ஊரில் இருந்த காலங்களில் விரதமிருந்து வைத்தீஸ்வரன் கோவில் நடந்து சென்று முருகனை வழிப்பட்டு திரும்பிய நாட்களில்,வீட்டில் நான் வரும் நேரம் பார்த்து காத்திருக்கும் என் பாட்டி, வந்ததும் காப்பி போட்டு கொடுத்து, கோயிலிலிருந்து வாங்கி வந்த திருச்சாந்துருண்டையை கொடுக்கும் போது என் ராசா..!அன்று அன்போடு பெற்று,அதை கொண்டு போய் பூஜையறையில் வைத்து வணங்கி,அதைப்பற்றி அதன் பின்னர் வரும் கிருத்திகை வரைக்கும் சொல்லி சொல்லி மகிழ்ந்த என் பாட்டி-வளர்த்த அம்மா- இறந்து இன்றோடு இரண்டு வருடங்களாகிறது!
வைத்தீஸ்வரன் கோவில் கிருத்திகையையும் மற்றும் பல விசேஷங்களையும் இழந்து இணையத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டிருக்கும் இந்நாளில் சீர்காழியின் கணீர் குரலில் முருகனை வணங்கி நல் வாழ்வு பெறுவோம்!