நாம் மறந்த மறத்தமிழர்கள் :-(

அரசவை புலவர்கள் என்ற பதம் அனைத்து வரலாற்று கதைகளிலும் ஆவணங்களிலும்,இன்ன பிற விஷயங்களிலும், அதிகம் பார்த்திருப்பீர்கள்!

அரசனை புகழ்ந்து பரிசு பெற்று தம் வாழ்க்கையினை கழித்து கொண்டனர் என்பது தகவலாக இருக்கும் பட்சத்தில், தமிழுக்காக தொண்டாற்றி பல பாடல்களை பாடி,தமிழையும் வாழவைத்தவர்கள்தான்!

ஆனாலும் அவர்களில் பெரும்பாலனோரின் பெயர்களோ அல்லது வரலாற்று செய்திகளோ அவ்வளவாக கிடைக்கவும் இல்லை. அதற்கு அவர்களே காரணமாகவும் அமைந்தது ஒரு சோகம் தான்!

பண்டைய புலவர்கள் பாடிய பாடல்கள் பல, அவையனைத்தும் ஆளும் அரசனை பற்றியோ அல்லது அந்நாட்டினை பெருமைப்படுத்தும் பொருட்டோ பாடல்கள் பாடி பரிசில் பெற்று சென்றனர்! அவற்றுள் ஒன்றும் அவர்கள் தம் வரலாறு சொல்லும் உள்ளுணர்வு கொண்டு இயற்றப்படவில்லை!

யார் யாரையோ பற்றி பாடியவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சிறு பகுதியை கூட பாட்டாக வெளிப்படுத்த தவறியிருந்தனர்!

அவர்களின் பாடல்களின் மூலம் புகழப்பெற்ற அரசர்களின் பெயர்கள் அறிந்த நமக்கு அப்புலவர்களின் பெயர்கள் தெரியாமல் போனது சோகமான விஷயம் தான்!

பழங்காலத்து புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதில் நம் ஆராய்ச்சியாளர்கள் - தாய் தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள்- மண்டை காய்ந்ததுதான் மிச்சம்!

சிலரது பாடல்களில் தாம் வாழ்ந்த ஊர்களின் பெயரை வைத்து அவர்களக்கு அந்த ஊரின் பெயராலயே அழைத்து வந்தனர்.

சிலரது பாடல்களி இத்தகவல்களுமின்றி அப்பாடல்களில் வெளிப்பட்ட அப்புலவர்களின் உவமை வரிகளை வைத்தே அப்புலவர்களுக்கு உவமை பெயர்களை அமைத்தனர்! தாய் தமிழில் ஆர்வம் கொண்டிருந்த நம் முன்னோர்கள்!

அப்படியான சில உவமையாற் பெயர் பெற்ற புலவர்கள் பெயர்கள்!

அணிலாடுமுன்றிலார்
ஒரேருழுவா
கயமனார்
கல்பொருசிறுதுரையார்
கலைமகனார்
காலெறி கடிகையார்
குப்பைக்கோழியார்
கூவன்மைந்தன்
செம்புலபெயனீராம்
தனிமகனார்
தேய்புசிப்பழங்கயிற்றினார்
மீனெறி தூண்டிலார்
விட்ட குதிரையார்
வில்லகவிரலினார்

குறிப்பு:- விடுமுறையில் எதாவது செய்யவேண்டும் என்ற (பிளாக்) ஆர்வத்தில் நிறைய புத்தகங்களின் தூசி தட்டல்களில் கிடைத்த விஷயங்களில் மிக விசேஷமானதானது இந்த செய்தி! யாருக்காவது இந்த உவமை பெயர்களின் விளக்கம் தெரிந்தால் விளக்குங்களேன்!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

\\குறிப்பு:- விடுமுறையில் எதாவது செய்யவேண்டும் என்ற (பிளாக்) ஆர்வத்தில் நிறைய புத்தகங்களின் தூசி தட்டல்களில் கிடைத்த விஷயங்களில் மிக விசேஷமானதானது இந்த செய்தி! \\

தல

உங்கள் முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள் ;)

said...

நல்ல முயற்சி தான். ஆனால் இதற்கு பதில் தான் இல்லை :)