நீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....!

பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,

பதுங்கியிருந்தத் சத்தம்;

கைகளுக்கிடையில் தொங்கி,

தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;

கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.

நாசித்துளைக்கும் வாசம்;

அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!

அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!

அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!
****************************************

மேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)


குடி மகனே....

இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென...

***************************


செம அடி சார்


வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்

***************************

கொஞ்சம் சீக்கிரமாய்!!


கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்

எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிரமே
சொல்லியிருக்கலாமென.......


பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!

38 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Me the firstae :)))

said...

//அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

//


ROTFL :))))))

Kusumbar leavela ponadhaala neenga edhir kavuja poda aarambichiteenga pola :D

said...

ஆகா..பிரியாணி!!

said...

photo pudikkaradhukkullarayae chicken piece ellam aataiya potta chinna paandikku en kandanangal!!!

said...

//என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!
//

அவ்வ்வ்வ்வ்வ்! இப்படி நினைச்சுக்கிட்டேவே இருப்பாங்க..உடனே அவர் நாண நன்னயம் செய்துவிடல் பாஸ்!! :-)

said...

குடி மகனே....
************
இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென
****

said...

Adappaavi anna :)

said...

செம அடி சார்
*********

வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்
****

said...

//நாசித்துளைக்கும் வாசம்;//

வாவ்..பிரியாணி வாசம்..ஆம்பூர் பிரியாணி வாசம்!! எனக்கு பிரியாணி ஞாபகத்தை வர வச்சீட்டிங்க!! :-)

said...

கொஞ்சம் சீக்கிறமாய்!!
****************
கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்
எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிறமே
சொல்லியிருக்கலாமென

said...

//அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!//

ஆகா...இப்படித்தான் இருக்கணும் பாஸ்..முதல் பந்திலேயே காலி பண்ணிட்டீங்களா பாஸ்! :-)

said...

:'-(((( Romba naal kazhichi vandhurukkennu konjam karisanam kaattakkoodaadhaa?? :))

said...

:'-(((( Romba naal kazhichi vandhurukkennu konjam karisanam kaattakkoodaadhaa?? :))

said...

ஆயிரம் வகை பிரியாணி இருந்தாலும் மட்டன் பிரியாணி போல வருமா? அதுவும் பிரைடு மட்டன் பிரியாணி. ஆமா, உங்களுக்குத்தான் சாம்பார் சாதம்தான் மிகப் பிடிச்ச உணவுன்னு ஜல்லியடிச்சீங்கள்ள, அப்புறம் எதுக்கு இப்டி பிரியாணி பத்தி எழுதி, மண்டக்காயவெக்கறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
ஊருக்கு போறப்போ, தெனம் தெனம் வெறும் சாம்பார் சாதம் மட்டுமே போடச் சொல்லணும்.

said...

அய்யோ சாப்பிட ஆசை முடியலையே

said...

:-))

said...

//rapp said...
ஆமா, உங்களுக்குத்தான் சாம்பார் சாதம்தான் மிகப் பிடிச்ச உணவுன்னு ஜல்லியடிச்சீங்கள்ள, அப்புறம் எதுக்கு இப்டி பிரியாணி பத்தி எழுதி, மண்டக்காயவெக்கறீங்க? //

கவிதை படைப்பவர்கள் அனுபவித்த விசயங்களைத்தான் கூறுகிறார்களா ராப் சகோதரி :)

said...

avv
venaam
aluthuthuven

said...

//ஆயில்யன் said...

//rapp said...
ஆமா, உங்களுக்குத்தான் சாம்பார் சாதம்தான் மிகப் பிடிச்ச உணவுன்னு ஜல்லியடிச்சீங்கள்ள, அப்புறம் எதுக்கு இப்டி பிரியாணி பத்தி எழுதி, மண்டக்காயவெக்கறீங்க? //

கவிதை படைப்பவர்கள் அனுபவித்த விசயங்களைத்தான் கூறுகிறார்களா ராப் சகோதரி :)//அதானே... இதுக்கு பதில் சொல்லும்மா சொல்லு!!

said...

//கவிதை படைப்பவர்கள் அனுபவித்த விசயங்களைத்தான் கூறுகிறார்களா ராப் சகோதரி :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
எப்டியாப்பட்ட கவிதாயினிக்கிட்ட என்னாமாதிரி கேள்வி கேட்டுட்டீங்க. என்னோட பல படைப்புகள் உண்மைய பெரட்டி பெரட்டி அடிச்சாப்டி சொன்னாலும், குறிப்பிட்ட, மிகப் பிரபலமான என்னோட 'கும்ப்ளே, நீ ஒரு ஆம்பளே, உங்கம்மா ஒரு பொம்பளே' என்கிற கருத்தாழமிக்க கவிதையில், ஒரே ஒரு பொருட்குற்றம் உண்டான்னு, நீதி கேக்குறேன், ஆமா:):):)

said...

:-)

said...

:)))))))))))))))))))))))

said...

எதிர் கவுஜ கவுஜர் ஆயில்யன் வாழ்க! வாழ்க!

said...

சில வரிகளில் தனது சிக்கன் பிரியாணி ஏக்கத்தை காட்டிக் கொண்டது நம்ம ஆயிலா? அமர்க்களம்!

said...

///ஸ்ரீமதி said...

:'-(((( Romba naal kazhichi vandhurukkennu konjam karisanam kaattakkoodaadhaa?? :))///
கரிசனம் காட்டி இன்னும் நாலஞ்சு கவுஜ எழுதி இருக்கலாமோ?,... :-)))

said...

பசிக்குது பாஸ்

said...

பிரியாணிக்கவிதை என்ற புது சொல்லையே உருவாக்கியிருக்கிறீர்கள். இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.. வெண்பூவுக்கு சொல்லிவிடணும்.

said...

அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்
\\


ஹா ஹா ஹா

said...

அந்த டிராயிங் ரூம்ல கவுஜ எழுதின கொலைவெறி கவுஜர் நீங்க தான ??

உண்மைய சொல்லுங்க...

யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்..நாங்க உங்கள கைது பண்றோம்.

said...

aahaaa....biriyani :))

said...

//G3 said...
Me the firstae :)))
//

by default :)

said...

எல்லோரும் பிரியாணி மயக்கத்துல லிங்க போய் படிச்சாங்களோ என்னமோ ஆனா நாக்கு சப்பு கொட்டுறது மட்டும் ஓவர்.

said...

எதிர் கவுஜ ஏகாம்பரங்கள் ஜீவ்ஸ்& ஆயில்ஸ் கூட்டணி வாழ்க.

said...

மொக்கையா இது? கருத்துக் களஞ்சியம் !!

ஆனாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஓவர்...

said...

:-))

said...

:))))

said...

சந்தனமுல்லை said...
//அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!//

ஆகா...இப்படித்தான் இருக்கணும் பாஸ்..முதல் பந்திலேயே காலி பண்ணிட்டீங்களா பாஸ்! :-)


பாஸ், ஆக்ச்சுவலா இந்த கமெண்ட்ட நான் போட்டிருக்கனும், ஆச்சி பாஸ் முந்திக்கிட்டாங்க, இப்ப நான் போட்டதா நெனச்சுக்கோங்க பாஸ்.

said...

ஹா.. ஹா.. ஹா..
சூப்பரப்பு..