அன்று கொண்டாடிய சுதந்திரம்..!

Photo Sharing and Video Hosting at Photobucket
மாலை நேரங்களில் வகுப்புகள் முடிய ஒரு மணி நேரத்துக்கு முன்பாக எங்க ஒண்ணாம் கிளாஸ் டீச்சர் வந்து எங்க கிளாஸ் பொம்பளை புள்ளைங்களுக்கு கூட்டிட்டு போய் ஜன கண மண டிரெயினிங் கொடுக்கும் போதுதான், நாங்கள் தெரிந்துகொள்வோம் ஆஹா குடியரசு தினமே இல்லை சுதந்திர தினமோவரப்போகுதுன்னு!
கரெக்டா சுதந்திரதினத்திற்கு இரண்டு நாள் முன்பிலிருந்தே எங்க மூணாம் வகுப்பு சார் மதியத்தில எல்லா கிளாஸ் பசங்களையும் ஒண்ண உக்கார வைச்சு,சுதந்திர அடைஞ்சத பத்தி கதை சொல்ல ஆரம்பிப்பாரு! அது மாதிரி கதைகளின் மூலம்தான் காந்தியும் நேருவும் எங்களுக்கு ரொம்ப பழக்கமானார்கள்.திருப்பூர் குமரன் கதை சொல்லும்போதும் சரி,பகத்சிங் கதை சொல்லும்போதும் சரி,நாம நேராவே பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங் உண்டாகும்!

அந்த மாதிரி ஒரு கதையால மனசுல பதிஞ்சவருதான் காந்திஜி

அதுவும் காந்தி வீட்டை விட்டு லண்டன் போறப்ப அம்மாவிடம் வாக்குறுதி கொடுத்து போறத சொல்லும் போது ,

சார்:- காந்தி லண்டன் போறப்ப அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்தாரு
எங்களை பார்த்து, என்ன கொடுத்தாரு?

நாங்க:- வாக்குறுதி கொடுத்தா சார் (கோரஸாக)

மூணாம் சார்: என்ன வாக்குறுதி - ஊண் உண்ணமாட்டேன் - சொல்லுங்கடா!

நாங்க:- ஊண் உண்ண மாட்டேன் (கோரஸாக)

மூணாம் சார்:- மது அருந்த மாட்டேன்

நாங்க:- மது அருந்தமாட்டேன் (கோரஸாக)

மூணாம் சார்:- பொய் சொல்லமாட்டேன்

நாங்க :- பொய் சொல்லமாட்டேன் (கோரஸாக)

இது சொல்லி போய் அவரு அப்படியே நடந்துக்கிட்டாரு நீங்களும் அதுபோல எனக்கு வாக்கு கொடுத்த மாதிரி நடந்துக்கணும் புரிஞ்சுதா..!அந்த டைம்ல தலையாட்டிக்கிட்டு வந்தாலும், ரொம்ப கஷ்டமான விஷயம் வெளிநாட்ல இந்த விஷயங்கள கடைபிடிக்கறது!

முதல் நாளே சாயந்திரம் ஸ்கூல் பரபரப்பாகிவிடும் கிரவுண்ட சுத்தம் பண்ணி வருஷத்துக்கு ரெண்டு தடவை மட்டுமே திறக்கும் மாடிகதவை திறந்து, மொட்டை மாடியை பயந்துக்கிட்டே சுத்தம் பண்ணி,(ஊருலயே மெட்டை மாடி,கிரவுண்டோட இருந்த எலிமெண்டிரி ஸ்கூல் எங்க ஸ்கூல்தாம்ல!)அந்த மொட்டை மாடியில ஒரு பக்கம் தான் சுவரு, மத்த பக்கத்துக்கு போன அப்படியே கிழே ஈஸியா கிரவுண்டுக்குள்ள விழுந்துடலாம்!

காலையிலேயே எழுந்திருச்சி கடைக்கு ஓடிப்போயி சிக் ஷாம்பு (அப்பத்தான் அது அறிமுகமான நேரம்) வாங்கி தலை குளிச்சி 6.30க்கு பள்ளிக்கூடத்துல ஆஜராகிடுவோம்.

சில பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லாரும் வரிசையா வகுப்பிலேயே உட்கார வைச்சு,கொடியேத்தற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி மாடிக்கு ஏத்துவாங்க! லைன்கட்டிப்போயி,லைன் கட்டிநின்னு,லைன் கட்டி மிட்டாய் வாங்கி,லைன் கட்டி திரும்பின பிறகுதான் எங்களுக்கு ஃபீரிடம் கிடைக்கும்!

இதுல ஸ்பெஷல்னு சொன்னா மிட்டாயும் கொடியேத்துறவங்க சொல்ற எதாவது ஒரு கதையும்தான்!

டீச்சர் புள்ளங்கறதால எனக்கு மட்டும் புள்ளை கடை பூரி செட் கிடைக்கும்!இதே காரணத்தால எனக்கு கிடைக்கிற நெறைய மிட்டாய நான் வாங்கி கால் சட்டை மேல் சட்டைன்னு நெறப்பி வைச்சுக்குவேன்.

அடுத்த நாள் அம்மா துணி துவைக்கும்போது வரும் வித விதமான சாயங்கள்தான் எனக்கு ஞாபகப்படுத்தும், ஆகா. நம்ம மிட்டாயெல்லாம் வீணாகிப்போச்சேன்னு..!

கொஞ்சம் பெரிய ஆளான பிறகு, இப்படியான சுதந்திர தினக்கொண்டாட்ட சம்பவங்கள்ல ஆர்வமெல்லாம் போயே போயி எந்த டி.வியில புது படம் போடுவாங்கன்னு யோசிக்க வேண்டியாதாகிடுச்சு!



அப்பப்ப.. எதாவது இந்த மாதிரி பாட்டு கேட்கும்போது,சுதந்திர தினக்கொண்டாட்ட சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்து போயிட்டிருக்கு!


ஜெய்ஹிந்த்..!









0 பேர் கமெண்டிட்டாங்க: