நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பா! - TVS FLAME


மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட,

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து....!

நெருப்பாய்.....!

போர் விமானங்களை வடிவமைக்க பயன்படுத்தப்படும் டெல்டா டெக்னாலஜியின் அடிப்படையில் தரையில் தவழப்போகிறது டி.வி.எஸ்ஸின் ஃப்ளேம்

ரகளையான விளம்பரம், மட்டுமல்லாமல்,
125 சிசி
DTSi சொல்லப்படற ரெண்டு ஸ்பார்க் இக்னீசியன் செய்ற டெக்னாலஜி,
லிட்டருக்கு 82 கிலோ மீட்டர் மைலேஜ்,
டிஜிட்டல் டிஸ்பிளே,
மூன்று வால்வுகளில் இயங்கும் CC-VTi இன்ஜின் (இப்பத்தான் இந்தியாவுலயே அறிமுகமாகிறதாம்!)
கருப்பு தீம்!
என எல்லாமே பிகர்களை கரெக்ட் பண்ணவே, கணக்கு பண்ணி செஞ்ச மாதிரி ஒரு பீலிங்ஸ் :)

சரி லீவுக்கு வந்ததுதான் வந்தோம்! இந்த வண்டியை வாங்கிட்டு புல்லட்டு பாண்டி கணக்கா ஊரைசுத்துவோமேன்னு ஒரு ஆசை!

அதுவும் வாங்கின உடனேயே அந்த ஏவிசி காலேஜ் பஸ்ஸ ஒவர்டேக் பண்ணனும் ஒரு தீர்மானம் போட்டாச்சு ( ஆரம்பிச்ச ஒரு ஆசை இப்படியாக கிளை விட்டுக்கொண்டே போனது!)

டிவிஎஸ் டீலர்கிட்ட போய் வண்டி மாடலை சொன்னால் ஒரு மாதிரி எல்லோரும் திருதிருவென முழித்து இல்ல சார் இன்னும் வர்லை என்ற பதிலை தர ச்சேவென்று ஆகிவிட்டது!

அப்புறம்தான் தெரிஞ்சுது டிவிஎஸ் பைக் ரீலிஸ் பண்ணக்கூடாதுன்னு பஜாஜ் கம்பெனிக்காரன் ஸ்டே வாங்கிட்டான்னு!?

சரி அப்புறம் என்ன பண்ண முடியும்? கனவுக்கோட்டைகள் தகர்ந்து ஏவிசி பஸ் என்னைவிட்டு ரொம்பத்தூரம் போய்க்கொண்டிருந்தது- இருக்கிறது!

லீவு முடிஞ்சுப்போச்சு!

டி.வி.எஸ் கம்பெனியும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு,இந்த வாரம் திரும்பவும் பைக் ரீலீஸ் பண்ணப்போகுது!

வண்டி வாங்கப்போற பசங்களே....!

நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பா!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

// லிட்டருக்கு 82 கிலோ மீட்டர் மைலேஜ், //

நல்ல காமெடி! லிட்டருக்கு 105 கொடுக்கும்னு பிராடு விளம்பரம் போட்ட சென்ட்ராவுக்கு 35 கூட வரமாட்டேங்குது. வாங்கி ஏமாந்தவர் என் மாமா.