Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

அதெல்லாம் முடியாது நான் படிக்கணும்!




தேவையா இதெல்லாம்...!

தேவையே இல்லை!

கட்டாயமும் கிடையாது!

அட நல்ல பேரும் கூட வராதுங்க!

அப்புறம் எதுக்குங்க இந்த கிழவன் நான் படிச்சே ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிறாரு...?

அதான் மேட்டரூ!

ஒரு விசயத்துமேல ஆசை வைச்சுட்டாரு அதை அடைஞ்சே தீருவேன்னு முடிவும் பண்ணிட்டாரு! அதிகாரமா கேட்கறதுக்கும் ஆள் இல்லாதப்ப படிச்சு பார்த்துடவேண்டியதுதானேன்னு களமிறங்கிட்டாரு! ஆனாலும் இத்தனை வருசமாவா படிக்கிறாருன்னு எல்லாருமே மூக்கு மேல விரலு வைக்கிற அளவுக்கு மனுசன் திரும்ப திரும்ப படிச்சிக்கிட்டே இருக்காரு! பரீட்சை எழுதிக்கிட்டே இருக்காரு!

இன்னும் சொல்லப்போனா விசு படத்து வசனத்தை கூட நாம இவருக்காக யூஸ் பண்ணிக்கிலாம்!

பரீட்சை எழுதினார்;
பரீட்சை எழுதுகிறார்;
பரீட்சை எழுதுவார் - இறைவன் கருணையிலால்......!

ஆனாலும் கூட இவுரு இத்தினி வருஷம் படிச்சுக்கிட்டே ( சரியா படிக்கலைன்னாம் கூட படிச்சிக்கிட்டித்தான் இருக்காரம்!) பரீட்சை எழுதினாலும்,கூட ஆசிரியர்களும் கொஞ்சம் கூட பெருந்தன்மை காட்டாம எழுது ராசா! எழுதுன்னுத்தான் இன்னுமும் பெயிலாக்கிக்கிட்டே வராங்களாம்! :( (அந்தளவுக்கு அவரது படிப்பு இருக்கறது வேற விஷயம்! - உலகத்திலேயே அதிகமான முறை ஒரே கிளாஸ்ல பெயிலான ஆளு இவராத்தான் இருக்கும் போல!)

எல்லாத்துக்கும் மேல கிட்டதட்ட 78 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம - படிப்பை கல்யாணம் பண்ணிக்கிட்ட - பரீட்சை எழுதி பாஸ் பண்ணிட்ட பிறகுதான் கல்யாணமே பண்ணிப்பேன்னு சொல்ற இந்த தாத்தா சிவ சரண் ராஜஸ்தான் இருக்காரு 1969ல பரீட்சை எழுத ஆரம்பிச்சவராம்!

சரி தாத்தா ஒரு வேளை அப்படியே நீங்க பாஸ் பண்ணிட்டாலும் இப்ப இந்த வயசுல போய் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கானு கேட்டதுக்கு அவுரு சொன்ன பதில்!

கண்டிப்பா அதுக்குத்தானே இத்தினி வருஷமா கஷ்டப்பட்டு படிக்கிறேன்! ஒரு 20 - 25 வயசுக்குள்ள இருக்கற பொண்ணா பார்த்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்! (என்னா நெனைப்பு பாருங்களேன்!!)

அது எப்படியோ போகட்டும்! கல்வி மேல இம்புட்டு ஆசை வைச்சிருக்கற இந்த தாத்தா கண்டிப்பா இந்த வருசமாவது பாஸ் பண்ணட்டும்ன்னு நாம சாமிக்கிட்ட வேண்டிக்குவோம்!

மீண்டும் எழுதவேண்டும் - தமிழ்நாடு தேர்வு சீரமைப்பு குழு

பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சிக்கு உரிய மதிப் பெண் பெற்றால் அவர்களது மதிப்பெண் சான்றிதழில், "தேர்ச்சி' (PASS) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். போதிய மதிப்பெண் பெறாவிட்டால், "தோல்வி' (FAIL) என்ற சொல்லுக்குப் பதிலாக "மீண்டும் எழுதவேண்டும்' என்ற சொல்லினை அடுத்த வருடத்திலிருந்து மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படுகின்றது! (சரியாக படிக்காதவர்களுக்கு மட்டும்தான்!!!)

"தேர்வில் தோல்வி என்ற சொல் முகத்தில் அடித்தது போல் உள்ளது. இது மாணவனை உளவியல் ரீதியில் பாதிக்கும். எனவே, தோல்வி என்ற சொல்லுக்குப் பதில் "மீண்டும் தேர்வு எழுத வேண்டும்' என்று அறிவிப்பது, மன உளைச்சலைத் தடுக்கும். மாணவர் மீண்டும் தேர்வுக்குத் தயாராவதற்கு ஊக்கம் அளிக் கும்'' என்று உளவியல் வல்லுநர்கள் கூறினர்.

தேர்வு நடைமுறையைச் சீரமைத்து, சில மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் தலைமையிலான குழு ஓர் அறிக்கையை அரசிடம் அளித்தது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தேர்வில் "எந்த வினாவுக்கு எப்படி பதில் எழுதினோம்' என்று நினைவுபடுத்துவதும் மாணவர்களின் மன உளைச்சலுக்கு இன்னொரு காரணம்.
சில சமயம் தான் சரியான விடையை எழுதியிருக்கிறோம் என்று மாணவர்கள் எண்ணிக் கொள்வதுண்டு. மாறாக, சரியான விடை வேறாக இருக்கக்கூடும். இதனால், அவர் எழுதிய விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடுவது உண்டு. தேர்வு முடிவின்போது, சரியான விடை எழுதியும் தவறான மதிப்பெண் வந்துள்ளதே என்று அவர்கள் விரக்தி அடைந்துவிடுகிறார்கள்.

எனவே, எல்லாத் தேர்வுகளும் முடிந்த பின், எந்தெந்த வினாக்களுக்கு எந்தெந்த விடைகள் சரியானவை என்ற விவரத்தை வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவை பல்கலைக்கழக இணையதளங்க ளிலும் வெளியிடப்படக் கூடும்.

இதன்படி, வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர்களே அவற்றின் விடைகளையும் தயாரித்து அளிப்பர். இதன் மூலம், வினாத்தாளைத் தயாரித்தவர் என்ன விடையை எதிர்பார்த்து அதைத் தயாரித்துள்ளார் என்பது தெளிவாகிவிடும்.

விடைத்தாள்களைத் திருத்துவோருக்கு இது எளிதாக அமைந்துவிடும்.இல்லையென்றால், வினாத்தாளைத் தயாரிப்பவர் ஒரு விடையை எதிர் நோக்கி வினாக்களை வடிவமைத்திருப் பார். விடைத்தாளைத் திருத்துபவருக்கு சில சமயம் வேறு விடை தோன்றியிருக்கும். இதனால், தேர்வுத் தாளைத் திருத்தும்போது மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாக நேரும். மேற்கண்ட விவரங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்க லைக்கழக இணையதளங்களிலும் வெளி யிடப்படக் கூடும்.

இந்த யோசனை களை அரசு கவனத்தில் எடுத்துக் கொண் டிருக்கிறது. இவை தீவிரமாக ஆராயப்பட்டு, வரும் பட்ஜெட் தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!


நன்றி - தினமணி