ஜூன் PIT -ப்ராக்ரஸ்!

எப்படியோ ஜூன் - 2008 பிஐடிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் அனுப்பியாச்சு! அடுத்தது ஜூலை பிஐடி என்ன தீம் எப்படி படம் புடிக்கிறதுன்னு ஒரே கவலையா இருக்கு...!?? (ஆனாலும் எனக்கு இது கொஞ்சம் ஓவர்தான்!)

என்ன தம்பி அதுக்குள்ள அடுத்தமாசத்து போட்டோவை பத்தி கேட்கறீங்களேன்னு கேக்க நினைக்கறவங்களுக்கு! - ஆமாங்க எப்படியும் கஜினி மாதிரி 18 அப்புறம் தேறுதோ அல்லது அப்பவும் தேறாமலே போகுதோன்னு தெரியலை இப்போதைக்கு 4 ஆயிருக்கு!

முன்னாடியே பிளான் பண்ணியாச்சு பதினெட்டுக்கு அப்புறம்தான் முழுமையாவே என்னைய மாதிரி மொக்கை போட்டோவெல்லாம் ஒரளவுக்கு தகுதிசுற்று வரக்கூடும் அப்படின்னு! சரி அதான் டார்கெட் 18 அப்புறம் வைச்சுட்டேன்!

இப்ப சும்மா போட்டோ போட்டு வெளையாடிக்கிட்டு இருக்கேன்!

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கலக்குங்கோ :-)

said...

அட! எங்க வேலை.
ஐக்கிய அரபு தேசத்திலா??

said...

//வடுவூர் குமார் said...
அட! எங்க வேலை.
ஐக்கிய அரபு தேசத்திலா??
//

இல்லைங்க! இது கத்தார்ல :))

said...

//கிரி said...
கலக்குங்கோ :-)
//

ஆமாங்க நானும் கலக்குற மாதிரித்தான் இறங்குறேன் போட்டியில ஆனா பாருங்க ரிசல்ட் வந்து ஜெயிச்சவங்க போட்டோக்களை பார்த்தா...! அடப்பாவி இவ்ளோ பெரிய ஆளுங்க கூடவா நீ போட்டிபோட்டேன்னு மனசு கலங்கிப்போய்டுதுங்க!:)))

said...

அண்ணே! ஆட்டத்துல வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. ஆட்டத்துல இருக்கமாங்கிறது தான் முக்கியம். ச்சும்மா நின்னு ஆடுங்க.வாழ்த்துக்கள்!

said...

//அடப்பாவி இவ்ளோ பெரிய ஆளுங்க கூடவா நீ பொட்டி போட்டேன்னு மனசு கலங்கிப் போவுது//
என்னாங்க ஆயில்யன்? இதுக்குப் போயி கலங்கலாமா? ஆஹா..இவ்ளோ பெரிய ஆளுங்க கூடத்தான் போட்டி போட்டிருக்கேன்னு மனச தேத்திக்க வேணாமா? அத்த வுட்டுட்டு....
படங்கள் நல்லாவே இருக்கு.

said...

//ஆமாங்க எப்படியும் கஜினி மாதிரி 18 அப்புறம் தேறுதோ அல்லது அப்பவும் தேறாமலே போகுதோன்னு தெரியலை //
கவலைப்படாதீர்கள்.. முயற்சி திருவினையாக்கும்!

// அடப்பாவி இவ்ளோ பெரிய ஆளுங்க கூடவா நீ போட்டிபோட்டேன்னு மனசு கலங்கிப்போய்டுதுங்க!//
உங்களுடன் போட்டி போட்டதற்கு அவர்கள் பெருமை கொள்ளும் காலம் விரைவில் வரும்!

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே! ஆட்டத்துல வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. ஆட்டத்துல இருக்கமாங்கிறது தான் முக்கியம். ச்சும்மா நின்னு ஆடுங்க.வாழ்த்துக்கள்!
//

உண்மையிலேயே நான் அதிகம் மனசுக்குள்ள நினைச்சுக்கிற சூப்பர் கான்செப்ட்ங்க :)

said...

/நானானி said...
//அடப்பாவி இவ்ளோ பெரிய ஆளுங்க கூடவா நீ பொட்டி போட்டேன்னு மனசு கலங்கிப் போவுது//
என்னாங்க ஆயில்யன்? இதுக்குப் போயி கலங்கலாமா? ஆஹா..இவ்ளோ பெரிய ஆளுங்க கூடத்தான் போட்டி போட்டிருக்கேன்னு மனச தேத்திக்க வேணாமா? அத்த வுட்டுட்டு....
படங்கள் நல்லாவே இருக்கு
///

நன்றி நானானி! :))

said...

//பரிசல்காரன் said...
//ஆமாங்க எப்படியும் கஜினி மாதிரி 18 அப்புறம் தேறுதோ அல்லது அப்பவும் தேறாமலே போகுதோன்னு தெரியலை //
கவலைப்படாதீர்கள்.. முயற்சி திருவினையாக்கும்!

// அடப்பாவி இவ்ளோ பெரிய ஆளுங்க கூடவா நீ போட்டிபோட்டேன்னு மனசு கலங்கிப்போய்டுதுங்க!//
உங்களுடன் போட்டி போட்டதற்கு அவர்கள் பெருமை கொள்ளும் காலம் விரைவில் வரும்!
///

நம்பிக்கை கொடுக்கும் வரிகள் நன்றி பரிசல்காரரே!

said...

கத்தார்ல வேற எங்கயும் எடுக்க அனுமதிக்க மாட்டாங்கள.
ரிஷானும் இதே போல படத்தைதான் போட்டிருக்காரு.

said...

//கார்த்திக் said...
கத்தார்ல வேற எங்கயும் எடுக்க அனுமதிக்க மாட்டாங்கள.
ரிஷானும் இதே போல படத்தைதான் போட்டிருக்காரு
//

எங்க வேணும்னாலும் போய் போட்டோ எடுக்கலாம்ங்க கத்தார்ல!

பட் இந்த மாதிரி இடங்கள்ல நிறைய இருக்கு அதான் ரொம்ப சிம்பிளா முடிச்சுக்கிறோம் :))

said...

ஆயில்யன் சார்,

//எங்க வேணும்னாலும் போய் போட்டோ எடுக்கலாம்ங்க கத்தார்ல!//

அது கஷ்டமுங்க.
அதுலயும் துறைமுகம்,ஏர்போர்ட் அப்புறம் சில கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ஸ் இருக்கில்லையா?அதுக்கெல்லாம் உள்ள போறதுக்கு லைசன்ஸ் வேணும்.அது இல்லேன்னா உள்ளே விடமாட்டாங்க.
அது இருந்து உள்ளே போனாலும் வாசல்ல 'வேலை நடக்குற இடத்துல எதுக்குக் கேமரா'ன்னெல்லாம் ஆயிரம் கேள்விகள் கேட்பாங்க :(

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆமாம் ரிஷான் பொதுவாக சொல்லிட்டேன் தவறுதான்:(

பட் எனக்கு தெரிஞ்சு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இடங்களிதானே அது மாதிரியான தடைகள்! ( அது எல்லா நாடுகளிலுமே இருக்குல்ல!)

said...

போட்டிக்கான படத்தின் color contrast மற்றும் idea அருமையாக உள்ளது. வாழ்த்துகள்!

said...

கட்டுமானத் துறையிலிருக்கும் தங்களது படங்களும் அதைச் சார்ந்தே.
கிட்டுமா வெற்றி என்பது இறைவன் கையில், நல்ல படங்கள். கவலையை விடுங்கள். You've done your best. Leave the rest to HIM.