திறமையும் வெளிவந்த கடைசி படம் என்று நினைக்கிறேன். (இதன் பின் ஆய்த எழுத்து, நியூ தவிர பிற படங்கள் சாதா தான்)

-0-

சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

-0-

பொருத்தமான நேரத்தில் பதிந்ததற்கு நன்றி
///

நன்றி டாக்டர்!

said...

//Divyapriya said...
பொருத்தமான வரிகள்...
//

நன்றி திவ்ஸ் :)

said...

கன்னத்தில் முத்தமிட்டால்ல எல்லா பாட்டும் எனக்கு பிடிக்கும் என்றாலும் அப்பப்போ வரும் தென்றல் மாதிரி, அப்பப்போ அந்த படத்துல வரும் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! :)) இப்பவும் என் ரிங்டோன் இந்த பாட்டுதான்..!! :))

said...

//ஸ்ரீமதி said...

அடடே! சூப்பரூ!

said...

அமைதி வேண்டும் என்கிற நம்பிக்கையோடேயே அகதிகளாகக் காத்திருக்கிறோம் காததூரங்களில்...
எங்கள் தேசம் விட்டு.எனக்குப் பிடித்த ரஹ்மானின் அருமையான பாடல்.நன்றி ஆயில்யன்.

said...

உலகம் அமைதி பெற நாம் அனைவரும் உறுதி கொள்வோம்...

valimoligiren

Anonymous said...

அமைதிக்காக அகதிகளாகிவிட்டோம்..

said...

super lyics:

//வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்
//

என்னமா பாடியிருப்பாரு ரஹ்மான். :-)