1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.
ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!
பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)
இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்! ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!
பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.
லதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!
கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை!
அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா!
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா!
ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே!
கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே!
கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை!
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை!
ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்..
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம!
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!
கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை!
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!
ராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்!
21 பேர் கமெண்டிட்டாங்க:
நல்லதொரு சிந்தனையுடன் பிறந்த நாள் பரிசைத் தந்தமைக்கு நன்றி பாஸ்
ஆமா..மறக்கமுடியுமா அந்த படத்தை! சிடுமூஞ்சி மீனாதானே..ஹிஹி!
//ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!//
ஆமா பாஸ்..நானும் கண்கலங்கி போயிருக்கேன்! :-))
உருக வைக்கும் பாடல் அது...
இசை ஞானிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
இசை ஞானிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
நல்லதொரு சிந்தனையுடன் பிறந்த நாள் பரிசைத் தந்தமைக்கு நன்றி பாஸ்!
\\அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்ட\\\
ஆமாம்! ஆமாம்
//கானா பிரபா said...
நல்லதொரு சிந்தனையுடன் பிறந்த நாள் பரிசைத் தந்தமைக்கு நன்றி பாஸ்
//
Repeatae :)))
அருமையான படம். அருமையான பாடல். பகிர்தலுக்கு நன்றி. வாழ்த்துக்கள் இசை ஞானிக்கு!
மிகவும் பிடித்த படம், பாடல்.
ஆதரவற்ற இல்ல பிள்ளைகளின் வாழ்க்கையை எல்லோரும் உணரும் வகையில், படக்காட்சி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அந்த படத்தை பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியுமா?
"அன்புள்ள ரஜினிகாந்த்"பட ரஜினி, மீனாவை மறக்கவும் முடியாது.
இசை ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்ல படம். ஆனால், இது போன்ற நிலை,இனி பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டாம் என, இறைவனை வேண்டுவோம்..
ஆமா நல்ல படம்.
பாஸ்.. வழக்கம் போல நல்ல பதிவு பாஸ்..
கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கும் பிடிக்கும் பாடல் இதுவும் , மின்சாரக் கனவில் வரும் அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவேவும் ..
எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்
do more posts dear
actually last year you did well. You posted many.
but what happen to Feb month. just 1 post.
this June also - just 1 post.
I am expecting more
சூப்பர்!
ராஜா என்றுமே ராஜா தான்!
இசைஞானிக்கு பிறந்த நாளா தெரியாமப் போச்சே..,
அழகான பாடல்+அழகுப் பகிர்வு...
இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
\\\ கானா பிரபா said...
நல்லதொரு சிந்தனையுடன் பிறந்த நாள் பரிசைத் தந்தமைக்கு நன்றி பாஸ்
\\
ரீப்பிட்டே ;)
nalla paattu pagirndhamaikku nanri...
அருமையான பாடல்...நினைவில் நீந்திய நிகழ்வுகளை மீட்டெடுத்து விட்டீர்...அருமை வாழ்த்துக்கள்
( எந்த கருணை இல்லங்களைப் பற்றிய படத்தொகுப்பானாலும் இன்றும் இந்தப்பாடல் தான் பிண்ணனி இசை)
இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதுவும் அந்த பாடல் அற்புதமான ஒன்று :)
Post a Comment