காவிரி டெல்டாக்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, காவிரியில் தண்ணீர் இல்லாத காலங்களிலேயே ஊற்று வெட்டி மிகுந்த உற்சாகமாக கொண்டாப்படும் விழா காவிரியில் தண்ணீர் இருந்தாலோ சொல்லவேவேணடாம்!
எங்கள் ஊரில் காலை ஐந்து மணியிலிருந்தே காவிரி கரைகளில் கூட்டம் கூட தொடங்கிவிடும் ! பெண்கள் காவிரியில் குளித்து, கரையிலேயே இருக்கும் ஆலமரத்தை சுத்தி பூஜை செய்வாங்க.
அங்க இடம் கிடைக்காதவங்க ஆற்றின் படித்துறைகளில் ஒரு மூணு அடிக்கு இடத்தை வளைச்சுப்போட்டு, அழைச்சிட்டு போன குட்டீஸ்கள, செக்யூரிட்டி மாதிரி நிற்க வைச்சு, அந்த படித்துறையை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, மஞ்சளாலான பிள்ளையார் வைத்து அதன் முன் விளக்கு ஏற்றி பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், ரவிக்கைத்துணி, காதோலை, கருகமணி, திருமங்கல்யச் சரடு , வெல்லம்+அரிசி சேர்த்து படைத்து, கற்பூரம் காட்டி, காவிரிக்கு பூஜை செய்து, ஆண்களுக்கு கையில மஞ்ச கயித்த கட்டி விட்டு,
புதிதாக கல்யாணமானவங்களுக்கு பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணி சுமுகமா பூஜையை முடிச்சு, கோவிலுக்கு போயிட்டு வீடு போய் சேருவாங்க!ஊருல இருந்தபோதெல்லாம் அம்மா கூப்பிட்டும்,போக மறுத்து அது பொம்பளைங்க சமாச்சரம்முனு இருந்து,(என்னால யாரும் டிஸ்டர்ப் ஆயிடக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும்தான்) இப்ப ஊரை விட்டு வந்த பிறகு மிஸ் பண்ணிட்டோமேனு ரொம்ப ஃபீல் பண்ண வேண்டியிருக்குங்க!வாய்ப்பு இருக்கறவங்க போய் காவிரியை (ஆற்றை) பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டுவாங்க சரியா.!