டிஸ்கி:- கொசுவர்த்தி சுத்திக்கிறேன்ப்பா!
ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம்! அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !
மத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..! (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...? ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..?!)
சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்! போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க(!?) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா? எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ! ஒரு காரணமுமே சரியா சிக்கல!
யப்போவ்..! எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் ?
அப்பா:- இப்ப எதுக்கு உனக்கு?
ம் பொறந்த நாளு வருதுல்ல !
அப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா ?
அப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு !
அப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் !
ஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு! அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...?
யப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு..? (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்..! நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ!)
சாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட! அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...!
ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்ப உங்களுக்கு ரெண்டு கொஸ்டீன் ரைஸ் ஆகணும் ஆச்சா...?
1.சரி என்ன அப்படி ஒரு பிளானு பிரதர் போட்டாரு...?
இந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு! அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !
2.உனக்கு...?
ப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது!
அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!
******************************************
இன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது!
சட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு! (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க!)
சிங்கிள் ஃபிளிட் வேணுமா டபுள் வேணுமான்னு டைலர்கள் கேக்க ஆரம்பிச்சாங்க!
அப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்!) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது! அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே! ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு! அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்! இப்ப நீங்க எஸ்ஸாகிக்கலாம்!

31 பேர் கமெண்டிட்டாங்க:
சூப்பரு... :))
இவ்ளோ கஷ்டப்பட்டதுக்கு பேசாம பேண்டை கிழிச்சுவிட்டிருக்கலாம்ல? அதுகூட உழைப்பாளி ஸ்டையில் ஆச்சே , கிழிச்சு விட்டு ஒட்டுப் போடறது, அப்போ என்ன பண்ணீங்க?
எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை
பேண்ட் எட்டலையா, அம்புட்டூ ஒயரமா நீங்க.
:))
ஆமா...தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியவேயில்லையே :(
குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..!
(ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...?
ஒருவேள நீங்க இப்ப மாதிரியே அப்பவும் டெர்ரரா இருந்தீங்களா பாஸ், ஆயில்யா அது இதுன்னு.......
ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!
அட வுடுங்க பாஸு,
எல்லாருக்கும் பொறாமை உங்க கலரப் பாத்து...
ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு!
ஏம் பாஸ், எல்லாத்தயும் உங்க அண்ணாத்தையே வாங்கி போட்டுக்கிட்டாரு,
செம கொசுவத்தி பாஸ் இது.
சூப்பரு ஆயில் அண்ணே! நானும் 8 வரை செந்தில் டவுசர் மாதிரி தான் போட்டுட்டு திரிஞ்சேன்... உங்களுக்கு கிடைத்த அதே பதில் தான்... :)))
நம்மளை மாதிரி நல்லவங்களை இந்த உலகம் என்றைக்குமே நம்பாதுண்ணே
படம் போட்ட பனியன் எல்லாம் போடும் பழக்கம் இல்ல.. ;-))
சரி சரி அடுத்த கொசுவர்த்தியை கண்டினியூ பண்ணூங்க பாஸ்!~
// Divyapriya said...
:))
ஆமா...தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியவேயில்லையே :(//
சாரி பாஸ்!
சுந்தரி கண்ணால் ஒரு சேதின்னு பாட்டு தலைப்பைதான் வைச்சேன்! காப்பி பேஸ்ட் பண்றச்ச என்ன கோபமோ தெரியல் சுந்தரி எஸ்ஸாகிட்டாங்க :((
அனுபவம் அருமை:))! ம்ம், மேலே சொல்லுங்க, காத்திருக்கிறோம்.
:-))
குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும்\\
ஹையா! நான் அங்கே தானே படிச்சேன் ...
(எல்லா பெண்களும் உஷாரா அண்ணாச்சின்னு துவக்கத்திலேயே கூப்பிட்டுட்டாங்க ...)
:))
\\ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !
\\
அய்யோ ஒரே டமாசுண்ணே ;))
இப்ப ஆயிரத்தெட்டு கம்யூனிட்டி ஆரம்பிக்கற உங்களைப் பத்தி அப்பவே உங்க டாடிக்கு தெரிஞ்சிருக்கு அதான் கோ-எட்ல சேக்காம இருந்திட்டாரு.
என்ன ஒரு முன்னெச்சரிக்க பார்வை.
பாராட்டுக்கள் (அப்பாவுக்கு)
பாஸ்
உங்க கொசுவர்த்தி கலக்கல் ;)
டீ சேர்ட் எல்லாம் ஞாபகமா வச்சிருக்கீங்களா?
உங்க தல நடிச்ச படங்களில் என் முதல் தேர்வு தளபதி தான்.
அது சரி எதுக்கு இப்ப லவ்ஸ் சீன் அந்த மேட்டரையும் ஓபன் பண்றது :)
தலைவர் பதிவு போட்டு கலக்கீட்டீங்க!!!
/// ஆயில்யன் said...
// Divyapriya said...
:))
ஆமா...தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியவேயில்லையே :(//
சாரி பாஸ்!
சுந்தரி கண்ணால் ஒரு சேதின்னு பாட்டு தலைப்பைதான் வைச்சேன்! காப்பி பேஸ்ட் பண்றச்ச என்ன கோபமோ தெரியல் சுந்தரி ///
ROTFL :))))))))
"ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !
கொசுவர்த்தி ரசிக்க வைக்கிறது.
கொசுவர்த்தி ஸ்மெல் சூப்பர்:)
வாவ்..கொசுவத்தி! மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கேபாஸ்..ஓட்டு குத்தியாச்சு! ஜாலியா இருக்கு உங்க கொசுவத்தி! அமித்து அம்மா கும்மி அதைவிட ஜாலி! :-))
//எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !//
ஹிஹி..ஆட்டோகிராஃப் படத்துல வருமே பாஸ்! அப்புறம் அழகிலே..
//இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! //
அவ்வ்வ்வ்!
//சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்!//
பாஸ்..எதையும் பிளான் பண்ணி பண்ணனுங்கிற கொள்கையை சரியா ஃபாலோ பண்ணுவீங்களா பாஸ்...அப்போலேர்ந்தே! :-))
//அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! //
அவ்வ்வ்வ்!
//எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு//
அது சகஜம்தானே அப்படின்னு சொல்லிடுவாங்கன்னு நினைச்சீங்களா பாஸ்...:-)
//அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!//
பாஸ்..இதுல ஏதோ மெசேஜ் சொல்றீங்களா பாஸ்...ரொம்ப நேரமா யோசிச்சிஃபையிங்! :-)
//முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !
//
:-))
பாஸ்..உங்க வயித்துல ஸ்டவ் வெடிச்சு காதுல புகை வந்தது எங்களுக்கு நல்லாவே தெரியும்!
சூப்பரு..!!
ஆனா இந்தப்பாட்டு எனக்கு ரொம்ப நெருக்கமான பாட்டு இதை பத்தி சொல்லணும்னு பல நாட்களாக நினைச்சுட்டிருக்கேன் ஆனா இன்னும் சொல்ல முடியல...
:))
கண்டினியூ கொசுவர்த்தி
Muthu,
un udan pirappa nalla pottu thaakki thallitta, Aamaa avan school aa nalla padichadhaa avane sollikittaan illai?
romba thaan build up kodutthirukkaan, avan school aa enna senjaannu ennaiya kelu, naan appuramaa thani blog podra alavukku matter solren
Post a Comment