கனவு தொழிற்சாலையில்....?

1970களின் தொடக்கத்திலிருந்தே, நாடக உலக நடிகர்களின் சினிமாபிரவேசத்தின் மாயையை கண்டு அதை பற்றி, அவர்கள் வழியிலேயே தாமும் எப்படியாவது ஒரு பெரிய நடிகராக வேண்டுமென்ற விருப்பத்தில் (வெறி!?) ஊர் விட்டு உறவு விட்டு புது உலகு காணவந்து இன்னும் கூட தங்களின் கனவுகள் முழுதும் நிறைவேறாமல்,ஆனாலும் சினிமா உலகினை விட்டுச்செல்ல மனமில்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளம்!

காத்திருக்கும் வாய்ப்பு கிடைத்தால் சாதாரண மனிதர்களுக்கே கூட சில மணி நேர காத்திருப்புக்களுக்கு பிறகு, ஒரு இரட்டை நிலை எண்ணங்கள் தான் தோன்றும்! விட்டு விட்டு சென்றுவிடலாமா? விட்டு சென்ற சில நிமிடங்களில் நாம் எதற்காக காத்திருந்தோமோ அது நடைப்பெற்றால் பாதிப்பு நமக்குத்தானே? சரி இத்தனை நேரம் காத்திருந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு பொறுத்திருந்து பார்ப்போம் இதுதான் பொதுவாக எல்லோருடைய எண்ணங்களிலும் தோன்றும் இது பொதுவானது!

இதைப்போன்ற சூழ்நிலையே இப்படி சினிமா உலகில் விருப்பமுடன் நுழைந்து,ஆடம்பர வாழ்க்கையில் அதிசயித்து போன மனிதர்களுக்கு கண்டிப்பாய் அத்தனை எளிதாய் வெளியேறி வந்துவிட மனம் நினைக்காது! இருக்காது!

இந்த நடிகரும் கூட கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பே இளமையில் ஆரம்பித்த தன் நடிப்பு பணியினை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் எந்தவொரு பெரும் பலன் இன்றி...!

இவர்களை நினைத்து கவலைப்படுகின்ற அதே நேரத்தில் இவர்கள் தம் எண்ணங்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை நிஜமாக அதிசயிக்க வைக்கிறது!

இவற்றையெல்லாம் விட, படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் கூட, இவர்கள்தான் சரியாக பொருந்துவார்கள் வேறு ஆட்கள் வேண்டாம்! என்று தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவு தந்துக்கொண்டிருக்கும், முன்னேறிய நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் பல மடங்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!





கழுத்தில் துண்டுடன், அண்ணன் ராமசாமி வாழ்க!
கொட்டகை கட்டிய கோமான் ராமசாமி வாழ்க! என்ற வசனத்தில் ஆரம்பித்து, பொட்டீ வர்லைங்க என்று கூறும் வரையிலான 10 நிமிட நடிப்பிலும்,



அவுட் ஆப் போகஸில், ஆனால் எல்லோரையும் டக்கென்று சிரிக்கவைக்கும் மிகக்குறுகிய நகைச்சுவை காட்சியில்,வழி தேடிக்கொண்டிருக்கும் நபராய்

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

chinna paandi

pinneeddinga ;)

said...

ஆயில், குடித்துவிட்டு வேலியில் முட்டிக் கொள்ளுபவரை பல படங்களில் பார்த்திருக்கிறேன்.
மதுரை தமிழா? வசன உச்சரிப்பும் வித்தியாசமாய் இருக்கும். பொட்டி வந்தாச்சு கேரக்டரும்,
இவரும் ஒரு நிமிடம் வந்தாலும் நகைச்சுவை, வசன உச்சரிப்பு, மேனரிசம் என்று ஏதாவது
ஒன்றில் தங்கள் அடையாளங்களை பதித்து உள்ளார்கள். ஆனால் எங்க சித்தப்பா அப்படி எதுவுமே
இல்லை,பேசிய ஒரு வரி வசனங்களும் அனைத்தும் வெகு சாதாரணமானது.

said...

//இவர்கள் தம் எண்ணங்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை நிஜமாக அதிசயிக்க வைக்கிறது!//

அதே அதே!

இவர்களில் சிலர் இங்கே-

http://kappiguys.blogspot.com/2006/09/blog-post.html

http://kappiguys.blogspot.com/2006/11/2.html

said...

திரை உலகம் !!!!!!!!!!!!!!!

said...

சிறந்த பதிவு...

said...

குஜராத்தில் என் நண்பர் ஒருவர் எந்தப் படம் பார்க்கும் போதும் நடிகைகளின் பின்புலத்தில் ஆடும் துணைநடிகைஅக்ளில் அழகான ஒருவரையாவது அடையாளம் கண்டு சொல்லி ஜொள் விடுவார். (காம்படிஷன் இருக்காது என்பார்).

நீங்கள் வித்தியாசமாக. . .

பாராட்டுக்கள்.