வெட்கி தலை குனிகிறேன்!


ஒவ்வொரு முறையும் நகர்வலப்பொழுதுகளில் கண்டிப்பாய் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் யாரேனும்!

பேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது!

ஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(

பேசுவோமா...? என்று ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் அந்த சில கண் இமைக்கும் நொடிகள் இன்னும் பல பல கணக்குகளை போட்டு மனம் தடுக்கிறது வார்த்தைகள் வெளிப்படாமல் மறுத்து மறைகிறது!

பேசப்போவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும்போது மிக மகிழ்ச்சியடையும் மனம் சட்டென்று நெகடிவ் எண்ணங்களுக்கு தாவிவிடுகிறது.அது வரையிலும் மகிழ்ச்சியாக கணக்கிடப்பட்ட மெஜாரிட்டி இன்பங்கள் சில மைனாரிட்டி துன்பங்களில் வீழ்ந்துப்போகின்றது.

பேசுவோமா என்ற முடிவெடுத்த சில விநாடிகளிலேயே வந்து விழும் கேள்விகளில்

நாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..?

நம்மை விட்டு விலகி சென்றுவிட்டால் அவமானப்பட்டு போய்விடுவோமா?

இல்லை எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

நாமே முன்வந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொண்டால் நினைத்துவிட்டால்...?

ஏன் இது போன்ற இரு வேறு மாறுபட்ட சூழலினை சில விநாடிகளில் முடிவுகள் தாறுமாறாய் வந்து விழுகின்றன?

பேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா? அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா?


கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...?

39 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அண்ணே! கவிதை அருவி மாதிரி கொட்டுது.. :))

said...

மேலே இருந்து படித்துக் கொண்டு வரும் போது ப்டம் பார்க்கும் வரை தல மாறிடுச்சுன்னு நினைச்சேன்..ஆனா இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கீங்க

said...

அந்த இடத்தில் அந்த பாமா ஆன்ட்டி படம் போட்டு இருந்தா நல்லா இருந்துருக்குமோ.. ஹிஹிஹி

said...

ஃபீலிங்க்ஸ் ஆப் வளைகுடா???

said...

உண்மை தான்

said...

பேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா? அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா?\\

both

said...

neenga pesanumnu ninachadhu yaar kittannu mattum sollave illai? :)

said...

//சென்ஷி said...

ஃபீலிங்க்ஸ் ஆப் வளைகுடா???
//

// Divyapriya said...

neenga pesanumnu ninachadhu yaar kittannu mattum sollave illai? :)//

Rendu commentukkum periya REPEATAE :))))))

said...

same feelings thaanga enakkum..

Inga pune la....

Ennatha solla....

said...

ஒரே ரத்தம் (சேம் ப்ளட்)
நீங்க பரவாயில்லை

said...

same blood

said...

Divyapriya கேட்ட கேள்வியேதான்..

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இது கவிதையா, அப்போ எனக்கு ஏன் புரியிது?

said...

ஆம் பேசியிருந்திருக்கலாம்தான்:(!

//கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது//

உண்மை. நல்ல பதிவு ஆயில்யன்!

said...

அழகா சொல்லியிருக்கீங்க ஆயில்ஸ் அண்ணே

எனக்கு கூட இது மாதிரி தோணும் சில / பல சமயங்களில்.

ஸ்கூல் ப்ரண்ட்ஸையே தூரத்துல பார்த்தா கூட, ஒதுங்கிப்போகும் அளவுக்கு இருந்தது கொஞ்ச நாள் முன்னாடி வரை.

said...

எனக்கும் இந்த மாதிரி எண்ண ஓட்டங்கள் உண்டு

நல்ல பதிவு. அழகா சொல்லியிருக்கீங்க.

said...

machi... pesidu. namba pesi yarachum pesama poiduvaingalakum? mmmm venumna en pera refer pannu. thani mariyathai kidaikum.

apadi illati intha sila tips. ippadi conversation start pannina ellarum reply pannuvainga...

1. neeinga antha xyz movie la nadicha hero thane....
2. hallo suresh eppadi irukinga? ( kavanika - suresh, magesh, ramesh nu entha name venumnalum use pannikalam )
3. vanakam sir nu solluinga.. kandipa solliye aganum.

enjoi.....

said...

machi... pesidu. namba pesi yarachum pesama poiduvaingalakum? mmmm venumna en pera refer pannu. thani mariyathai kidaikum.

apadi illati intha sila tips. ippadi conversation start pannina ellarum reply pannuvainga...

1. neeinga antha xyz movie la nadicha hero thane....
2. hallo suresh eppadi irukinga? ( kavanika - suresh, magesh, ramesh nu entha name venumnalum use pannikalam )
3. vanakam sir nu solluinga.. kandipa solliye aganum.

enjoi.....

said...

!!! pesalama venamaanu ivlo peria thot otinathuku oru vaartha pesirukalam

said...

athukaaga en vetaka padanum..athuum thalayav era kuninjukitu!!

said...

ஹ்ம்ம்ம அனேகமா இந்த மாதிரி எல்லோர்க்கும் ஒரு முறையாவது நடக்கும்... நானும்பல பேர் கிட்ட இப்படி யோசிச்சி பேசாமலே இருந்திருக்கேன்... நல்ல பதிவு....

said...

எனக்கு கூட சில சமயம் இப்படி தோணும். படம் அழகு

said...

உலகம் எப்படி ஆயிருச்சு பாருங்க , மத்த மனுசங்க கூட பேசக்கூட எவ்வளோ யோசிக்க வேண்டியிருக்கு

said...

//கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...?//
இதில் தமிழர்கள்தான் அதுகம் யோசிப்பர்களோ என எனக்கும் ஒரு எண்ணம் உண்டு!!!!!

said...

கலக்கல் பாஸ், அப்படியே அந்த லேட்டஸ்ட் போஸ்ட் பின்னூட்டம் திறந்து உடுறது

said...

Andha pathivukkum commenta indha postlayae potralaama boss???

;))))))))))))

said...

// gils said...

athukaaga en vetaka padanum..athuum thalayav era kuninjukitu!!//

Gils.. avar vetki thalai guninjadhukkana reason adutha postla irukku paarunga :D

said...

G3 said...

Andha pathivukkum commenta indha postlayae potralaama boss???

;))))))))))))//

ரிப்பீட்டேஏஏஎ

said...

// G3 said...

Andha pathivukkum commenta indha postlayae potralaama boss???

;))))))))))))//

சொல்லுங்க.. வூடு கட்டி அடிச்சுடலாம்!

said...

ட்ச்ஃப்ச்ட்ஃபச்ட்ஃப்
அச்ட்’ஃப்ட்சஃப்டச்ஃப்டச்
ஃப்டச்க்ஃப்டச் ஹ்ஃப்டச்ஃப்
ட்ச்ஃப்டச்க்ஃப்ஹ்டச்ஃப்
அ’ட்ச்ல்ஃப்
டச்ஜ்ஃப்டச்ஃப்
டச்ல்ஃபச்ட்ஃப்டச்ல்ஃப்
க்ஜ்க்ஃபுஎம்ட்ச்ஃப்க்டச்ஃப்
ட்ச்ஃப்ட்ச்ஃப்ன்ச்கி
ட்ச்ஃப்க்ட்ச்ஜ்ஹ்ஃப்ட்ஃப்ன்வ்
ட்ஃப்ன்க்ட்ச்ஃப்க்ட்ஃப்
ட்ஃப்ல்டச்’ஃப்
ட்ஃப்டச்ஜ்ஃப்டச்;ஃப்டச்
ஃப்ட்ச்ஃப்ட்ச்ஃப்டச்ஃப்
ட்’ஃப்டச்ஃப்டச்ஃப்ட்
ஃப்ர்ட்ந்ரெட்ன்ல்ட்ச்ஃபச்ஃப்
ட்ச்ஃப்ஜ்டச்ஃப்டச்ஃப்
அட்ச்ஃப்’ட்ச்ஃப்ஹ்ட்ச்ஃப்

said...

ஆயில்ஸ் படங்கள் சூப்பர் நம்ம தானைத் தலைவி சரண்யாவின் படம் அசத்தல்

said...

இங்கே கும்மி நடக்குதுன்னு சொன்னாங்க..அதான் பாத்துட்டு போகலாம்னு :))))

said...

//கலக்கல் பாஸ், அப்படியே அந்த லேட்டஸ்ட் போஸ்ட் பின்னூட்டம் திறந்து உடுறது//

கண்ணா பிண்ணானு ரிபீட்டறேன் ;)

said...

பாஸ்..அதுக்கு இவ்ளோ கவலைப்படாதீங்க பாஸ்..எப்படி இருப்பாங்கன்னு சொன்னா நம்ம தமிழ்தாத்தா கண்டுபிடிச்சு கூப்பிட்டு வந்துடுவாரு! இதுக்குபோய் இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு! ;-)

said...

//நாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..?// அது நீங்க என்ன சொல்றீங்கன்ன்றதை பொறுத்து இருக்கு!! :-)) பதில் சொல்லுவாங்களா இல்ல ரெண்டு அடி கொடுப்பாங்களான்னு!!

said...

//பேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது!

ஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(//

உண்மையை சொல்லுங்க பாஸ் - தமிழ்ன்னு தெரிஞ்சா ஓடிப்போறது..மலையாளம்-ன்னு தெரிஞ்சா “அடடா, ஏதாவது பேசணுமேன்னு” ஃபீல் பண்றது..அதானே மேட்டர்!! :-)

said...

அழகு :-)

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கும் இந்த மாதிரி எண்ண ஓட்டங்கள் உண்டு

நல்ல பதிவு. அழகா சொல்லியிருக்கீங்க.
// அய்யோ அமித்து அம்மா...நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நினைக்கலை மேடம்...அவ்வ்வ்வ்..ஆயில்ஸ் சொல்ல வர்ற பாயிண்டே வேறே...:-))..இதுக்கு அப்புறம் போட்டுருக்க இடுகையைப் பாருங்க..எல்லாம் புரியும்..யாருக்கிட்டே பேசாம போனதுக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ்-ன்னு !

said...

Thangachikkum kalyaanam ayiduchu,
Annanukkum kalyaanam ayiduchu, motthathula route clearu, Muthu unnoda feelings puriyudhu, un udanpirappu kitta solli erpaadu pannidalaam.