சப்பரம் ஒட்டலாமா? - ஆடி ஸ்பெஷல் # 2

இந்த தடவ, கொஞ்சம் பெரிய சப்பரமா வாங்கி தர அப்பாக்கிட்ட சொல்லும்மா? அப்படின்னுதான், ஆரம்பிக்கும் எனது ஆடி மாதம்!

பட், நான் கஷ்ட்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி, சப்பரம் வாங்குனா,அது வரைக்கும் சும்மா இருந்த அண்ணன் அதுக்கு டிரைவராகிடுவான். எனக்கு பயங்கர கோபமா வரும்! பொறுத்துக்கோடா அடுத்த வருஷம் நீ ஓட்டலாம் அப்படின்னு சொல்லி சொல்லியே கடைசி வரைக்கும் நான் ஒட்டவேயில்லை. அண்ணன் ஒட்டறத நிறுத்திய பிறகு, நானும் அது சின்ன பசங்க வேலைன்னு! விட்டுட்டேன்.

காலையில ஆறு மணிக்கு சப்பரத்த எடுத்துக்கிட்டு கிளம்பினா தெருவே வேடிக்கை பார்க்க்கும் கரெக்டா ஒரு மணி நேரத்தில காவிரியை ரீச் ஆகிடுவோம்.போகும்போது ஒண்ணும் ஸ்பெஷல் கிடையாது என்னா மத்தவங்க ஒட்டிட்டு போற பெரிய சப்பரத்த பார்த்து பெருமுச்சு விடுவோம்!(அதான் வாழ்க்கையின் தத்துவம் அப்படின்னு பின்னால உணர்ந்துக்கிட்டேன்)

அங்க பார்த்தா, பயங்கர கூட்டமா இருக்கும் பிரிஞ்சு இருக்கும் புதுசா கல்யாண பண்ணுன ஜோடிங்க,வயசான ஆளுங்கன்னு, இப்படி பட்ட கும்பல்ல சின்ன பசங்களான எங்களை, ஒரு பரிவா பார்ப்பாங்கன்னு அதுக்கு காரணமே நாங்க வைச்சிருக்கற சப்பரம்தான்!

காவிரிக்கு பூஜை பண்ணி சூடம் காட்டும்போது அம்மா என் சாமிக்கும்மா (வருஷம் வருஷம் கத்திதான் ஞாபகப்படுத்தவேண்டும் -ஏண்டா இப்படி சத்தம் போட்டு மானத்த வாங்குற! - இதுவும் வழக்கமானதுதான் )

மஞ்சள் கயிறு கையில கட்டியதும், சப்பரம் ரிடர்ன் ஜர்னி ஆரம்பிக்கும். இப்பத்தான் அந்த சப்பரத்துக்கு அனத்த காலமும் ஆரம்பிக்கும்!

டேய் சியாமளா கோவிலுக்கும் போகணும்,போய் பூ வாங்கி வாடா, அண்ணன் சொல்வதை கேட்டு ஓடிப்போய் பூ வாங்கி வந்து ரொம்ப சேப்டியா வைக்கற இடம் அந்த் சப்பரத்துக்குள்ளத்தான்,ரோடு புண்ணியத்தால எவ்வளவு தடவை கீழ விழுந்தாலும் திரும்ப திரும்ப எடுத்து வைப்பதும் அதனுள்ளேதான் !

சியாமளாதேவி கோயில் வந்தாச்சு உள்ளாற போய் ஒரு ரவுண்டு விட்டுட்டு சப்பரம் போய் நிற்கும் அடுத்த ஸ்டாப் பிள்ளை கடை டேய்..! போய் இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா! (பார்த்தீங்களா..! அண்ணன் எதுக்கு என்னைய அழைச்சிட்டு போறங்கறத!) பூ வைச்ச இடத்துல இப்ப இட்லி இருக்கும்!

அப்படியே நார்மலாத்தான் போய்க்கிட்டு இருப்போம் புலிமார்க சீயக்காய்தூள் கம்பெனி வரைக்கும் நான் அந்த நெறையா ஒரு மரத்துல நாலு கிளையா இருக்கும் தென்னை மரத்த பிராக்கு பார்த்துக்கிட்டு வந்து ரோட்ட பார்த்த அண்ணன் ரொம்ப வேகமா பஸ்க்கு போட்டியா ஓடிக்கிட்டுருப்பான்,இவ்வளவு நேரமும் நல்லாத்தானேடா இருந்தன்னு!? நான் பின்னாலயே கத்திக்கிட்டு ஒட தெரு திருப்பத்தில சப்பரத்தோட ஒரு சக்கரம் என் காலுல வந்து தட்டுப்படும், அதை பொறுக்கிகிட்டு வீட்டுக்குள்ள போறதுக்குள்ள இன்னெரு சக்கரம் படியிலேருந்து உருண்டுக்கிட்டு வரும் (பின்ன சப்பரத்த அப்படியே அலாக்கா தூக்காம படியில உட்டு ஏத்துனா என்னாவாகும்!) பத்திரமா இரண்டு சக்கரத்தோட கொண்டுபோய் நிப்பாட்டிட்டு அண்ணன் எஸ்கேப்பாக, கையில் நான் சக்கரத்தோட போறத பார்த்து குடும்பமே ஒண்ணு சேர்ந்து எம்மேல குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய தொடங்கும்!(சப்பரம் ஒட்ட ஆசைப்பட்டது ஒரு தப்புங்களா..??)

என் சொந்தக்கதை சோகக்கதை அது கிடக்கட்டும். நீங்க இந்த படத்தை பாருங்க எல்லாரும் இன்னைக்கு எவ்வளோ சந்தோஷமா ஆடிப்பெருக்க கொண்டாடிருக்காங்கன்னு தெரியும்!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket



நன்றி! தமிழககாவல்துறை (பாதுகாப்புக்கு)

நன்றி! தமிழ்முரசு (படத்துக்கு)