கொஞ்சம் தமிழ்!
கொஞ்சம் கொல்ட்டிஸ்!
கொஞ்சம் இலங்கை சிங்களம்!
கொஞ்சம் இலங்கை தமிழ்!
நிறைய மல்லுக்களோடான...!
எனது தசாவதார திரைப்படம் பார்க்கும் கனவு நனவாகியது -நேற்றிரவு !
படம் பற்றிய பதிவுகள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து துவைச்சு காயப்போட்டுவிட்டு போய்விட்டன (சில காயப்படுத்தியும் போய்விட்டன!)அதனால அதையெல்லாம் திரும்பவும் இங்க பண்ண வேணாம்!
படத்தில் பிடித்தது :-
1.அறிமுக காட்சியில் அசத்தும் ஒளிப்பதிவாளர்!
2.ஆக்ரோஷமாக அறிமுகமாகும் கமல்.
3. முகுந்தா முகுந்தாவில்,மிருதங்கத்திற்கு வலிக்காமல் வாசிக்கும் கிழவி கமலின் கிரியேடிவிட்டிகளாக அசத்தும் பொம்மலாட்டங்கள்!
4. பல்ராம் நாயுடு கேரக்டர் செட்டானதுமே கதைக்களத்திலிருந்து கண்டிப்பாய் ஒரு தைரியம் கிடைத்திருக்கும், தொடங்கலாம் படப்பிடிப்பை என்று...! - கலக்கல் கேரக்டர்!
5.உதிரம் சொட்டும் உழைப்பில் கமல்!
6.சுனாமி அழிவுக்குப்பிறகு போர்க்கால நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை படத்தில் காட்சிப்படுத்தியது நல்லவிஷயம்! ( அதே நேரத்தில் நானும் அரசு ஊழியனாக போர்க்கால நடவடிக்கைகளில் பங்குகொண்டதன் ஞாபகங்களோடு இந்த செய்தி!)
7.ஓ ஓ சனம் ஓ சனம் - பாடல்கள் இல்லாத நீண்ட இடைவெளிக்குபபிறகு வரும்போது கொஞ்சம் நல்லா இருக்குன்னு நினைக்க தோணுது! ( வழக்கமான கமல் டான்ஸ்!)
8. ஒவ்வொரு கேரக்டர்களுமே நானே ஒவ்வொருமுறையும் உறுதிசெய்துக்கொண்டு இவரும் கமல்தான் என்று பக்கத்து சீட்டுக்கு சொல்லவேண்டிய சூழல் (அந்த பன்னு மாதிரி இருக்கும் ரப்பர் மேக்கப் வைச்சுத்தான் நானே கண்டுபிடிச்சேனாக்கும்!
9.மிகக்கவனமாய் காட்சிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவங்கள்! (சிதம்பரம் பஸ்ஸை புடிச்சுக்கிட்டேத்தான் காய்கறி வண்டியில போறாங்கங்ன்னா பாருங்களேன்!)
10.கமலுக்கே கிடைக்காத வாய்ப்பு கே.எஸ் ரவிக்குமாருக்கு கிடைத்தும் கூட (அதாங்க வெளிநாட்டு நடன அழகிகள்) அவர் பாடகர் மாதிரி மைக் வைச்சுக்கிட்டு தனியா ஆடறாருங்க!
11.Nacl ஒரு பாம் போட்டு அந்த வைரஸ கெளப்பிடலாமான்னு புஷ் கமல் கேட்க அதற்கு நக்கலாய் சிரிக்கும் அந்த உதவியாளர் சும்மா நச்சுன்னு இருக்கு!
12.கருப்பு வைரமாய் மின்னும் கமல் சூப்பர்! - ஆனாலும் கூட சில தேவையற்ற வசனங்களும் கூட உண்டு!
இவ்ளோ உன்னிப்பா பார்த்தேனாக்கும்!
அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல! - இது போன்றே நிறைய காட்சிகள் - லாஜிக் இல்லாத மேஜிக்காக!
ரத்ததின் ரத்தமாக போறீங்களேன்னு? கேள்வி கேட்க்கும் கமல்,அதற்கு எங்க என்னது? என்று பதில் கேள்வி சொல்லும் கமல் (ஆஹா பீதியை கிளப்புறாங்கப்பா!)
யோசிச்சிக்கிட்டிருக்கற விஷயம்!
மணல் மாஃபியா பற்றிய செய்திகள் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கும் காட்சிகளை,படத்தினை நம் முதல்வர் பார்க்கும்போது என்ன தோணும் அவருக்கு? ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது இந்த அதிரும் செய்தியினை அறிய செய்யும் எனில் அதுவும் படத்துக்கு கிடைத்த ஒரு வெற்றித்தான்!
சோகம்!
come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு! கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்!
மொத்தத்தில்....!
படம் பற்றிய தனது எண்ணங்களை ஆர்வமுடன் பகிர்ந்துக்கொள்ளும் தலைவரின் இந்த ஆர்வத்தோடு படத்தினை சென்று பாருங்கள்!
வீழ்வது யாராகினும்!
வாழ்வது நாடாகட்டும்!
உடல் பூமிக்கே போகட்டும்
தமிழ் பூமியை ஆளட்டும்!!!
(ஹலோ மக்களே! எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சொல்லிக்கிறேன்ப்பா நானும் பிளாக்கர்தான்! நானும் பிளாக்கர்த்தான்!)
தசாவதாரம் @ கத்தார்!
# ஆயில்யன்
Subscribe to:
Post Comments (Atom)
13 பேர் கமெண்டிட்டாங்க:
//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு! கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்!//
அய்ய்ய்!ஆசையை பாரு

ஆச தோச அப்பளம் வட
ஆயில்ஸ்
முடிவா என்னதான் சொல்ல வர்ரீங்?
தசாவதார விமர்சனத்தில் கொஞ்சம் கூட மசாலா இல்லை ஆயில்யன்... அந்த ஜாஸ்மீன் அக்கா, கோதை, ஆண்டாள் இவங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்... :))
///இவ்ளோ உன்னிப்பா பார்த்தேனாக்கும்!/// விமர்சனம் எழுதனும்ன்னே போன மாதிரி இருக்கு... :)))))
///யோசிச்சிக்கிட்டிருக்கற விஷயம்!///
இதுதான் ஆயில்யன் டச்...குட்
அப்படி இப்பாடின்னு அடிச்சு புடிச்சு படம் பார்த்துட்டீங்க. புரியுது. புரியுது. :-)
///அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல!//
ஒரு சொதப்பலும் இல்லைங்க. நெட்டை கமல் கலிபுல்லா தான் அவருக்கு ஒரு போன் ஏற்பாடு பண்ணித் தறார். போன் எப்படி கிடைத்தது என்பதில் தகறாரு இல்லை :)
//கானா பிரபா said...
//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு! கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்!//
ஆச தோச அப்பளம் வட
ஆயில்ஸ்
முடிவா என்னதான் சொல்ல வர்ரீங்?
///
பார்க்கலாம் :)
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு! கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்!//
அய்ய்ய்!ஆசையை பாரு
//
எங்க அதான் பார்க்க முடியலையே :((
//தமிழ் பிரியன் said...
தசாவதார விமர்சனத்தில் கொஞ்சம் கூட மசாலா இல்லை ஆயில்யன்... அந்த ஜாஸ்மீன் அக்கா, கோதை, ஆண்டாள் இவங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்... :))
//
நானு சைவம் - இதுல எங்க மசாலா தூவுறது :)
//தமிழ் பிரியன் said...
///இவ்ளோ உன்னிப்பா பார்த்தேனாக்கும்!/// விமர்சனம் எழுதனும்ன்னே போன மாதிரி இருக்கு... :)))))
//
கண்டுபிடிச்சிட்டீங்களா ????
//மை ஃபிரண்ட் ::. said...
அப்படி இப்பாடின்னு அடிச்சு புடிச்சு படம் பார்த்துட்டீங்க. புரியுது. புரியுது. :-)
//
:)))
//Madhusudhanan Ramanujam said...
///அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல!//
ஒரு சொதப்பலும் இல்லைங்க. நெட்டை கமல் கலிபுல்லா தான் அவருக்கு ஒரு போன் ஏற்பாடு பண்ணித் தறார். போன் எப்படி கிடைத்தது என்பதில் தகறாரு இல்லை :)
//
மனசுக்குள்ளயே வைச்சிருக்கலாம் போல :)) - நானும்
Post a Comment