32 கேள்விகள்.!

32 கேள்விகள் ஓரளவுக்கு பதில் சொல்லியாச்சு!

நான் பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்கிறேன் நீங்க படிச்சு பார்த்துட்டு வாங்க...! (பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)

****************************************
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அது வரவில்லை:-)
நானே வைத்துக்கொண்டேன். எனது சொந்தப் பெயரில் எழுதுவதைவிட இப்படியொரு புனைபெயர் வைத்து எழுதுவதில் ஒரு இரகசியக் குறுகுறுப்பு இருந்தது.சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது - தமிழ்நதியக்கா சொன்ன அதே பதில்தான் என் மனசில இருந்ததும்!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பாட்டி உடலால் எங்களை விட்டு பிரிந்த அன்று!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அழகாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு கறுப்பு பேனாவில் எழுதி பார்ப்பது என்பது அலாதி ஆர்வம் :)

4. பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

வாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்

ஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே!

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்க பிடிக்கும் :) - ஆற்றில் குளிக்க அதிகம் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவான தோற்றம் - உடைகள்,முகப்பொலிவு
(ப்ரெஷா இருந்தா சரி நாம கொஞ்சம் பேச டிரைப்பண்ணலாம்ன்னு யோசனை வரும்! அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான்!)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ஆன்மீகம் !

டிரெஸ் சென்ஸ் :-(
அழகா ஒரு டிரெஸ் கூட செலக்ட் பண்ண தெரியலயே...???

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டுட்டேன் !

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் குடும்ப உறவுகள்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சாய்ஸ்ல விட்டுட்டேன் - இதெல்லாம் ஒரு கொஸ்டீனா? அப்படின்னு பத்தாவது பரீட்சையில கணக்கு கொஸ்டீன் பேப்பரை பார்த்து ஆன அதே டென்ஷன் மீண்டும் வந்துச்சு :)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சிஸ்டம் மானிட்டர் பார்த்துக்கொண்டு கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டு...!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?

கோவிலில் குங்குமம் விபூதி எண்ணெய் நெய் கற்பூரம் என கலந்து வரும் ஒரு வாசம்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தமிழ்பிரியன்

( ரெண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்காமதான்,எழுதுவாங்கன்னு ஒரு தைரியத்துலதான்! ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே!- கூப்பிட்டுட்டு போகட்டுமே..! அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பப்பு பற்றிய குறிப்புக்களடங்கிய பதிவுகள் ( எப்படி இப்படி பொறுமையா வாட்ச பண்ணமுடியுது வாவ்..! என்று வியந்த தருணங்கள்! சனியனே என்று டென்ஷனாகும் அம்மாக்களுக்கு மத்தியில் ஆச்சி டிபரெண்ட் கேரக்டர்தான்)

நாமக்கல் சிபி அண்ணாச்சி - கலாய்த்தல்கள் !

17. பிடித்த விளையாட்டு?

முன்பு கிரிக்கெட் பிறகு கேரம் இப்பொழுது ஒன்றுமில்லை :(

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை

20. கடைசியாகப் பார்த்த படம்?

முழு நீள திரைப்படமெனில் - ஆண் பாவம் & கடலோர கவிதைகள் போன வாரம் பொழுது போகாத வெள்ளி கிழமையில

21. பிடித்த பருவ காலம் எது?

மார்கழி அதிகாலை பொழுதுகள் - இங்கு வந்த பிறகு ஊருக்கு செல்லும் விடுமுறை காலங்கள் - எந்த பருவமாகிலும்..!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் - ரொம்ப காலமா படிச்சுக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் ஸ்லோ நானு!


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


நாளுக்கு நாள் என்ற கணக்கு இல்லை! புரொபைல் படம் மாறும் பொழுதுகளில்...!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அதிகாலை வேளை ஆன்மீக பாடல்கள்

அனாவசியமான ஹாரன் சத்தங்கள்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தோஹா கத்தார் சில ஆயிரம் மைல்கள் இருக்கும்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ இருப்பதாக நினைக்கும் ஒரு திறமை இருக்கிறது

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இருவர் உரையாடுகையில் மூன்றாம மனிதரை பற்றி கேலி பேசுதல் - அந்த மூன்றாம் மனிதர் அங்கு இல்லாத வேளைகளில்..!

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மயிலாடுதுறை

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
தனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
_____________________________________
அப்பாலிக்கா ஃபில் அப் செஞ்சுக்கிடலாம்ன்னு இன்னும் ஒர் சாய்ஸ் !


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?


நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.



டிஸ்கி:- இந்த 32 தொடர்ந்து 50 & 100 போச்சுன்னா அப்புறம் எப்படி இருந்த மக்கள்ஸ் எல்லாம் இப்படி ஆயிடுவாங்க சாக்கிரதை ! இத்தோட நிப்பாட்டிக்கிடலாம்!

65 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படிச்சாச்சு.
32 வது பதில் அருமை.

said...

பாஸ்

சாய்ஸ்ல விட்டதுக்கும் மரியாதையா பதில் சொல்லணும் ஆம்மா

said...

:-))

நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில் அண்ணே! (உங்க வயசு 28ஆ சொல்லவே இல்லை. முன்னாடியே சொல்லியிருந்தா வாடா போடான்னு கூப்பிட்டு இருக்க மாட்டேன்ல :-(( )

said...

கலக்கல் ஆயில் அண்ணே!

said...

சாய்ஸில் விட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லனும்.. இனி நடக்கப் போவதை நினைத்தாவது.. ;-))

said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்!

said...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இருவர் உரையாடுகையில் மூன்றாம மனிதரை பற்றி கேலி பேசுதல் - அந்த மூன்றாம் மனிதர் அங்கு இல்லாத வேளைகளில்..!\\

இதை(த்)தான் புறம் பேசுதல் என்பார்கள்.

(இறந்த விட்ட ஒரு மனிதனின் மாமிசத்தை தின்பதற்கு ஒப்பாகும் என நபிகள் கூறியுள்ளார்கள்)

மிகவும் வெறுக்கத்தக்க விடயம்.

said...

//(பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)//

ஆரம்பமே டெர்ரராத்தான் இருக்கு :P

said...

//அழகாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு கறுப்பு பேனாவில் எழுதி பார்ப்பது என்பது அலாதி ஆர்வம் :)//

கேட்ட கேள்விக்கு பதில சொல்லாம என்னதிது எக்ஸாம்ல எழுதற மாதிரியே எழுதிக்கிட்டு???

said...

//சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்//

:)))))))))

said...

\\18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)\\

இதே போன்ற பதில் தான் நானும் சொல்லியிருந்தேன்.
(பார்த்திருக்க மாட்டிங்க)

நிசமா நல்லவரை கோத்து விட்டாச்சா

நான் கேட்டா முடியாதுன்னு சொல்லிகினு இருந்தாரு - நன்றிங்கோ

said...

//(ப்ரெஷா இருந்தா சரி நாம கொஞ்சம் பேச டிரைப்பண்ணலாம்ன்னு யோசனை வரும்! அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான்!)//


LOL :)))))

said...

//சாய்ஸ்ல விட்டுட்டேன் !//


செல்லாது செல்லாது !!!

said...

//கோவிலில் குங்குமம் விபூதி எண்ணெய் நெய் கற்பூரம் என கலந்து வரும் ஒரு வாசம்//

Same pinch :)))

said...

ஹ்ம்ம்ம்... நீங்கள்லாம் நம்மளை மாதிரி சீரியசா பதில் சொல்லலயே... என்ன போங்க !!

said...

//அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?//

Annae.. typo error.. 81 la irundhu 82 a aagida pogudhunnu illa irukkonum ;)))

said...

//ஏதோ இருப்பதாக நினைக்கும் ஒரு திறமை இருக்கிறது//

இதுக்கு பேரு தான் Self-confidence-o ;)))

said...

//அப்பாலிக்கா ஃபில் அப் செஞ்சுக்கிடலாம்ன்னு இன்னும் ஒர் சாய்ஸ் !//

எப்பாலிக்கா???

said...

கலாய்த்தலுக்கு பின்னாடி இருக்கிற தனிமைய உணர முடியுது நண்பா.

நாங்க இருக்கோம். ப்ரீயா கலாய்ங்க :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

Annae.. typo error.. 81 la irundhu 82 a aagida pogudhunnu illa irukkonum ;)))\\

மாற்றி யோசின்னு

இதத்தேன் சொல்லுதவளா

said...

:) periya padhilaa podama..chinna chinna tha irundadhunalla seekiram padichutten... ;)

//(பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)//

:))

said...

கலக்கல் !

//வாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்//

நல்ல சிந்தனைத் தொடர்.

நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு இருந்தால் வாழும் வாழ்க்கை வானம் தானே !
:)

said...

//ஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே!//

இது சூப்பர் :)

said...

ஆயில்ஸ்ண்ணா, இது நாள் வரையில் உங்க நிஜ பேரே ஆயில்யன் தான்னு நினைச்சுகிட்டு இருந்த அறிவிலி நான் :(( உங்க நிஜ பேர் என்ன?

said...

//சாய்ஸ்ல விட்டுட்டேன் - இதெல்லாம் ஒரு கொஸ்டீனா? அப்படின்னு பத்தாவது பரீட்சையில கணக்கு கொஸ்டீன் பேப்பரை பார்த்து ஆன அதே டென்ஷன் மீண்டும் வந்துச்சு :)//

இப்படி தான் இருக்கனும் :)

said...

//18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)
//

LOL :D

said...

டிஸ்கி பயமாத் தான் இருக்கு :)

said...

வந்து படிச்சிட்டேன் பாஸ்

said...

//பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!//

ஹிஹி! :-))))

said...

//சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது//

ஆயில்ஸ் போய் இப்போ கடகம்-ன்னுதான் மனசுலே நிக்குது! ஒரிஜினல் பேரு என்ன பாஸ்?!! :-)))

said...

//வாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்//

தமிழ் சினிமா நிறைய பார்க்கிறீங்களா ஆயில்ஸ்!! :-)) விக்ரமன் ஃபேன் அல்லது விஜயகாந்த் ஃபேன்?!!

said...

//9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டுட்டேன் !//

சின்ன பாண்டி..நம்ப முடியலையே! :-) பெரிய பாண்டி பத்தி தெரிஞ்சுடுச்சு! ரெண்டு பேரும் சேர்ந்து ஆர்குட் கம்யூனிட்டி ஆரம்பிக்கற வேகத்தைப் பார்த்தா...ரெண்டு பேரையும் நம்ப முடியலையே! :-))

said...

//ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே!-//

:-)))))))))))))))))) தமிழ்தாத்தாவை இப்படில்லாம் நீங்க கிண்டல் பண்ணக் கூடாது!! ஓக்கெ!

said...

//ஆண் பாவம் & கடலோர கவிதைகள் போன வாரம் பொழுது போகாத வெள்ளி கிழமையில//

பாஸ்..வாரம் ஒரு தடவை பார்த்துடுவீங்களா?!அவ்வ்வ்..அப்போவே மனப்பாடமா சொன்னீங்க..இப்போ தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட சொல்வீங்களா! :-)

said...

//மார்கழி அதிகாலை பொழுதுகள்//

அய்யோ..அமித்து அம்மா..சீக்கிரம் வாங்களேன்...ஆயில்ஸ் ஏதோ க்ளூ கொடுக்கற மாதிரி தெரியுதே! :-)))

said...

//புரொபைல் படம் மாறும் பொழுதுகளில்...!//

புது ஹீரோயின் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மலையாளம் னு எங்கே அறிமுகமானாலும்னு சொன்னா ஈசியா புரியுமே ஆயில்ஸ்! ;-)))

said...

//
மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
தனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.//

தத்துவம் பாஸ்...!! அவ்வ்வ்வ்வ்!

said...

//இந்த 32 தொடர்ந்து 50 & 100 போச்சுன்னா அப்புறம் எப்படி இருந்த மக்கள்ஸ் எல்லாம் இப்படி ஆயிடுவாங்க சாக்கிரதை ! இத்தோட நிப்பாட்டிக்கிடலாம்!//

ஹிஹ்..சூப்பர்! :-)))

said...

//மார்கழி அதிகாலை பொழுதுகள்//

எதுக்குன்னு எனக்குத் தெரியுமே

சுண்டல், சர்க்கரைப்பொங்கலுக்கு தானே,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன ஆன்மீகம், கந்த சஷ்டி கவசம் நு ஆயில்யானந்தா ரேஞ்சுக்கு அடி பின்னி வெச்சிருக்கீங்க, இப்படியெல்லாம் போட்டா நாங்க உங்கள ரொம்ப நல்லவன்யா ந்னு நம்பிடுவோம்னு நெனைப்பா, அது நடக்காதுடி,

said...

பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்//

நம்பிட்டோம் பாஸு நம்பிட்டோம்.

said...

ஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே!

அப்டியா

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அப்ப இத்தனை ஸ்மைலி போட்டா?

said...

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டுட்டேன்

அழகா “ஆயில்யா” கிட்ட தான் அதை கேக்கனும்னு சொல்லியிருக்கலாம்ல, போங்கண்ணே. ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ ஆகாது.

said...

கூப்பிட்டுட்டு போகட்டுமே..! அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?)

ஹி ஹி தப்பா சொல்லிட்டீங்க பாஸ், நீங்க ஆன்மீகம் மீகம் நு சொல்லும்போதே உங்க வயச நாங்க கெஸ் பண்ணிட்டோம்.

said...

சனியனே என்று டென்ஷனாகும் அம்மாக்களுக்கு மத்தியில் ஆச்சி டிபரெண்ட் கேரக்டர்தான்)


இப்படியெல்லாம் சொல்லிட்டா, ஆச்சி உங்கள கலாய்க்க மாட்டாங்க ந்ன்ற தைரியமா! நோ நெவர்,

(பழிக்குப் பழி, கமெண்ட்டுக்கு கமெண்ட்) :)-

said...

//இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)//

யார் வீட்டு கண்ணாடின்னு அமித்து அம்மா கேப்பாங்களே பாஸ்! :-))

said...

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.

நீங்க அடிக்கடி ஃப்ரொபைல் போட்டொ மாத்துறததானே சிம்பாலிக்க சொல்றீங்க.

said...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
தனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.

சூப்பர்..................

said...

//பாட்டி உடலால் எங்களை விட்டு பிரிந்த அன்று!//

கிளாஸ் பாஸ்

//
சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்//

அவ்ளோ தானா? என்ன பாஸ் இவ்வளவு கம்மியா கேட்குறீங்க.. மனசு ஏதும் சரி இல்லையா?

said...

/நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.
//

எதுக்கு...எதுக்கு இந்த பிட்டு?!
புரியுது பாஸ்..புரியுது!! ஒரு கம்யூனிட்டிலே பிசிய இருப்பீங்க..திடீர்னு இன்னொரு கம்யூனிட்டி ஆரம்பிக்கற நிலைமை வரும்..அதுதான்னு பிசியா இருப்பீங்க..உடனே அடுத்த கம்யூனிட்டுக்கு வேலை வந்திருக்கும்..இதைதானே மீன் பண்றீங்க பாஸ்!! ;-)))

said...

சந்தனமுல்லை said...
//இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)//

யார் வீட்டு கண்ணாடின்னு அமித்து அம்மா கேப்பாங்களே பாஸ்! :-))

நான் அப்படியெல்லாம் கேட்கலை பாஸ், ஏன்னா அதை ஆச்சியே கேட்டுட்டாங்க பாஸ்.

said...

//கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)//

சிலவை இப்படி சிரிக்க வைத்தன.
பலவை சிந்திக்க வைத்தன. அத்தனை பதில்களும் அருமை ஆயில்யன். நூற்றுக்கு நூறு கொடுத்தாச்சு:)!

said...

//(பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)//

பாஸ்.. மீனிங்க் தெரியாம பேசாதீங்க.. மொதல்ல வெக்கம்னா என்னான்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்

//நான் பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்கிறேன் நீங்க படிச்சு பார்த்துட்டு வாங்க...! //

ரொம்ப டெர்ரர் ஆ இருக்கு பாஸ் நீங்க பேக் ஷாட்ல டர்ன் பண்ணி நிக்கிறது.

said...

மாயவரம் உங்களுக்கு சுற்றுலா தலமா? அடிங்க!

3வருசத்துக்கு முன்னாடி தோண்டிய பாதாள சாக்கடை குழியையே இன்னும் மூடல..:((

said...

\\சாய்ஸ்ல விட்டுட்டேன் !\\

அண்ணியை சாய்ஸ்லயா விட்டுட்டிங்க!!!..;))

said...

:))

said...

ஹா..ஹா...சான்ஸே இல்லங்க...

ஆரம்பத்துல இருந்து பேக் ஷார்ட் காமெடி தாறுமாறு...

said...

//ஹி ஹி தப்பா சொல்லிட்டீங்க பாஸ், நீங்க ஆன்மீகம் மீகம் நு சொல்லும்போதே உங்க வயச நாங்க கெஸ் பண்ணிட்டோம்//

உங்களுக்கு வர்ற கமெண்டுகளும் உங்க பதிவு மாதிரியே..சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துரும் போல‌

said...

என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?//

என்ன கொடுமை இது பாஸ்:(

said...

சென்ஷி said...
:-))

நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில் அண்ணே! (உங்க வயசு 28ஆ சொல்லவே இல்லை. முன்னாடியே சொல்லியிருந்தா வாடா போடான்னு கூப்பிட்டு இருக்க மாட்டேன்ல :-(( )
//

ஹா ஹா ஹா

said...

வாழ்க்கை பற்றிய பதில் அருமை..

said...

அடீஈஈஈஇங்

இப்படியா நம்ம சின்னப்பாண்டியை கும்முவாங்க :(

said...

இங்கு வந்த பிறகு ஊருக்கு செல்லும் விடுமுறை காலங்கள் - எந்த பருவமாகிலும்..!
//


nice:-)

said...

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர்

:))

said...

பதில் எல்லாம் படிச்சு முடிச்சுட்டோம். பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நின்னது போதும், அப்படியே கொஞ்சம் சிரிச்சமேனிக்கு திரும்புங்க.. பாக்கலாம்.!

Anonymous said...

நல்லா இருக்குது பாஸ் :-)