தரையோரக்கனவுகளில் நான்…!


வாழ்க்கை பல வகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகையில என்னை எனக்கே அழகா இருக்கிற மாதிரி காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த தரையோர கனவுகள் தான். நான் படுத்திருங்கும்போதும் சரி, என் ஆபிஸ்ல தூங்க ஆரம்பிக்கும்போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த கொட்டாவி இன்னும் அடங்கினப்பாடில்லை.

என் தூக்கம் ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் சாப்பிடற டைம் தவிர்த்து.) தூக்கத்திற்கும் எனக்குமான தொடர்பு தூக்கத்தோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் தூங்கவே இல்லை என்றெல்லாம் சொல்லி உங்களைக் நம்பவைக்கமாட்டேன்..

"தரையோரக் கனவுகள்" நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் நான் பார்த்த வித்தியாசமான கனவுக்களுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்..!

தூங்க போறப்ப ஆரம்பிச்ச கொட்டாவியே எனக்கு அடங்கல! அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.! அப்படிப்பட்ட தரையோரக்கனவுகளை இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு !

இப்படியாக என் கொட்டாவியும் கனவும் தொடர்ந்தாலும் நான் உருப்படியா சொல்லப்போற கனவு, யாரோ நாம சொல்லப்போறதையும் கேட்பாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அதை உக்காந்து கேக்கப்போறவங்க அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா!

இதுதான் தரையோரக்கனவுகளோட ஸ்டார்டிங்க் பாயிண்ட் (இனி தான் கொடுமையே…. அதாவது நான் தரையில படுத்திக்கிட்டு என்னென்ன கனவு கண்டே அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் கொஞ்சம் டெர்ரரா..)

கனவுக்கன்னி உண்மையாகவே கனவுக்கன்னிக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ கனவு காண தொடங்கிட்டோமே கனவுக்கன்னிய வரவழைச்சே ஆகனும்ன்னு இந்த கனவு கண்டேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது..!

இதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.

கனவுக்கன்னிகளை மட்டுமே பார்த்து கொஞ்சமா கொடுமைப்பட்டிக்கிட்டிருந்த நானும் கொஞ்சம் ரூட் மாறி போன வெளிநாட்டு கனவுகள் காண ஆரம்பிச்சேன். இப்பவும் அடிக்கடி நினைச்சு பார்த்தா கண்டிப்பா இதவிட இன்னும் நிறைய வெளிநாடுகளுக்கு போகணும்ன்னு நினைச்சதுண்டு அந்த வரிசையில் நான் அண்டார்டிக்காவுக்கு போனதை பத்தி சொல்ல்ல எனக்கு ரொம்ப புடிக்கும் நிறைய சொல்லணும் (எம்புட்டு சுத்தியிருக்கேன் கொஞ்ச நஞ்சமா சுத்தினது??

ரொம்ப ஜாலியா ஊர் சுத்தி கனவு கண்டுக்கிட்டிருந்த இருந்த என்னைய எந்திரிச்சு உக்காருடான்னு சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ,என்னோட தரையோரக்கனவுகளை நீங்க படிச்சுக்கிட்டிருக்கீங்க. தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. !

அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா கனவு டிரைப்பண்ணனும்ன்னு நினைச்சேன்.போற ரூட்லயே (கனவுலதான்ங்க) நிறைய பேரை மீட் பண்ணி பேசணும்ன்னு எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச விசயம் அது!

நாம் காணும் எந்த ஒரு பகல் கனவுமே அது ரொம்ப சின்ன குட்டியூண்டு கனவா இருந்தாலுமே அதுல ஒரு ஃபிகர் வரும்போது வர்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல நேத்து மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரதா நேரத்துல சேர்ல உக்காந்துக்கிட்டே கண்ட இந்த கனவை தான் சொல்லணும். :

இது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த கனவுகள், இன்னும் நெறைய நிறைய இருக்கு. அப்பறம் என் கனவுகள் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. அதை அப்புறம் காப்பியடிச்சு யாராச்சும் படம் எடுத்துப்புடுவாங்க! அதனால, என்னோட சுயமாய் காணும் கனவுகள் பற்றிய மேட்டர்களை இத்தோ இஸ்டாப்பு பண்ணிட்டு, இன்னுமொரு நல்ல தரையோர கனவு காண போய்ட்டு வாரேன் :-)

நன்றி..!நன்றி..!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (கொட்டாவிவுட்டுக்கினு போறேன்!)

டிஸ்கி:- நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் தேடிக்கிட்டு திரியாதீங்க மூலம் இங்கதான் இருக்கு !

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வேணாம்.....விட்டுடுங்க சின்னப்பாண்டி...அழுதுருவேன்

சோபிக்கண்ணு சொல்லியனுப்பிச்சாங்க‌

said...

//! தூங்க போறப்ப ஆரம்பிச்ச கொட்டாவியே எனக்கு அடங்கல! அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.!//

லக லக லக லக லக லகா! :)))

எப்படி தம்பி! இப்புடி கும்மு கும்முன்னு கும்மி எடுக்கறீங்க!

said...

கவிதைகளுக்கு தான் எதிர் கவிதைகள் வந்தது

இப்போ

பதிவுக்குமா!

said...

கனவுக்கன்னி உண்மையாகவே கனவுக்கன்னிக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ கனவு காண தொடங்கிட்டோமே கனவுக்கன்னிய வரவழைச்சே ஆகனும்ன்னு இந்த கனவு கண்டேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது..! இதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது,\\



ஹா ஹா ஹா

அண்ணேன்! இன்னிக்கு இருக்கு உங்களுக்கு

நெசமா நல்லவுக வருவாக,

சாயங்காலம் ...

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .......

கனவு முடிய யாரு வந்தது என்று மட்டும் சொல்லிடுங்க சரியா ?

said...

மீ த பாஸ்ட்

அண்டார்டிக்காவுக்கு .... நிறைய சொல்லணும்(எம்புட்டு சுத்தியிருக்கேன் கொஞ்ச நஞ்சமா சுத்தினது?? சொல்லுங்க கேட்கிறோம்.

said...

அண்ணா வேண்டாம் அழுதுருவேன் :))

Anonymous said...

பாவம் ஸ்ரீ விட்டுடுங்க :)

said...

முடியலப்பா...

said...

//கானா பிரபா said...

வேணாம்.....விட்டுடுங்க சின்னப்பாண்டி...அழுதுருவேன்//

// புனிதா|പുനിതാ |Punitha said...

பாவம் ஸ்ரீ விட்டுடுங்க :)//

Repeatae :)))))

said...

நாந்தான் நேத்தே சொன்னேனே கத்தார் சிங்கம் களமிறங்கிடுச்சுன்னு,

ஹையோ பாவம் ஸ்ரீமதி

வலைச்சர பதிவ கூட விட்டு வைக்க மாட்டீங்களா நீங்க ?.

said...

அதை உக்காந்து கேக்கப்போறவங்க அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா!

ஹையோ பாவம் இந்தக் கொடுமைக்கு அவங்கல்லாம் ஆபிஸ்ல வேலையே செஞ்சிருக்கலாம் :)

said...

என்ன கொடும சின்ன பாண்டி இது?!!

said...

//இதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது, //

ஆர்குட் கம்பூனிட்டியும் வளர்ந்தது! இதை சொல்லாம விட்டுட்டீங்களே பாஸ்! :-)

said...

/* அமிர்தவர்ஷினி அம்மா said...
நாந்தான் நேத்தே சொன்னேனே கத்தார் சிங்கம் களமிறங்கிடுச்சுன்னு,..*/
சிங்கமொன்று புறப்பட்டதே!!!!
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

தாங்க முடியலை பாச் :(( :))

said...

haahah...oray postla athana perayum oppari vaika vacha engal singam oilyen vaazhga :D

said...

itha padichitu naan mulichitrukena thoongarenaanu enakay doubt vanthirchi!!!

said...

சிங்கம் ஏனிப்படி.. ஏன்? ஏன்? ஏன்?

said...

///அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா!////
அண்ணே! முடியல.. முடியல... பதிவு ஒன்னு எழுதவே முடியாம தவிக்கிறேன்... நீங்க வேற.. :(

said...

அட பாவம் சின்னப் புள்ளைய வுட்டுருப்பா!!!

said...

சின்னப்பாண்டின்னே, இப்படி ரகம் ரகமா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............. ஆக்கிட்டீங்களே:):):) அப்போ உங்களை வெச்சு (கனவு வருமான்னு) விஞ்ஞானிங்க பண்ண ஆராய்ச்சி வெற்றின்னு சொல்லுங்க:):):)