குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

ஜூன் 12 - இன்று குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

இளமை காலங்களின் ருசியைக் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது ஒரு குறிப்பிட்ட சதவிகித சிறுவர் இளையோர் பட்டாளம்!

அவர்களை மீட்க முயற்சிக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டுவரும் வகையில் இன்று ஜூன் 12 - குழநதை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

நம் கண் எதிர்லேயே எத்தனையோ சிறுவர் சிறுமியர் வேலை செய்துவருவதை நம்மால் காண
முடிந்தாலும் கண்டும் காணாமலே இருந்துவிடுகிறோம்!

இனியும் இது போன்று இருக்காமல் நம்மால் ஆன முயற்சிகளாக இது போன்ற குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்திருக்கும் கடைகளை, நிறுவனங்களை, கம்பெனிகளை, பற்றி அரசு தொழிலாளார் துறைக்கோ அல்லது உள்ளூரில் உள்ள தன்னார்வ சேவை அமைப்புக்களுக்கோ தகவல் கொடுத்தும் கூட உதவலாம்!

இது எதற்கு தேவையில்லாத வேலை என்று நினைப்பவர்களுக்கும் கூட ஒரு யோசனை! பார்க்கும் குழந்தை போன்று உங்களின் குழந்தையும் ஆனால் என்னவாகும் என்று ஒரு முறை யோசித்து செல்லுங்கள் உங்கள் வழிப்பார்த்து....!


அரசின் முயற்சிகளில் கல்வி முறையில் சீர்திருத்தம்!கல்வி இலவசமாக கிடைக்கப்பெறுதல், போன்றவற்றில் அரசின் ஈடுபாடு தீவிரமடைவதன் மூலமே இந்த சோகங்களிலிருந்து குழந்தைகளை சிறுவர்களை காப்பாற்ற முடியும்! பார்ப்போம் செய்வார்களா என்று எதிர்பார்ப்போம்!




என்னுடனே சில வகுப்புக்காலங்கள் படித்து, பல்வேறு சூழ்நிலைகளுக்கு இலக்காகி பள்ளி படிப்பினை பாதியில் விட்டுச்சென்ற,முகம் மறந்த நண்பர்களை இன்று உணர்வுகளால் கொஞ்சம் நினைத்துப்பார்க்கிறேன்!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//இனியும் இது போன்று இருக்காமல் நம்மால் ஆன முயற்சிகளாக இது போன்ற குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்திருக்கும் கடைகளை, நிறுவனங்களை, கம்பெனிகளை, பற்றி அரசு தொழிலாளார் துறைக்கோ அல்லது உள்ளூரில் உள்ள தன்னார்வ சேவை அமைப்புக்களுக்கோ தகவல் கொடுத்தும் கூட உதவலாம்!//

நல்ல யோசனை.. குறைந்த பட்சம் அந்தக் கடைகளை புறக்கணிக்கலாம்!

said...

நல்ல பதிவு ஆயில்யன் தரம்...