மேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்!

எப்பொழுதிலிருந்து என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவர மறுக்கிறது! ஆனாலும் கூட என்னோடான ஈர்ப்பு சரியாக மினிமம் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

நடுவில் சில காலங்கள் மேரியை காணாமல் நான் துடித்து போவதை பார்த்து மேரி ஒரு நாளும் கவலைப்பட்டதாகவே எனக்கு தோன்றவில்லை! தானுன்டு தன் பணி என்பதிலேயே மேரியின் குறிக்கோள் இருக்கும். இதைத்தான் நான் நேரிலேயே பார்த்ததுண்டு!

எனக்கு சிலசமயங்களில் மேரியை காணாமல் கடும் கோபம் கூட வருவதுண்டு அது போன்ற சந்தர்ப்பங்களில் மேரியின் மீதான கடுப்பு,கோபம், எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் குவித்தாகவேண்டுமல்லாவா? அந்த சமயங்களில் எங்கள் வீட்டு பிளாஸ்டி சேரின் ஒரு கால் ஊனப்படுத்தப்படும்!

எவ்ளோதான் அடிச்சாலும் தாங்கி கிட்டாண்டா! இவன் ரொம்ப நல்லவன்டா என்று நினைக்கும் மனது! கோபம் போன பிறகுதான் குணமே தன் நிலைக்கு திரும்பும் போல! - அப்போதும் கூட மேரி கொஞ்சம் மனதில் வந்து நிற்க கண்டு மகிழ்ந்தும்போவேன்!

ஏனோ தெரியவில்லை இந்த ஒரு வாரமாய் வலைச்சரம் கொஞ்சம் அதிக பிஸியோடு ஆர்வமாக மற்றவர்கள் பதிவுகளினை பதிவுகளை படித்து பதித்துகொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மிகுந்த ஆர்வம் + விருப்பம் உருவாகி ஒரு சந்தர்ப்பத்தில் மேரி மீது காதல் மீண்டும் எனக்குள் விஸ்வரூபம் எடுத்துவிட்டது !

இந்த ஒரு வாரமும் மேரியின் மீது கொண்ட அதீத காதல் என்னால் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோய் நானும் கூட கூடவே போய்விட்டேன்!

இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....!!!


(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே!)

18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ?

said...

//கானா பிரபா said...
சரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ?
///

இந்த மேரியெல்லாம் கேக்கப்பிடாது!

சின்னபுள்ளதனமால்ல இருக்கு :))))))))))

said...

அது யாரண்ணே அது மேரி!?

said...

ஹையோ பதிவை படிக்கல...

said...

அட இவ்ளோதானா :)

said...

///இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....!!! //

காத்திருந்த காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை :(

said...

அவ்வ்வ் :))

said...

அய்யனார் மாதிரி ஆரம்பிச்சு குசும்பன் மாதிரி முடிச்சு..
பரிசோதனையா.. உங்களுக்கா எங்களுக்கா..?

said...

அய்யா சாமி! நாங்கூட என்னவோன்னு நெனச்சு வந்துபுட்டேன். அந்த மேரி மாதா தான் உங்களுக்கு நல்ல புத்திய குடுக்கணும்.

said...

மேரி என் வாழ்விலும் முக்கியம். வைத்தியர் எனக்கு அருளிய ஒரு வரம். சாப்பிடலாம்னு சொல்லிட்டதனால வாரத்தில ரெண்டு பாக்கெட் பிட்டானியா..... மாரிஈஈஈ பிஸ்கட்ஸ்:)!!!!!!!

said...

//தமிழன்... said...
///இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....!!! //

காத்திருந்த காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை :(
///

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க விடுங்க வேற 1 கிடைக்காமலா போய்டப்போகுது :))))

said...

//கப்பி பய said...
அவ்வ்வ் :))
///


நோ ஃபீலிங்க்ஸ் :)))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அய்யனார் மாதிரி ஆரம்பிச்சு குசும்பன் மாதிரி முடிச்சு..
பரிசோதனையா.. உங்களுக்கா எங்களுக்கா..?
//

:)))

said...

//வல்லிசிம்ஹன் said...
மேரி என் வாழ்விலும் முக்கியம். வைத்தியர் எனக்கு அருளிய ஒரு வரம். சாப்பிடலாம்னு சொல்லிட்டதனால வாரத்தில ரெண்டு பாக்கெட் பிட்டானியா..... மாரிஈஈஈ பிஸ்கட்ஸ்:)!!!!!!!
//


நானெல்லாம் தினம் 1 பாக்கெட் முழுங்குறேனாக்கும் :)))

நன்றி வல்லியம்மா!

said...

//(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே!)//
கடைக்காரன் அசந்த நேரத்துல அபேஸ் பண்ணி இருப்பிங்க :)

//கானா பிரபா said...

சரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ?//

கன்னாபின்னாவென்று ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய் :))

said...

எனையாளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா - என்
துணை நீயே மேரி மாதா

பரிசுத்த கோதுமையாலே
பல பிஸ்கட் ஈன்ற தாயே...

(எனையாளும் மேரி மாதா)

said...

not for publishing

அண்ணே நீங்க சொன்ன மாதிரி ஒரு இரயில் பதிவு போட்டேன்.கீழ உள்ள சுட்டில பாருங்க
http://pudugaitamil.blogspot.com/2008/06/blog-post_16.html#links

said...

ஹி...ஹி... மேரிய பத்தி இவ்ளோ சூப்பரா யாரும் சொன்னதேயில்ல. ஆமா மேரியோட நீங்க இருந்த போட்டோவெல்லாம் காணோம். :))