கல்யாண சாப்பாடு!



கல்யாண சாப்பாட்டு எப்ப போடப்போறீங்க?

பலர் உங்களை கேட்டிருக்க கூடும், அல்லது நீங்கள் பலரை கேட்டிருக்ககூடும்!,தற்போதைய சுழலில் அது ஒன்றும் அவ்வளாவு பெரிய விஷயமில்லை,(சாப்பாடு போடறத சொன்னேங்க!?) என்றாலும் கூட அது போன்ற காரியஙகளில் ஈடுபடும் பலரின் உழைப்பை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக நோக்குவதில்லை!

கல்யாண வீடுகளில் எல்லாரும் தம் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் கூடி பேசி சிரித்து உண்டு மகிழ்ந்து செல்வதை பல இடங்களில் நாம் பார்த்திருக்கிறேம், பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

பெரும்பாலனவர்கள் தவறவிடும் இடம் சமையல் செய்யுமிடம்தான்!அதுவும் அங்கு ஒரே ஆளா, நின்னுக்கிட்டு ஸ்டோருல இருக்கற அத்தனை வேலைகளையும் கவனிக்கும் மிக்க பொறுமை கொண்ட மனிதர்ககளை!

கல்யாண சாப்பாடு சூப்பருங்க..! இந்த வார்த்தைகளை நாம் சென்று சொல்லும் நபர் பெரும்பாலும் கல்யாணம் நடத்துபவராகவோ அல்லது சமையல் ஹெட் குக்காகவோத்தான் இருக்க கூடும், அல்லது பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோவாகத்தான் இருக்க கூடும். ஆனாலும் உண்மையிலேயே இந்த பாராட்டுக்கு போய் சேரவேண்டியா ஆளு யாருன்னு பார்த்தா,

முதல் நாளே வந்து எல்லா சமையல் பாத்திரங்களேருந்து, மளிகை சாமான் வரைக்கும் எல்லாம் சரிபார்த்து கரெக்ட்டா சமையல்காரர்களுக்கு தேவையானத மட்டும் கொடுத்து திடீரென்று வந்து சமையல் ஆள் கூறும்,

சார்! இலை பத்தாது இன்னும் வேணும்.!

சாதாம் பத்தாது போலிருக்கே இன்னும் ரெண்டு மரக்கா போட்டுடலாமான்னு?

பாயாசம் முடிஞ்சி போச்சு என்ன பண்ணலாம்? போன்ற அவசர கால நடவடிக்கைகளை தனியா தீர்மானிப்பதும்,பெரும்பாலும் அதிகாலை இரண்டு மணி மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் சமையலுக்கு தேவையான் சாமானகளை எடுத்து வைப்பது போன்ற காரியங்களை செய்வதும்,சாப்பட்டுல ஒரு குறையும் சொல்லமுடியாத அளவுக்கு செஞ்சு வைச்சு, மீதமான பாத்திரங்கள் & மளிகை பொருட்களை ஒழுங்குப்படுத்தி திரும்ப கல்யாண வீட்டாருக்கு பத்திரமாக ஒப்படைக்கும் அந்த மனிதருக்குத்தான்!

இத்தனைக்கும் உறவுகள்,நட்புகள் அனைத்தும் வந்திருந்து விருந்துண்டு செல்லும் இது போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினை கூட சரியாக உண்ண நேரமின்றி அவசரவசரமாக எதேனும் கிடைத்த தட்டில் அனைத்திலும் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேளை உணவு தயாரிப்பதை மேற்பார்வையிட போய்விடும், இது போன்ற மனிதர்கள் கண்டிப்பாக உறவுகளிலிருந்து வந்து இப்பணியை மேற்கொள்ள மாட்டார்கள்.!அப்படியே யாரேனும் ஒரிரு உறவினர்கள் சமையலறையில் உலாவி வந்தாலும் அவரை காணும் சொந்தங்கள் அப்படியே அலேக்காக தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்!இது எல்லா கல்யாண வீடுகளிலும் நீங்கள் காணமுடியும்! நட்பு வட்டாரத்திலிருந்துதான் இது போன்ற மனிதர்கள் வந்திருந்து இப்பணியை மேற்கொள்வார்கள்..!

பந்தி போட முந்தியும்,

பந்தி கட்டி பின் பிந்தி செல்லும்,

இம்மனிதர்கள் திருமணத்தம்பதிகளை வாழ்த்த வந்த அன்னலெட்சுமியின் பிரதிநிதிகள், என்று கூட சொல்லலாம்!