விட்டு விலகும் சூப்பர்ஸ்டார் !


சரியாக கடந்த 7 மாதங்கள் உற்ற தோழனாய்,

பாதி நேரங்களில் தன் அன்பு வலைக்குள் சிக்க வைத்து,

என் நினைவலைகளுக்கு மருந்திட்டவனாய்,

தமிழ் சினிமா பாடல்கள் ஒலிபரப்பில் சிகரமாய்

சிறு மணித்துளிகள் கூட இடைவெளியின்றி,

சில நேரங்களில் சோகத்தின் சொரூபமாய்,

தமிழ் சினிமாபாடல்களில் சிந்திக்க தூண்டியவனாய்,

தமிழ் சினிமாபாடல்களால் துன்பத்தை தூண்டியவனாய்,

தமிழ் சினிமாபாடல்களால் இன்பத்தை தன் வசமாய் வைத்திருந்த,

என் 24 மணி நேரத்தில், உறங்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில்,

மனதை மகிழ்வித்து வந்த இணைய வானெலியாய் என் இதயம் வந்து சேர்ந்தவன்!

இன்னும் சில தினங்களில் என்னிடமிருந்து விடைப்பெறப்போகும் சூப்பர் ஸ்டார் எப்.எம் 24 மணி நேர வானொலிக்கு

இத்தருணத்தில்தானே சொல்ல வேண்டும்!

நன்றி!!!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எனக்கும் ரொம்ப பிடித்த வானொலி :(