பெண்ணே நீயும் பெண்ணாய்...!?


அழகான பெண்களின் புகைப்படங்களை ஏந்திய பத்திரிக்கை முகப்புகளுடன் தம் பொது ஜனத்தொடர்பில் தம் சமூக பொறுப்பினை தவறாமல் செய்துவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தினசரி பத்திரிக்கைகள் பார்த்த பட்சத்தில் பெண்களுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும் நேற்றைய தினம்!

பத்திரிக்கையின் மறுபக்கத்தை திறக்கும்போதே, மற்ற செய்திகளுக்கு தாவிடும் மனம் படைத்தவர்கள் இருக்க்கும் நாடுதானே நமது நாடும்!

இது போன்ற மாற்று மனத்தில் நம்மால் - ஆண்களையும் பெண்களையும் கொண்ட சமூகத்தால்- இவ்வுலகுக்கு வராமலே திரும்பி செல்லும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை தெரியுமா?

கொஞ்சம் அதிரத்தான் செய்கிறது இந்தியாவில் கருவிலேயே கொல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை!

உடல்நலம் கெடுதல்,வியாதிகளில் நம் நாட்டின் பெண்கள் ஆப்பிரிக்கா நாட்டு பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்! (ஆப்பிரிக்காவில் சரியான மருத்துவ வசதியின்றி இறக்கும் பெண்கள் குழந்தைகள் பற்றிய செய்திகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம்!)

பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டு கொல்வதை மிகச்சிறந்த பிசினஸாக சில மருத்துவர்கள் செய்து கை மேல் பலன்(பணம்) அடைந்து வருவதையும்,ஒரு தன்னார்வ நிறுவனம் செய்திகளை சேகரித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது!

சாப்ட்வேர் சிட்டி என்றழைக்கப்படும் பெங்களூருவில்,கருக்கலைப்பு பிசினஸ் நல்ல லாபகரமான தொழிலாக உள்ளதாம்!

இத்தனைக்கும் இந்தியாவில் கருவிலேயே அடையாளம் காண்பது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது!

இதற்கும் சில கோர்வேர்ட்கள் பயன்படுத்திகிறனராம் பெங்களூரின் மெத்த படித்த மருத்துவர்கள்!

ஆண் என்றால் இனிப்பான செய்தியாகையால் உறவினர்களை இனிப்பு வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார்களாம்!

இதுவே பெண்ணாக இருந்தால் காரம் நிறைந்த திண்பண்டமான மிக்ஸர் வாங்கி வரச்சொல்கிறார்களாம்!

இன்னும் சிலர் மை (பச்சை சிவப்பு) போட்டு காண்பிப்பது போன்ற பல டெக்னிக்குகளை பயன்படுத்தி நல்ல சம்பாத்தியம்தானாம்!

அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும் எதுக்கும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது!

படித்தவர்கள் சரியாக இருந்தால் போதுமே, படிக்காதவர்களை சரியான வழிமுறை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடலாமே ?!?!கடைசியாக மத்திய அரசின் சுகாதாரத்துறை இணை அமைச்சர் சொன்னது “ கல்யாணத்தில் ஏழுமுறை, அக்னியை சாட்சியாக்கி சமூகத்திற்கு தம்மை குடும்ப உறவாக காட்டிக்கொள்ள சுற்றி வரும் மணமக்கள் எட்டாவது சுற்றாக,தாம் பெறப்போகும் பிள்ளை எதுவாயினும் கண்டிப்பாக பெற்று வளர்ப்போம்” என்ற உறுதிமொழியையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்!

அதுவும் சரிதானே!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தம்பி! ஆயில்யா, நீ என்கிட்ட சொன்ன ரகசிய பொண்ணு இந்த போட்டோவிலே இருக்குதா? அது எந்த பொண்ணுன்னு எனக்கு மட்டும் ரகசியமா ஜொல்லுப்பா:-))

said...

கருக்கலைப்பு என்பதும் ஒரு விதக் கொலை தான். தண்டனைகள் கடுமையாகும் போது தான் இது போன்ற செயல்கள் குறையும். அதேசமயம் மக்களிடையே சமூக விழிப்புணர்ச்சியும் முக்கியம்.

said...

// அபி அப்பா said...
தம்பி! ஆயில்யா, நீ என்கிட்ட சொன்ன ரகசிய பொண்ணு இந்த போட்டோவிலே இருக்குதா? அது எந்த பொண்ணுன்னு எனக்கு மட்டும் ரகசியமா ஜொல்லுப்பா:-))
//
அண்ணாத்தே என் மேல எதாவது கோபம்ன்னா பேசி தீர்த்துப்போம் அத விட்டு இப்படியா சொல்றது!

நல்லா இல்லை :-(

இந்த தம்பி சொன்னது அண்ணனுக்கு புரிஞ்சிருக்கும் :))

said...

///அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும் எதுக்கும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது!///அரசாங்கங்கள் பல நேரங்களில் நல்ல திட்டங்களைத்தான் தீட்டுகின்றன. ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் இடத்தில் குறுக்கே நிற்கும் நந்திகளை அப்புறப்படுத்தாதவரையில் திட்டங்கள் எல்லாம் ஏட்டளவில் மட்டுமே