ஆன்ம அனுபூதியும் - சிவாஜி வாயில ஜிலேபியும்!

சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான்? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதிலதான் இருக்க முடியும்.

பயன்நோக்கு வாதத்தின்படி இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால்.மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள் ஏன் அவறை நாடி போகக்கூடாது?

புலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியை தருவதால் அவர்கள் அவற்றை நாடிப்போகிறார்கள்! ஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல்,அவற்றை விட உயர்ந்த இன்பங்களை நாடிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்.

உண்பதிலும் குடிப்பதிலும்தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது. எல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து வானத்திலுள்ள நடசத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது. அவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம்!

ஆனால் விஞ்ஞானி அதைப்பார்த்து, ‘அன்புள்ள நாயே நீ அனுபவிக்கும் புலனிப்பத்தை பற்றி மட்டுமே உனக்குத்தெரியும் அதற்கு அப்பாலுள்ள இன்பத்தை பற்றி உனக்குதெரியாது ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால் அதே உரிமை என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது! என்று கூறுகிறான்.

நம்முடைய சிந்தனையை போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாக கொள்கிறோம் இது நாம் செய்யும் தவறு!

உங்களை பொறுத்தவரையில் புலனின்பமே மிகப்பெரிய இன்பமாக இருக்கலாம் ஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.நீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்!

நன்றி - ஞான யோகம்


சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்குதே என நினைக்கிறவங்க நினைக்கட்டும்! ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு என் நன்றிகள்:-)

சிவாஜி வாயில ஜிலேபி இது மாதிரி ஒரு டைட்டில் கொடுத்து தொடர் பதிவுகளுக்கு என்னை அழைத்த ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு எனது நன்றிகளுடன்....

நான் அழைக்கும் பதிவுலக உறவுகள்

கப்பியண்ணன்

சென்ஷி அண்ணன்

தமிழ் பிரியண்ணன்

வாங்க வந்து இந்த தலைப்பில் எது வேணும்னாலும் எழுதுங்க ஆனா எழுதிட்டு நீங்க மூணு பேரையோ அல்லது உங்க பதிவு வட்டத்திற்கு ஏத்த மாதிரி எத்தனை பேரையும் வேணும்னாலும் கூப்பிடலாம், கூப்பிட்டு எழுத சொல்லணும் அது முக்கியம்!

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பத்த வச்சிட்டீங்களே... ஆயில்யனார்.
:))))))

said...

சிவாஜி வாயில் ஜிலேபி வச்சாங்களா தெரியாதே.. நல்லாருக்கு படம்

said...

ஆஹா ஆஹா சிவாஜி வாயிலே ஜிலேபி சூப்பர்!

said...

விபூதி தெரியும் அது என்னங்க அனுபூதி?

said...

ம்ம்முடியல அவ்வ்வ் :))

said...

இது தான் ஒரிஜினில் ஜிலேபி :))

said...

//நம்முடைய சிந்தனையை போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாக கொள்கிறோம் இது நாம் செய்யும் தவறு!//

அதுதானே எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை.

said...

ஆழ்ந்த கருத்து. ஆனால் எத்தனைபேர் இதை ஏற்பார்கள் என்பது சந்தேகமே. நீங்கள் சொல்வது இருந்து விட்டால் வாழ்க்கையில் ஈகோ என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.

said...

nalla posttunganna.. makkal jilebi oottunaangala.. first time pakkarEN ithai

said...

ஒண்ணுமே புரிலே !

வாயிலே ஜிலேபியைத் தவிர !!

எதைக்கொடுத்தாகும் எப்படி வேணும்னாலும் எழுதறது தனிக்கலை

said...

cheena (சீனா) said...
ஒண்ணுமே புரிலே !

//சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்குதே என நினைக்கிறவங்க நினைக்கட்டும்! ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு என் நன்றிகள்:-)//


:)))

said...

ஆயில், இத வேற ஓப்பன் ஆகல ஓப்பன் ஆகலன்னு ரொம்ப 'கஷ்டப்பட்டு' வந்து படிச்சேன். படத்தைத் தவிர, விஷயங்கள் அருமை.

பாத்துங்க, வாயில ஜிலேபி குடுக்கறதோட நிறுத்திக்கட்டும். காலையிலே, காலைக் கடனுக்கு சட்டி கொண்டு போய் 'பின்னாடி' வைக்கப் போறானுங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போவுதோ? இதுங்கள அந்த ஆண்டவந்தான் காப்பாத்தனும் :(

said...

///விபூதி தெரியும் அது என்னங்க அனுபூதி?///

ரிப்பீட்டு..

said...

தமிழ் பிரியன்...சொன்னது...

///பத்த வச்சிட்டீங்களே... ஆயில்யனார்.
:))))))///

அட இவர்தான் அவரை கோர்த்து விட்டதா...