இரவல் கவிதைகள் - வாரமலர்

என்னையுனக்கு
பிடித்ததாலல்ல...
எனக்குப்பிடித்தவன்
நீயென்பதால் தான்
காத்திருக்கிறேன்!

உன்னிடம்
என்னப்பிடித்ததென
சொல்லதெரியவில்லை
பிடிக்காததோ
எதுவுமேயில்லை!

காதல்
புரவியிலேறியவனே..
வாழ்விலேன்
துறவியென
திரிகிறாய்...?

இதுவோர்
காதற்மயக்கமாயிருக்கலாம்...
விளக்கிச்சொல்லவுமா
தயக்கமாயிருப்பது?

என் மனசுக்குள்
நீயோர்
தினுசாயிருப்பது
காதல் எனக்கு
புதுசென்பதால்தான்!

ஜன்னலில்
காதல் மின்னலாய்
வந்தாலும்,
வாழ்க்கை தென்றலாய்
வாவென்றைழ்க்கிறேன்..!

நீ
காதலானாலும்
கானலானலும்
உன் மேலான
என் காதலை
உன்னாலும் கூட
கையகப்படுத்த இயலாது...!நன்றி - வாரமலர்!

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நன்றாக உள்ளது :-)

said...

//என்னையுனக்கு
பிடித்ததாலல்ல...
எனக்குப்பிடித்தவன்
நீயென்பதால் தான்
காத்திருக்கிறேன்!//

இந்த வரிகள் மட்டும் அதிகமா பிடித்திருக்கிறது!!!

said...

அட நான்தான் FIRST!!!

said...

அருமை அண்ணா.,
காதல் நதி கடகத்தில் பாய்கிறது...

said...

அந்த பொண்ணு கடல்ல தற்கொலை பண்ண பாக்குது.. பாய்ந்து காப்பாத்துங்க ஆயில். ;-)

said...

கவிதை நல்லா இருக்கு :))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
அந்த பொண்ணு கடல்ல தற்கொலை பண்ண பாக்குது.. பாய்ந்து காப்பாத்துங்க ஆயில். ;-)//

யக்கா யூ ஆர் ரியலி கிரேட் அக்கா..!! :))

said...

நல்லா இருக்கே...

said...

:)

said...

அண்ணே! பத்திக்கிச்சு

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
அந்த பொண்ணு கடல்ல தற்கொலை பண்ண பாக்குது.. பாய்ந்து காப்பாத்துங்க ஆயில். ;-)//

நீங்க வேற, ஆயில்ஸைக் கண்டுதான் அந்தப் பக்கம் ஓடுது ;)

said...

:-)))...நல்லாருக்கு!

//நீங்க வேற, ஆயில்ஸைக் கண்டுதான் அந்தப் பக்கம் ஓடுது ;)//

என்ன பெரிய பாண்டி சொல்றது உண்மையா?!

said...

///கானா பிரபா said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
அந்த பொண்ணு கடல்ல தற்கொலை பண்ண பாக்குது.. பாய்ந்து காப்பாத்துங்க ஆயில். ;-)//

நீங்க வேற, ஆயில்ஸைக் கண்டுதான் அந்தப் பக்கம் ஓடுது ;)///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே