மீண்டும் எழுதவேண்டும் - தமிழ்நாடு தேர்வு சீரமைப்பு குழு

பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சிக்கு உரிய மதிப் பெண் பெற்றால் அவர்களது மதிப்பெண் சான்றிதழில், "தேர்ச்சி' (PASS) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். போதிய மதிப்பெண் பெறாவிட்டால், "தோல்வி' (FAIL) என்ற சொல்லுக்குப் பதிலாக "மீண்டும் எழுதவேண்டும்' என்ற சொல்லினை அடுத்த வருடத்திலிருந்து மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படுகின்றது! (சரியாக படிக்காதவர்களுக்கு மட்டும்தான்!!!)

"தேர்வில் தோல்வி என்ற சொல் முகத்தில் அடித்தது போல் உள்ளது. இது மாணவனை உளவியல் ரீதியில் பாதிக்கும். எனவே, தோல்வி என்ற சொல்லுக்குப் பதில் "மீண்டும் தேர்வு எழுத வேண்டும்' என்று அறிவிப்பது, மன உளைச்சலைத் தடுக்கும். மாணவர் மீண்டும் தேர்வுக்குத் தயாராவதற்கு ஊக்கம் அளிக் கும்'' என்று உளவியல் வல்லுநர்கள் கூறினர்.

தேர்வு நடைமுறையைச் சீரமைத்து, சில மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் தலைமையிலான குழு ஓர் அறிக்கையை அரசிடம் அளித்தது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தேர்வில் "எந்த வினாவுக்கு எப்படி பதில் எழுதினோம்' என்று நினைவுபடுத்துவதும் மாணவர்களின் மன உளைச்சலுக்கு இன்னொரு காரணம்.
சில சமயம் தான் சரியான விடையை எழுதியிருக்கிறோம் என்று மாணவர்கள் எண்ணிக் கொள்வதுண்டு. மாறாக, சரியான விடை வேறாக இருக்கக்கூடும். இதனால், அவர் எழுதிய விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடுவது உண்டு. தேர்வு முடிவின்போது, சரியான விடை எழுதியும் தவறான மதிப்பெண் வந்துள்ளதே என்று அவர்கள் விரக்தி அடைந்துவிடுகிறார்கள்.

எனவே, எல்லாத் தேர்வுகளும் முடிந்த பின், எந்தெந்த வினாக்களுக்கு எந்தெந்த விடைகள் சரியானவை என்ற விவரத்தை வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவை பல்கலைக்கழக இணையதளங்க ளிலும் வெளியிடப்படக் கூடும்.

இதன்படி, வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர்களே அவற்றின் விடைகளையும் தயாரித்து அளிப்பர். இதன் மூலம், வினாத்தாளைத் தயாரித்தவர் என்ன விடையை எதிர்பார்த்து அதைத் தயாரித்துள்ளார் என்பது தெளிவாகிவிடும்.

விடைத்தாள்களைத் திருத்துவோருக்கு இது எளிதாக அமைந்துவிடும்.இல்லையென்றால், வினாத்தாளைத் தயாரிப்பவர் ஒரு விடையை எதிர் நோக்கி வினாக்களை வடிவமைத்திருப் பார். விடைத்தாளைத் திருத்துபவருக்கு சில சமயம் வேறு விடை தோன்றியிருக்கும். இதனால், தேர்வுத் தாளைத் திருத்தும்போது மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாக நேரும். மேற்கண்ட விவரங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்க லைக்கழக இணையதளங்களிலும் வெளி யிடப்படக் கூடும்.

இந்த யோசனை களை அரசு கவனத்தில் எடுத்துக் கொண் டிருக்கிறது. இவை தீவிரமாக ஆராயப்பட்டு, வரும் பட்ஜெட் தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!


நன்றி - தினமணி

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பயனுள்ள தகவல்கள்.நன்றிகள் நண்பரே:)

said...

நல்ல விஷயம் தான். இந்த அளவுக்கு யோசிச்சவங்களை கண்டிப்பா பாராட்டியே ஆகவேண்டும். அப்படியே மெக்காலே பிரபு கொண்டுவந்த கல்வி திட்டத்தையும் இன்னமும் தொங்கிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அதிலும் புதுமைகளை புகுத்தினால் நல்லா இருக்கும்.

said...

நல்ல தகவல்.

அதெப்படி லேட்ட்ஸ்ட் நீயூஸ் எல்லாம் உடனுக்குடன் எழுதறீங்க.

வாழ்த்துக்கள்.

said...

//புதுகைத் தென்றல் said...
நல்ல தகவல்.

அதெப்படி லேட்ட்ஸ்ட் நீயூஸ் எல்லாம் உடனுக்குடன் எழுதறீங்க.

வாழ்த்துக்கள்.
//
இப்ப நிறைய படிக்க ஆரம்பிச்சாச்சு!

மீண்டும் எழுதவேண்டும்ல :)))))