எவ்வளாவோ முயற்சிகள் மேற்கொண்டும், இன்னும் இந்த கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!
அழகிய பூவினை கொடுக்கும் அந்த செடிக்குள்ளும் ஒரு கொடூர விஷத்தைக்கக்கும் பாலைப்போல, இன்றும், அழகிய பூவினை பெற்றுக்கொடுத்து பின் அந்த பூவினை கொடூர மனத்துடன் விஷம் கொடுத்து கொல்லும் பெண் மனங்களும் உலாவிக்கொண்டிருக்கும் தேசமாகிப்போனது,நம் தேசம் என்பது சோகம்தான்!
கருக்கலைத்தல் மிகச்சிறிய வேலையாம்,ரிஸ்க் ஃப்ரீயாம்!டாக்டர்களுக்கு மிகப்பெரிய லாபமாம்..! என்ன மாதிரியான ஒரு சேவையினை சில டாக்டர்கள் செய்கிறார்கள் பாருங்களேன்..!:(
வருடத்திற்கு சுமாராக 11.2 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கொலைகள் மிகசர்வசாதாரணமாக நடைபெறுகிறதாம் இந்தியாவில்...!
சேலம் மாவட்டத்தில் மிகப்பிரபலமான விஷயமாக, இந்த சிசுக்கொலை விஷயங்கள் இன்னும் இருந்துவருகிறது! இத்தனைக்கும் அரசுத்துறையும்,அங்கு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இது தவிர தனியார் தன்னார்வ நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருந்தாலும்,கூட இந்த சிசுக்கொலைவிஷயத்தில் இருளில் அடைப்பட்டுதான் கிடக்கின்றனர் அனைவரும்!
சில பல இடங்களில் பொது விளம்பரங்களாக தெரியும் 500க்கு சிசுக்கொலை சாத்தியம்! இல்லையேல் கல்யாண செலவில் 50000 சத்தியம்! என்ற பயமுறுத்தல்களும், பொதுச்சேவையாக செய்யப்படும் வழக்கமும் உண்டாம்!
நமது சமூக,பண்பாடு மற்றும் இன்னபிற சமாச்சாரங்களில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பழங்காலத்தில் இருந்திருந்தாலும்,
இன்றைய நடைமுறை விஞ்ஞான வாழ்க்கையில், அஞ்ஞான இருளில் கிடந்து உழலும் பாமர மக்களின் அறிவை வளர்க்க வேண்டிய,
அக இருளை அகற்ற வேண்டிய கடமை அரசுக்கும் & ஊடகங்களுக்கும் தான் உண்டு !
ஆனாலும் அதைப்பற்றிய கவலை இன்றி அவைகளின் காலைகளும் மாலைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன!
காவியத்தில் மாலை சூட வேண்டிய சிசுக்கள்,
கல்லறை மாலை சூடி உறங்கிக்கொண்டிருக்கின்றன :(((((
கருவின் குற்றமா? - சிசுக்கொலை
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
Labels: என் உள்ளத்தில், பெண்
பெண்ணே நீயும் பெண்ணாய்...!?
அழகான பெண்களின் புகைப்படங்களை ஏந்திய பத்திரிக்கை முகப்புகளுடன் தம் பொது ஜனத்தொடர்பில் தம் சமூக பொறுப்பினை தவறாமல் செய்துவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தினசரி பத்திரிக்கைகள் பார்த்த பட்சத்தில் பெண்களுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும் நேற்றைய தினம்!
பத்திரிக்கையின் மறுபக்கத்தை திறக்கும்போதே, மற்ற செய்திகளுக்கு தாவிடும் மனம் படைத்தவர்கள் இருக்க்கும் நாடுதானே நமது நாடும்!
இது போன்ற மாற்று மனத்தில் நம்மால் - ஆண்களையும் பெண்களையும் கொண்ட சமூகத்தால்- இவ்வுலகுக்கு வராமலே திரும்பி செல்லும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை தெரியுமா?
கொஞ்சம் அதிரத்தான் செய்கிறது இந்தியாவில் கருவிலேயே கொல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை!
உடல்நலம் கெடுதல்,வியாதிகளில் நம் நாட்டின் பெண்கள் ஆப்பிரிக்கா நாட்டு பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்! (ஆப்பிரிக்காவில் சரியான மருத்துவ வசதியின்றி இறக்கும் பெண்கள் குழந்தைகள் பற்றிய செய்திகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம்!)
பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டு கொல்வதை மிகச்சிறந்த பிசினஸாக சில மருத்துவர்கள் செய்து கை மேல் பலன்(பணம்) அடைந்து வருவதையும்,ஒரு தன்னார்வ நிறுவனம் செய்திகளை சேகரித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது!
சாப்ட்வேர் சிட்டி என்றழைக்கப்படும் பெங்களூருவில்,கருக்கலைப்பு பிசினஸ் நல்ல லாபகரமான தொழிலாக உள்ளதாம்!
இத்தனைக்கும் இந்தியாவில் கருவிலேயே அடையாளம் காண்பது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது!
இதற்கும் சில கோர்வேர்ட்கள் பயன்படுத்திகிறனராம் பெங்களூரின் மெத்த படித்த மருத்துவர்கள்!
ஆண் என்றால் இனிப்பான செய்தியாகையால் உறவினர்களை இனிப்பு வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார்களாம்!
இதுவே பெண்ணாக இருந்தால் காரம் நிறைந்த திண்பண்டமான மிக்ஸர் வாங்கி வரச்சொல்கிறார்களாம்!
இன்னும் சிலர் மை (பச்சை சிவப்பு) போட்டு காண்பிப்பது போன்ற பல டெக்னிக்குகளை பயன்படுத்தி நல்ல சம்பாத்தியம்தானாம்!
அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும் எதுக்கும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது!
படித்தவர்கள் சரியாக இருந்தால் போதுமே, படிக்காதவர்களை சரியான வழிமுறை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடலாமே ?!?!
கடைசியாக மத்திய அரசின் சுகாதாரத்துறை இணை அமைச்சர் சொன்னது “ கல்யாணத்தில் ஏழுமுறை, அக்னியை சாட்சியாக்கி சமூகத்திற்கு தம்மை குடும்ப உறவாக காட்டிக்கொள்ள சுற்றி வரும் மணமக்கள் எட்டாவது சுற்றாக,தாம் பெறப்போகும் பிள்ளை எதுவாயினும் கண்டிப்பாக பெற்று வளர்ப்போம்” என்ற உறுதிமொழியையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்!
அதுவும் சரிதானே!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: பெண்