சலவைசோடா (வாஷிங் சோடப்பூ!) பத்தி உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலும் அறிந்திருக்ககூடும் தெரிந்திருக்கக்கூடும் சில பல சமயங்களில் பயன்படுத்தியும் இருக்கக்கூடும்! துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் பவுடர் நிர்மா வரும் காலத்திலிருந்து, வாஷிங்பவுடர் நிர்மா வந்த காலத்திலும், கூட பலரும் இதை பயன்படுத்தியே துணிகளை துவைத்து பழகினார்கள்!
சூடுபடுத்திய நீரில் சலவை சோடாவினை போட்டு பிறகு துணிகளை அதில் சுமாராய் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து பின்னர் துவைப்பார்கள்! இப்பொழுதும் கூட கடைகளி கிடைக்கிறது மற்ற வாஷிங் பவுடர்களைவிட மிக மிக விலை குறைவாக....
*****
இட்லி,பூரி,மற்றும் பஜ்ஜி வகைகளுக்கும் மற்றும் அதிக அளவு பயன்பாட்டில் குறைந்த அளவாக சமையலில் சேர்க்கப்படும் பொருள் சமையல் சோடா அல்லது ஆப்ப சோடா! அதிகம் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பொருளும் கூட!
சமையல் அறையில் தற்பொழுது பயன்படுத்தப்படும் பல வகை ( சுத்தம் செய்வதற்கு, வாசனைப்பொருட்கள் ) கெமிக்கல் லிக்விட்களுக்கும் மாற்றாக உபயோகிக்க கூடிய பொருள் இதுவாகும்!
*****
ஒவ்வொரு முறையும் கடைத்தெருவுக்கு செல்லும் அம்மாவிடம் வரும்போது கீரை விதைகள், வெண்டைக்காய் விதைகள் கத்தரிக்காய் விதைகள் வாங்கி வாம்மா! என்று கோரிக்கை வைக்கும் எத்தனையோ பிள்ளைகளுள் ஒருவராக கூட நீங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடும்! ஆனால் அதிலெல்லாம் ஆர்வம் இருந்தது சிறுவயதில், என்று மெல்லிய புன்னகையுடன் மலரும் நினைவுகள்தானே இப்போது!?
இப்பொழுதும் கூட அதே போன்ற கடைகள் இருக்கின்றன ஆனால் யாருடைய ஆதரவும் அதிகமின்றி?!
ஏன் நாம் அந்தளவுக்கு பெரிய மனிதர்களாக மாறிபோய்விட்டோமா? இனிமேலும் நம்மால் அது போன்று விதை விதைத்து காய்கனிகளை அல்லது மரங்களை மலரச்செய்ய முடியாதா???
வருடத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள் திருமண நாள் என வரும் நாட்களில் ஒரு மரம் நட்டு வைத்தால் நலமாக இருக்குமே!
*****
வாழைக்காய் தோலினை தனியே சீவி வைத்துக்கொள்ளுதல்,வெங்காயதோலினை உறித்து தனியே வைத்துக்கொள்ளுதல், இதே போன்று எடுத்து வைத்த தோல்கள் அனைத்தினையும் கொல்லையில் ஏதேனும் செடிகளின் வரப்புகளுக்குள் போட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு வந்த பாட்டிகளின் வாழ்க்கையினை நாம் பழக மறந்தது ஏனோ?
*****
வயசானவங்க வீட்ல இருக்காங்களா எதுனா பொருள் வெளியே வீசப்போறப்ப தடுக்கறாங்களா? கரெக்ட்தான் அவங்க அனுபவத்தில உங்களுக்கு சொல்ல வர்ற விஷயத்தை நீங்க எப்பத்தான் தெரிஞ்சுக்கப்போறீங்களோ!?? முடிஞ்சா திரும்ப பயன்படுத்தற மாதிரி இருக்கற பொருடகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்களேன்!
*****
இன்று உலக சுற்றுசூழல் தினம்!
சுற்றுசூழல் பத்தி கத்துவோம்! கத்துவோம்! கத்திக்கிட்டே இருப்போம்!! என்றாவது ஒரு நாள் எவர் காதிலாவது எங்களின் சத்தம் வேதமாய் ஒலிக்க தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில்.....!
சுற்றுசூழல் தின - கதம்பம்
# ஆயில்யன்
Labels: இயற்கை
Subscribe to:
Post Comments (Atom)
8 பேர் கமெண்டிட்டாங்க:
ஆப்ப சோடா நல்லதில்லனு சொல்றாங்களே அது நிஜமா ஆயில்யன்?
மரப்பரிசு நல்லா இருக்கு. ஆசையா வாங்கிக் கிட்டா நல்லதுதான்.:)
இது மாட்டரு...
இத எழுதின ஆயில்யனுக்கு இந்த வார ஷொட்டு குடுக்கச்சொல்லணும் ஞாநி கிட்ட
//வல்லிசிம்ஹன் said...
ஆப்ப சோடா நல்லதில்லனு சொல்றாங்களே அது நிஜமா ஆயில்யன்?
மரப்பரிசு நல்லா இருக்கு. ஆசையா வாங்கிக் கிட்டா நல்லதுதான்.:)
///
வணக்கம் அம்மா!
ஆப்ப சோடா உணவில் உப்பு போன்று பயன்படுத்தினால் நல்லதாம்!
அது வீடுகளில் மேலும் பல தேவைகளுக்கும் ஆப்ப சோடாவினை பயன்படுத்தலாமாம்! இங்கே போய் பாருங்களேன்
நன்றிகளுடன்....!
ஸ்ரேயா கோஷல் மன்றம் வச்சதும் வச்சாங்க...
நெம்ப நல்ல விசயமெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பு
நல்லா இருங்கடெ:)
ஆயில்யன்...said...
//வணக்கம் அம்மா!
///ஆப்ப சோடா உணவில் உப்பு போன்று பயன்படுத்தினால் நல்லதாம்!
அது வீடுகளில் மேலும் பல தேவைகளுக்கும் ஆப்ப சோடாவினை பயன்படுத்தலாமாம்! இங்கே போய் பாருங்களேன்
நன்றிகளுடன்....!///
நாங்க புரூவ் இல்லாம எழுத மாட்டமுங்கோ...அப்புறம் தலைவி பேரு கெட்டுடுமில்ல....
//தமிழன்... said...
இத எழுதின ஆயில்யனுக்கு இந்த வார ஷொட்டு குடுக்கச்சொல்லணும் ஞாநி கிட்ட
///
மோதிரக்கையால குட்டு அப்படின்னு சொன்னாக்கூட சந்தோஷமா இருக்கும் (ஏன்னா மோதிரத்தை புடுங்கிக்கிட்டு எஸ்கேப் ஆகிடலாம்ல)
நன்றி தமிழன் :)))))
///மோதிரக்கையால குட்டு அப்படின்னு சொன்னாக்கூட சந்தோஷமா இருக்கும் (ஏன்னா மோதிரத்தை புடுங்கிக்கிட்டு எஸ்கேப் ஆகிடலாம்ல)
நன்றி தமிழன் :)))))///
விரமாத்தான்யா இருக்காங்க...:)
Post a Comment