இந்த ஆயுதத்துடனான என் ஆட்டம் தொடங்கியது அனேகமாக 6வதோ அல்லது 7வதிலிருந்தோதான் இருக்கும் என நினைக்கிறேன்! ஏன்ன அப்பத்தான் நாங்க அன்னிய மொழி கற்க ஆரம்பித்திருந்தோம் அதாங்க ஆங்கிலம்ன்னு சொல்லுவாங்கள்ல, அட நம்ம இங்கீலீஸுங்க!
இரட்டை வரி நோட்டுல அழகா A B C D எழுத ஆரம்பிச்ச நேரம்தான் எனக்கும் பென்சிலுக்குமான முதல் தொடர்பு! அப்ப தெரியாது கடைசி வரைக்கும் நாந்தாண்டா உன்கூட கண்டினியூவா வரப்போறேன்னு அந்த பென்சில் சொல்லியிருக்கும்போல!
அதன் பின்னர் எல்லா வகுப்புகளிலும் கண்டிப்பாய் பென்சில் இருக்கவேண்டும் என்று உத்தரவு போட்ட ஆசிரியர்கள்!
ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))
தமிழ் மனப்பாட பாடல்கள் படித்துக்கொண்டே எழுதிப்பழக,
கணித வகுப்புகளில் கண்டபடி கிறுக்கி கணக்கிட.
அறிவியலில் படம் வரைந்து பாகங்களை குறிக்க ( படத்தை வரைஞ்சுட்டு பாகத்தை வேற இடத்துல குறிச்சு வைச்சதால பொளோர்ன்னு அறை கொடுத்த அந்த சயின்ஸ் வாத்தியை ( கோவம்!) மறக்கமுடியுமா?)
வரலாற்றில், வரவே பயப்படும் காவிரியிலிருந்து கண்ட ஆறுகளையும் தமிழ்நாட்டுக்குள் ஓடவிட்ட நாட்கள்! ( இந்தியா மேப்ல ஆறுகளை குறிங்கடான்னு சொன்னதுக்கு எல்லா ஆறையும் அப்போ எனக்கு தெரிஞ்ச நாடான தமிழ்நாட்டுக்குள்ளையே வரைஞ்சு வைச்சிருந்தேன்ல!)
இப்படியாக இன்ப துன்பமனைத்தையும் அள்ளி நோட்டுப்புக்கில் தெளிக்க காரணமாயிருந்த பென்சில்லுக்கு அடுத்த புரொமோஷன் படம் வரையறது!
பாலிடெக்னிக் போனா அங்கயும் முதல்லேர்ந்து விதவிதமாக திரும்பவும் அன்னிய மொழியினை அலங்கரிக்க சொல்லி வற்புறுத்திய அந்த வாத்தி (கோவம்!)
சரின்னு பொறுத்துக்கிட்டுத்தான் அந்த வேலையும் செஞ்சோம்! ஆனா பாருங்க ஒரு நாள் அந்த வாத்தியாரு வன்முறையில என் பென்சிலை ஈடுபடுத்த வைச்சுட்டாரு!
தொடரும்....!
(இப்படித்தான் போட்டு அடுத்த பாகத்துல அதிக ஆர்வத்தோட சொல்லலாம்ம்னு நினைச்சேன் பட்..! ரெண்டு வரிக்கெல்லாம் தனியா ஒரு பதிவு போட்டா அடி விழும்னு அண்ணன்களெல்லாம் பயமுறுத்துனதால இப்பவே சொல்லிக்கிறேன்!)
ஒரு நாள் அதே டிராயிங்க் கிளாஸ் அதே வாத்தி! பட் எங்களுக்குள்ள ரெண்டு பேர்கிட்ட பென்சில் மிஸ்ஸிங்க்! என்ன பண்றதுன்னு ஒரே ரோசனை ரோசனையா வருது! சரி சமாளிப்போம்ன்னு ப்ரெண்டுகளுக்கிட்ட இருந்த பென்சிலை எடுத்து உடைச்சிட்டோம்! ஆனா எந்த நாயுமே ஷார்ப்னர் வைச்சிருல்ல! (கிளாஸ்ல நாங்க மொத்தமே 12 பேருதாம்ல) சரி திரும்பவும் சமாளிப்போம்னு கொஞ்சமா கடிச்சி கருப்பு கிராபைட் தெரியுற அளவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு சும்மா பாவ்லா காட்டிக்கிட்டு உக்காந்திருக்கோம்!
ஆனா இதை கரெக்ட்டா கண்டுபிடிச்சு வந்தாரு எங்ககிட்ட வாத்தியாரு (எப்படித்தான் கண்டுபிடிப்பாய்ங்களோ!)
வாத்தி:- என்னாடா இது?
கோரஸ்:- சார் பென்சில் சார்!
வாத்தி:- ஒ.கே எங்க டிப்பை காணும்?
கோரஸ்:- வரையலாம் சார்!
வாத்தி:- இங்க கொடு! வாங்கி பார்த்துட்டு,அவரு பையில இருந்து ஒரு பென்சில எடுத்து காட்டி இப்படி இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!

12 பேர் கமெண்டிட்டாங்க:
இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//
kolai veri vaathiyarappaa ;-)
me the first !
//கானா பிரபா said...

//
ஆமாம் !
ஆமாம்!
கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நாங்களும் கூட அந்த பென்சில நல்லா அழகா கடிச்சு வைச்சிருந்திருக்கலாம்ன்னு தோணுது :))))
//தமிழன்... said...
me the first !
///
1 செகண்ட்ல மிஸ்ஸாகிட்டீங்க
:)))))))
/ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))/
நம்புறோம் நம்புறோம்...:))
:( அய்யோ
இப்ப பொண்ணோட பள்ளிக்கூடத்துல பசங்க சண்டைக்கு அதான் ஆயுதமாம்...எதாச்சும் கம்ப்ளெய்ண்ட் செய்த குத்திடுவேன்னு ..பயம்மா இருக்கு..
// குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//
லேசா ரத்தம் வருதானு டெஸ்ட் பன்ன தானே குத்திப் பார்த்தார். ஏதோ விரல வெட்டுன மாறி பேசுறிங்க... :))))
அவரு குத்தினது உங்களுக்கு சந்தோஷம் தான் போல.. பென்சில்னு தலைப்பை போட்டு லக்கி லுக்கின் ஸ்மைலி லோகோ போட்டிருகிங்க... கோப்பி ரைட்ஸ் பர்மிஸன் வாங்கியாச்சா...
இதுவே இந்தக் காலத்தில நடந்திருந்தால் மீடியாவைக் கூட்டி கையில ரத்தம் வந்த புள்ளிய போட்டோ புடிக்க வச்சு, பேப்பர்ல டிவில பேட்டிய கொடுத்து வாத்திய உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாம். இல்லையா ஆயில்யன்? ஹெட் மாஸ்டரையும் நடந்ததற்கு வருந்துகிறேன், ஆசிரியர் 6 வாரம் சஸ்பென்ஸ்...என்றெல்லாம் மன்னிப்புக் கேட்டு பேட்டி கொடுக்க வச்சு பெரிய ஹீரோவாயிருக்கலாம் நீங்க. [அப்புறம் மத்த வாத்தியெல்லாம் கூட்டணி அமைத்து ஜீரோ ஜீரோவா கொடுத்தா நீங்களா உதவிக்கு வருவீங்க..னு நீங்க கேட்பதற்குள்... ஜூட்:)!]
//தமிழன்... said...
/ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))/
நம்புறோம் நம்புறோம்...:))
//
அப்பாடா ஒருத்தராச்சும் நம்புறாரே! :))
//கயல்விழி முத்துலெட்சுமி said...
:( அய்யோ
இப்ப பொண்ணோட பள்ளிக்கூடத்துல பசங்க சண்டைக்கு அதான் ஆயுதமாம்...எதாச்சும் கம்ப்ளெய்ண்ட் செய்த குத்திடுவேன்னு ..பயம்மா இருக்கு..
//
ஒரு தாயின் தவிப்பு ! :(
கவலைப்படாதீங்க அக்கா அப்படியெல்லாம் நடக்காது!
// VIKNESHWARAN said...
// குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//
லேசா ரத்தம் வருதானு டெஸ்ட் பன்ன தானே குத்திப் பார்த்தார். ஏதோ விரல வெட்டுன மாறி பேசுறிங்க... :))))
//
ஒ அப்ப விரல் வெட்டுற வாத்திங்கெல்லாம் கூட இருக்காங்களா?
நல்லவேளை எங்க வாத்தி ரவுடியிஸம் பார்ட்டீ! அனேகமா நீங்க சொல்லுறவங்க டெரரிஸம் பார்ட்டீங்க! :))))
//
அவரு குத்தினது உங்களுக்கு சந்தோஷம் தான் போல.. பென்சில்னு தலைப்பை போட்டு லக்கி லுக்கின் ஸ்மைலி லோகோ போட்டிருகிங்க... கோப்பி ரைட்ஸ் பர்மிஸன் வாங்கியாச்சா...
//
பர்மிஷனா!????
அவ்வ்வ்வ்வ்வ்வ் (இப்படித்தான் லக்கி அண்ணன்கிட்ட அழுது எஸ்ஸாகிடுவேன்ல்ல!)
//ராமலக்ஷ்மி said...
இதுவே இந்தக் காலத்தில நடந்திருந்தால் மீடியாவைக் கூட்டி கையில ரத்தம் வந்த புள்ளிய போட்டோ புடிக்க வச்சு, பேப்பர்ல டிவில பேட்டிய கொடுத்து வாத்திய உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாம். இல்லையா ஆயில்யன்? ஹெட் மாஸ்டரையும் நடந்ததற்கு வருந்துகிறேன், ஆசிரியர் 6 வாரம் சஸ்பென்ஸ்...என்றெல்லாம் மன்னிப்புக் கேட்டு பேட்டி கொடுக்க வச்சு பெரிய ஹீரோவாயிருக்கலாம் நீங்க. [அப்புறம் மத்த வாத்தியெல்லாம் கூட்டணி அமைத்து ஜீரோ ஜீரோவா கொடுத்தா நீங்களா உதவிக்கு வருவீங்க..னு நீங்க கேட்பதற்குள்... ஜூட்:)!]
//
கண்டிப்பா ஒரு ஸ்ட்ரைக்கு கடை அடைப்பு முடிஞ்சா ஒரு பஸ் கொளுத்துதல் அல்லது அட்லீஸ்ட் வாத்தியாரோட மோட்டர் சைக்கிளையாவது கொள்ளுத்திவுடமாட்டோமா? (டெரர்ரால்ல ஆகியிருப்போம்!)
பட் நான் நல்ல பையனாவே இருக்கிறேனா அதான் அப்ப செஞ்சதை தான் இப்பவும் செஞ்சுருப்பேன்! (ரத்ததுக்கு கட்டு போட்டுட்டு ஒரு நாலு நாள் ஊரைச்சுத்தி வந்திருப்பேன்!)
Post a Comment