மார்ச் 22 - தமிழ்நாட்டில் தண்ணீர் நாள்


உலகம் முழுவதும் தற்போது மிகுந்த கவனத்தை பெற்று வரும் விஷயம் இயற்கை வளங்களின் பாதிப்புகள் பற்றித்தான்..!

நம்க்கு - தமிழ்நாட்டில்-அவ்வளவாக நமக்கு தெரிகிறதோ அல்லது சரியாக,செய்தி வந்து அடைவதில்லையோ! அது ஊடகங்களின் உள்ளங்களை பொறுத்து அமைகின்றன!

இன்று மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் ஒரு நிகழ்ச்சியினை இளையதலைமுறையின் ஈடுபாட்டில் உருவான கிராமலயா முன்னின்று நடத்தவிருக்கிறது!

சுற்றுவட்டாரத்திலுள்ள 430 கிராமங்களிலிருந்து சுமாராக 20000க்கும் மேற்பட்ட பெண்களும், மேலும் திருச்சியில் உள்ள குடிசை வாழ் பகுதிமக்களும் பங்கு பெறும் வகையில் இந்நிகழ்ச்சியினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது!

நிகழ்ச்சியினை நேரடி ஒளிபரப்பு செய்ய சூரியன் எப்.எம் முன்வந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்தான்!


சரி இதெல்லாம் நடக்கட்டும் நாம் என்ன செய்யவேண்டும் இந்நாளில் என்று கேட்பவர்களுக்கு...!

இன்றைக்கு நீங்க தண்ணீரை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் தண்ணீரை பற்றியும்,அது சரிவர கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களை பற்றியும்,ஒருகாலத்தில் நமக்கே தண்ணீர் தேவை அதிகமாகி போனால் என்னவாகும் என்று சிந்தியுங்களேன்!

0 பேர் கமெண்டிட்டாங்க: