சிந்தால் (அல்லது) சின்தால் ஓல்டு :)


1952 களில் சுதேசி நிறுவனமான கோத்ரேஜ்ன் அட்டகாசமான படைப்புத்தான் சிந்தால(சிண்டால்) சோப்!

இந்தியாவின் முதல் டியோடரண்ட் சோப் என்ற பெயருடன் வணிகரீதியில் முன்னிடத்திற்கு வெகு விரைவிலேயே வந்து சேர்ந்தது !

காலங்கள் மாறிக்கொண்டிருக்க கோத்ரேஜ் கம்பெனியினருக்கே சற்று கவலையளித்திருக்கும்போல எத்தனை வருடங்களுக்க்குத்தான் ஒரே பிராண்ட்டில் வண்டி ஓட்டுவது என்று, அப்படி நினைத்துதான் அவர்கள்1990களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய சிந்தால் லைம் ஃப்ரெஷ் !

வணிக ரீதியில் சிந்தால் பெயரால் கொஞ்சம் ஒட்டம் இருந்தாலும்,நுகர்வோர்கள் -உண்மைதான் சிந்தாலை நுகர்ந்தவர்கள்தான் அதிகம்! விருப்பத்தின் படியே மீண்டும் சிவப்பு நிறச்சிந்தால் திரும்ப தன் விற்பனை இடத்தில் முன்ணனியை பிடித்தது, தொடர்ந்துக்கொண்டிருக்கின்ற சூழலில்,பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளுக்கு இடையிலும்,விதவிதமான சோப்புகள்,திரவ வடிவிலும் வந்து கலக்கிக்கொண்டிருக்கின்ற நிலையிலும் தற்போதைய சிந்தாலின் நிலைமை கோத்ரேஜ் கம்பெனியினரை சிந்திக்க வைத்துவிட்டது!

தற்போது, ரொம்பத்தான் படுத்து போகவிடிலும், எதிர்காலத்தில் மார்கெட் நிலவரங்களை சோகமான செய்தியையே வரவழைக்கும் எனவே, இச்சமயத்திலேயே விளம்பரங்களை மையப்படுத்தி சோப்பின் விற்பனையை அதிகரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறது கோத்ரேஜ் கம்பெனி!

அந்த காலத்து அரவிந்த சாமியின் சிந்தால் விளம்பரம், ஆரம்ப காலத்து ஏ.ஆர்.ரகுமானின் இசையில்...!



குறிப்பு: விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்தாமல்,தாவர எண்ணெயின் மூலம் தயாரிக்கப்படுவதாலும்.இந்தியாவிலேயே தயாராவதாலும் சுதேசி டைப்பு ஆசாமிகள் நிச்சயம் டிரைப்பண்ணலாம்!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்புறம் இன்னொரு விஷயம் - நிறைய தோல் மருத்துவர்கள் இந்த சோப்பை பரிந்துரைக்கிறார்கள். சருமத்திற்கு உகந்தது என்று.

ஓல்டு இஸ் கோல்டு தான் போலிருக்கு ஓல்டு சிந்தால் விஷயத்துல.

said...

நானும் ஓல்டு சிந்தால் தான் உபயோகிக்கிறேன். குளிக்கிறதுக்கு.. மத்தவுங்களுக்கு இல்லை ;)

said...

///கைப்புள்ள said...
ஓல்டு இஸ் கோல்டு தான் போலிருக்கு ஓல்டு சிந்தால் விஷயத்துல.///


ரிப்பீட்ட்ட்டேய்

said...

///சிந்தாலை நுகர்ந்தவர்கள்தான் அதிகம்! ////


கடையில சோப்ப எடுத்து பாத்து நுகர்ந்தவங்கள தானே சொல்லுறீங்க.

said...

///கைப்புள்ள said...
அப்புறம் இன்னொரு விஷயம் - நிறைய தோல் மருத்துவர்கள் இந்த சோப்பை பரிந்துரைக்கிறார்கள்.////


ஆமாங்க. அப்படியே மார்கோ சோப் கூட பரிந்துரைக்கிறாங்க.

said...

///இந்தியாவிலேயே தயாராவதாலும் சுதேசி டைப்பு ஆசாமிகள் நிச்சயம் டிரைப்பண்ணலாம்!////


ஆயிலு அண்ணே நாம எல்லாம் சுதேசியா இல்ல விதேசியா?

said...

சிந்தால் அதுவும் சிவப்பு சிந்தால் தான் சருமத்துக்கு நல்லதுன்னு ஒரு முறை என் பொண்ணுக்குக்கூட எதோ அலர்ஜி ஆனப்போ டாக்டர் சொன்னாங்க ...

said...

இது என்ன கொசுவத்தி பதிவா!!!!