மதியம் புதன், ஜூன் 24, 2009

நான் யார்? – கண்ணதாசன்!

ஜுன் 24 - பிறந்த நன்னாளில்



நான் யார்?

அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்! மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.

ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகிறது. பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகிறது. நாயை கண்டதும் முயல் ஓடுகிறது. புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வேயாகும்!

ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.

தாயாலும் தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வந்தோம் வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.

இவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்?

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?  - கவியரசு கண்ணதாசன்

காலத்தால் அழியா காவியங்கள் படைத்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் நினைவில் கொள்வோம்!

23 பேர் கமெண்டிட்டாங்க:

கானா பிரபா said...

நான் நிரந்தரமானவன் எந்த நேரமும் எனக்கு அழிவில்லை என்ற வரிகளை அவரே சொல்லி மெய்ப்பித்தவர்

சென்ஷி said...

:))

பகிர்விற்கு நன்றி ஆயில்யா!

மயிலாடுதுறை சிவா said...

அன்பு தம்பி

கண்ணதாசனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல....

காலத்தால் அழியாத காவியங்களை படைத்த ஒரு சகாப்தம் அவர்!

கடல் இருக்கும் வரை
காற்று இருக்கும் வரை
வான் இருக்கும் வரை
மண் இருக்கும் வரை

அவரின் பாடலகள் இருக்கும்....

நன்றி
மயிலாடுதுறை சிவா...

G3 said...

//தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? - கவியரசு கண்ணதாசன்//

:)))

Anonymous said...

:-) பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்

*இயற்கை ராஜி* said...

நான் நிரந்தரமானவன் எந்த நேரமும் எனக்கு அழிவில்லை என்ற வரிகளை அவரே சொல்லி மெய்ப்பித்தவர்//

Repeatuuuu..

அமிர்தவர்ஷினி அம்மா said...

எந்த நிலையிலும் மரணமில்லாத கவிஞர் அவர்.

அவரின் ஒவ்வொரு பாடல்களை கேட்கும் போதும் நினைவுக்கு வராமல் போவதில்லை அவர் தம் முகம்.

பதிவிட்டதற்கு நன்றி அண்ணா.

ராமலக்ஷ்மி said...

//ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை.//

தன் பாடல்களால் இன்றும் நம்மோடு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.

நல்ல பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்.

rapp said...

//நான் நிரந்தரமானவன் எந்த நேரமும் எனக்கு அழிவில்லை என்ற வரிகளை அவரே சொல்லி மெய்ப்பித்தவர்//

நான் சொல்ல வந்ததை மொதல்லயே கமெண்டாக்கிட்ட கானாசின் கமெண்டை வேறு வழியில்லாமல் நானும் வழிமொழிகிறேன்:):):)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

சப்ராஸ் அபூ பக்கர் said...

சாகித்திய அகடமி விருது பெற்ற கண்ணதாசன் கவிதைகள் கடைசி வரை வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்...

நன்றி உங்கள் பதிவுக்கு....

கைப்புள்ள said...

//அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?//

கொஞ்ச நாளா நானும் இதை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்.

அருமையான பகிர்வுங்க ஆயில்ஸ். மிக்க நன்றி.
:)

கபிலன் said...

"வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்?"

என்னே வரிகள்...என்னே சிந்தனைகள்...

பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்!

ராஜ நடராஜன் said...

படிக்காத எழுத்துக்கு நன்றி.

நாகை சிவா said...

நல்ல பகிர்வு!

"உழவன்" "Uzhavan" said...

கண்ணதாசனுக்கு நிகர் அவனேதான். அவன் சொல்லாதது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். கண்ணதாசநவநீதன் என்ற பெயரில் பள்ளிக்காலத்தில் பத்திரிக்கைகளில் எழுதியதை நினைவுபடுத்திக்கொண்டேன்.
ஒரு ஐயம் நண்பரே.. கண்ணதாசன் பிறந்தா நாள் ஜூன் 20 தானே??

கானா பிரபா said...

rapp said...
//நான் நிரந்தரமானவன் எந்த நேரமும் எனக்கு அழிவில்லை என்ற வரிகளை அவரே சொல்லி மெய்ப்பித்தவர்//

நான் சொல்ல வந்ததை மொதல்லயே கமெண்டாக்கிட்ட கானாசின் கமெண்டை வேறு வழியில்லாமல் நானும் வழிமொழிகிறேன்:):):)//

மீ ட பர்ஷ்டா?

கோபிநாத் said...

பகிர்விற்கு நன்றி அண்ணே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஆயில்யன்,

முதன்முறையாக உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

அமரர் கண்ணதாசனை நினைவு கூர்ந்தது நல்ல காரியம்.

வாழ்க, வளர்க!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

நசரேயன் said...

பகிர்விற்கு நன்றி

kanagu said...

அருமையான பதிவுங்க.. :)

அனைவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உள்ளது... நான் அதை எப்படி உணர்வேன் என்றால் சில விஷயங்கள் செய்யும் போது நமக்கு அள்வில்லா மகிழ்ச்சி ஏற்படும்.. அந்த மகிழ்ச்சி மற்றவற்றிலிருந்து மாறுபட்டு இருக்கும்.. ஒரு திருப்தி இருக்கும் :)

நாணல் said...

nalla padhivu na... :)
pagirndhu kondathukku nanri..

thaamadhama vandhu pinnuttamidaren.. mannikavum.. :(

dayalan said...

nan yar vilakkam miga nanru. athilum kavinger in villakam miga miga nanru. vazkain thathuvam arinthal manam neguzchi yaga ullathu.

dayalan said...

"nan yaar"-kannadasan!
nan yar vilakkam miga nanru. athilum kavinger in villakam miga miga nanru. vazkain thathuvam arinthal manam neguzchi yaga ullathu.