ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் ஆரம்பிக்கும் முதல் தமிழ் பாடவகுப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடலினை படித்து ஒப்பித்து பின் எழுதிகாட்டவேண்டும்!
இது எங்க தமிழாசிரியர் போட்டிருந்த ரூல்ஸ்!
புத்தகத்தினை முன் பக்கம் வைத்துத்துக்கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து விழுந்து விழுந்து படித்த பாடல்களில் ரொம்பவும் அதிகமாகவே படித்த பாடல் இது!
காரணம்:
ஆசிரியர் குரல்: டேய்....! இது நம்ம பக்கத்து ஊர்ல நடந்த விஷயம்டா! நாளைக்கு நீங்க எருமை மாடாட்டம் வளர்ந்து நிக்கும்போது யாராவது கேட்டாங்கன்னா சொல்ல தெரியணும்ல அதனால ஒழுங்கா நல்லா கரீக்டா படிச்சு படிச்சு வைச்சுக்கோங்கடா..!
அதனாலேயே இந்த சிலப்பதிகாரமும் கொஞ்சம் மணிமேகலையும் நன்றாகவே மனப்பாடம் செய்து வைத்திருந்தோம் அப்போது!
சும்மா லேசா எந்த பையனிடமும் லேசா தட்டி தேரா மன்னா அப்படின்னு சொன்னாலே போதும் பெண்ணணாங்கேல முடிச்சுட்டுத்தான் மூச்சு விடுவானுங்க! அந்தளவுக்கு உள்ளுக்குள்ள கொண்டுப்போயாச்சு! ( பின்ன தூக்கத்தில எந்திரிச்சு கேட்டாலும் சொல்லணும்டான்னு வேற ஆசிரியர் சொல்லியிருக்காரே!)
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
ஆனா பாருங்க..! இன்னிக்கு வரைக்கும் இருக்கற ஒரே சந்தேகம்! ஏன் பரீட்சைக்கு, இருக்கற மத்த வரிகளையெல்லாம் விட்டுப்புட்டு சரியாக முடியறதுக்கு முன்னாடி உள்ள பாடல் வரிகள் அதுவும் குறிப்பாக இந்த வரிகளை மட்டும் எடுத்து படிச்சுட்டு வந்தோம்னு தெரியலப்பா?

11 பேர் கமெண்டிட்டாங்க:
என் அண்ணனும் கணவரும் இந்த பாட்டை மூச்சுவிடாம இப்பக்கூட சொல்லுவாங்க.. எனக்கெல்லாம் அன்னைக்கு படிச்சு அன்னைக்கு பரிட்சை எழுதி முடிச்சதும் மறந்துடும் அபார சக்தி..
அப்போ படிச்சதை இப்பவும் நினைவில் வைத்திருந்து எழுதியுள்ளீர்களே அதற்காகவே தங்களைப் பலமுறை பாராட்டலாம். வாழ்த்துக்கள்.
//கயல்விழி முத்துலெட்சுமி said...
என் அண்ணனும் கணவரும் இந்த பாட்டை மூச்சுவிடாம இப்பக்கூட சொல்லுவாங்க.. எனக்கெல்லாம் அன்னைக்கு படிச்சு அன்னைக்கு பரிட்சை எழுதி முடிச்சதும் மறந்துடும் அபார சக்தி..
/
:)))
.//அகரம்.அமுதா said...
அப்போ படிச்சதை இப்பவும் நினைவில் வைத்திருந்து எழுதியுள்ளீர்களே அதற்காகவே தங்களைப் பலமுறை பாராட்டலாம். வாழ்த்துக்கள்.
//
நிறைய பேரின் உதவிகளும் கூட உண்டு பதிவில், பதிவுலகில் :)
நாமலும் மறதி கேஸ் தான் அதனால் தேரா மன்னா செப்புவ துடையேன் மட்டும் இன்னும் நினைவில் இருக்கு :) இந்த வரிக்கு தேர்வில் பாஸாகாத மன்னன் என்று யாரோ விளக்கியது மட்டும் ஞாபகம் உள்ளது. :)))))
//தமிழ் பிரியன் said...
நாமலும் மறதி கேஸ் தான் அதனால் தேரா மன்னா செப்புவ துடையேன் மட்டும் இன்னும் நினைவில் இருக்கு :) இந்த வரிக்கு தேர்வில் பாஸாகாத மன்னன் என்று யாரோ விளக்கியது மட்டும் ஞாபகம் உள்ளது. :)))))//
அட ஆமாங்க தமிழ் பிரியன்
எங்க தமிழ்வாத்தியாரே கூட ஒரு சமயம் காலாண்டு பரீட்சையில திருத்தின பேப்பரை வைச்சுக்கிட்டு ஒவ்வொருத்தனா கூப்பிட்டு கலாய்ச்சதுல மாட்டுன ஒருத்தன் எழுதியிருந்தது கூட இப்படிதான் ”தேறா மன்னா! “
:))
இந்த பாட்டு, அப்பறம் தளபதில வருமே ஒரு பாட்டு இதெல்லாம் மனப்பாடம்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் கானப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
//சும்மா லேசா எந்த பையனிடமும் லேசா தட்டி தேரா மன்னா அப்படின்னு சொன்னாலே போதும் பெண்ணணாங்கேல முடிச்சுட்டுத்தான் மூச்சு விடுவானுங்க!//
லிஸ்ட்ல நானும் உண்டு.
//Ramya Ramani said...

நீங்கள் சொல்றதும் கரெக்ட்தான் என்னதான் மனப்பாடம் பண்ணினாலும் ஏறாத பாட்டு தளபதியில வந்த பொழுது மட்டும் அப்படி அழகா மனப்பாடம் ஆச்சுங்க!
//நிஜமா நல்லவன் said...
//சும்மா லேசா எந்த பையனிடமும் லேசா தட்டி தேரா மன்னா அப்படின்னு சொன்னாலே போதும் பெண்ணணாங்கேல முடிச்சுட்டுத்தான் மூச்சு விடுவானுங்க!//
லிஸ்ட்ல நானும் உண்டு.
///
ஒ.கேய் சேர்த்துட்டேன் :))
பின்ன schoolla மிஸ் class எடுக்க ஆரம்பிச்சததுதான் தாமதம்..class-ஏ chorusla பாடினத கேட்ட மிஸ் கண்ல தண்ணி..பாவிங்களா 5,6 வருஷம் முன்னாடி வந்த cinema பாட்டு தெரியுது, நேத்து சொல்லி கொடுத்த செய்யுள் தெரியலையே பீலிங்க்ஸ் :(
Post a Comment