ஆடி தள்ளு படி.!?

மூன்று மாதங்களுக்கு முன்பே எல்லாருக்கும் தேவையான துணிமணிகளை
எடுத்து,கொடுக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் உண்டு -எங்கள் வீட்டில் மட்டுமல்ல, பல மிடில் கிளாஸ் குடும்பங்களிலும் -எல்லாத்துக்கும் காரணம் ஆடித்தள்ளுபடிதான்!

Photo Sharing and Video Hosting at Photobucket

வியக்க வைக்கும் அளவில் தளளுபடி விலைகள்!ஆட்டோக்களில் அலறும் விளம்பர அறிவிப்புக்கள்!

வித்தியாசமான விளம்பர பலகைகள் என தூள் கிளப்பும் ஆடித்தள்ளுபடி

எனக்கு பர்சண்டேஜ் பரிச்சயம் ஆனது, இந்த ஆடித்தள்ளுபடி விளம்பரங்களையும் பார்த்துதான்!

வீட்டில் அனைவருக்கு தீபாவளி துணிகள் இத்தள்ளுபடியில் எடுக்கப்பட்டுவிடும்.!

கடைசி நேரத்தில போய் துணி எடுத்து டைலருக்கிட்ட கொடுத்த நல்லா தைக்கமாட்டங்கடான்னு,?! அப்பாவோட பர்ஸா காப்பத்க்கிட்ட சந்தோஷத்தில ஒரு பெரிய விஞ்ஞான விளக்கம் வேறு!

Photo Sharing and Video Hosting at Photobucket

பாபு டெக்ஸ்டைல்ஸ்ல துணிங்க நல்லாயிருக்காம்னு அக்கம்பக்கது வீட்டுக்காரங்க சொன்னதை கேட்டு, கூறைநாட்டில் இருக்கும் கடைக்கு, நாஞ்சில்நாட்டிலிருந்து நடந்தே செல்லும் அம்மா!

எது எப்படியோ எனக்கு வருடா வருடம் ஆடித்தள்ளுபடி டிரெஸ் + பாட்டியின் ரெகமண்டேஷனிலும் எக்ஸ்ட்ரா ஆடித்தள்ளுபடி டிரெஸ் என குவிஞ்சுரும்!

இந்த தள்ளுபடி வைபவங்களுக்கு பலத்த எதிர்பார்ப்பும் இருக்கும் அதுபோல எதிர்ப்பும் இருக்கும் (இருக்கத்தானே செய்யும்)

ஆடி தள்ளுபடியெல்லாம் சும்மா லொலலொல விலைய ஏத்தி தள்ளுபடின்னு குறைப்பாணுவோன்னு, சொல்ற கூட்டமும் உண்டு.

Photo Sharing and Video Hosting at Photobucket


அதுவும் நடக்கத்தான் செய்யும் பின்ன இவ்வள கூட்டம் கூடும்போது கடைக்காரன் சல்லிசா கொடுக்க,அவன் என்ன சத்திரமா நடத்துறான்..!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//பாபு டெக்ஸ்டைல்ஸ்ல துணிங்க நல்லாயிருக்காம்னு அக்கம்பக்கது வீட்டுக்காரங்க சொன்னதை கேட்டு, கூறைநாட்டில் இருக்கும் கடைக்கு, நாஞ்சில்நாட்டிலிருந்து நடந்தே செல்லும் அம்மா!
//
ஏன் ராஜா... அம்மாவை இவ்வளவு தொலைவு நடக்க விடுவாங்களா? சைக்கிள்ள வெச்சாவது அழைச்சிட்டுப் போயிருக்க வேணாம்?

நாஞ்சில்நாட்டிலிருந்து பாபு டெகஸ்டைலஸ் ஒரு 4 கிலோமீட்டர் இருக்குமா..?

அதுவும் மாயவரம் வெய்யில்ல கேக்கறதுக்கே கஷ்டமாயிருக்கே ராஜா !!

அன்புடன்,
சீமாச்சு

said...

நீங்க சொல்றதும் உண்மைதான் சார் ஆனா,அந்த காலக்கட்டத்தில நான் சைக்கிள் டயர் சைசுக்குத்தானே இருந்தேன்! இப்பல்லாம் ஆட்டோதான்!(ஆனா ஆடிதள்ளுபடிக்கு டிரெஸ் எடுக்கறதுங்கறது ஒரு சம்பிரதாயமாவே மாறிப்போச்சு)

இதை விடுங்க! வார வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்க ஏரியா துர்க்கை அம்மனுக்கே நாங்க அப்படித்தான் நடந்தே வருவோம்!(சன்னதி தெருவின் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் கோவில் செல்லும் பக்தர்களுக்காக,குடிக்க வைத்து இருக்கும் தண்ணீர் குடம் மறந்து போகுமா என்ன?)

said...

முன்னெல்லாம் "ஸ்டாக் க்ளியரன்ஸ் சேல்" என்று மார்ச் கடைசியில் வருமானவரியைக் குறைக்க லாபத்தைக் குறைத்து விற்பார்கள். இப்பவோ மும்பைக்கும் சூரத்துக்கும் போய் மொத்தமாக வாங்கி வந்து நல்ல லாபத்தில் தள்ளுபடி என்று கூறி விற்கிறார்கள்
சகாதேவன்