மாசறு பொன்னே வருக...!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருக



மாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

18.06.2008

டிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்!

18.06.2009

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இப்படி ஆளாளுக்கு பதிவில் ரிக்வெஸ்ட் பண்ணா என்னாவேன், வேணாம் அழுதுருவேன்

said...

//கானா பிரபா said...

இப்படி ஆளாளுக்கு பதிவில் ரிக்வெஸ்ட் பண்ணா என்னாவேன், வேணாம் அழுதுருவேன்///
அழப்பிடாது பாட்டு போடுங்க :))

said...

\\கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்!\

தெர்லியே அண்ணே!

said...

// நட்புடன் ஜமால் said...

\\கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்!\

தெர்லியே அண்ணே!//

தெர்லியே சொன்னா - தேவர் மகன்னு- பதில் சொல்றேன்!



அண்ணே சொன்னா பிச்சுப்புடுவேன் :)))

said...

அண்ணே சொன்னா பிச்சுப்புடுவேன் :)))\\


ஹா ஹா ஹா

உங்களுடைய இந்த உரிமையிலேயே தெரியுதே அண்ணேன்னு

(கமல் படம் என்பது ஞாபகம் வந்துவிட்டது - போன கமெண்ட் பப்ளிஷ் செய்த வுடன்)

said...

//டிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்!

18.06.2009//

சின்ன பாண்டி கேட்டு இன்னும் பதிவு போடாத பெரிய பாண்டிக்கு என் கண்டனங்கள் !!!

said...

அண்ணே இது சினிமாவுக்காக எழுதப்பட்டதா?
இல்ல வேற எங்கிருந்தாவது எடுத்து கையாளப்பட்டதா?

said...

எனக்கு இந்த பாட்டை உங்க வாய்ஸ்ல கேட்க அம்புட்டு ஆசையா இருக்கண்ணே.

ட்ரை பண்றீங்களா, ப்ளீஸ்

said...

18.06.2008-னு போட்டுருக்கே அப்போ இது போன வருசம் எழுதுனதாண்ணா?

said...

மனதைத் தொட்ட பாடல்..