'தம்' அடிச்சா என்னாவாம்..?



என்ன பண்ணினா? இவனுங்க வழிக்கு வருவாங்கன்னு, இங்கிலீஸ்க்காரன் ரொம்ப யோசிச்சு, யோசிச்சு, கடைசியா போட்ட இந்த படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஆமாங்க நீங்களே பாருங்களேன் என்னவோ மாதிரி இருக்குல்ல!

இந்த போட்டோவை பார்த்து,பலபேரு தம்மடிக்கற பழக்கத்த விட்டுட்டாங்கங்கற, சேதி கேட்டு அரசு சரிதான் இனிமே, இந்த பயபுள்ளைகளை, இப்படித்தான் மிரட்டுணும் போலன்னு, முடிவு பண்ணி கொண்டாங்கடா..! இதே மாதிரி படங்களைன்னு ஒரு ஆர்டர் போட,

வந்தது ஒரு பதினெட்டு படம் அதுல முதல்ல ஒரு அஞ்சு படத்த ரிலீஸ் பண்ணுவோம், அப்புறமும் எவனும் அடங்கலனா! எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணிடுவோமுனு, முடிவு பண்ணிட்டாங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket


2008லேருந்து எல்லா சிகரெட் பாக்கெட்களிலும் இந்த போட்டோக்கள் இருக்குமாம்!

நம்ம ஊருலயுமான்னு? கேட்காதீங்க.! இங்க லோக்கல் பாலிடிக்ஸ்க்கே நேரமில்லையாம்..!? கவர்ன்மெண்ட் கவிழ்ற மாதிரி இருந்துச்சுன்னா, உடனே நாலு இடது வலதுங்க கால்ல வுழுவோமே,தவிர இந்த மாதிரி சப்பை மேட்டருக்கெல்லாம்,நோ டைம்.!

தப்பு செஞ்சா? அதுக்குன்னு இப்படியா..?!

கொஞ்சம் படத்த பாருங்களேன்!
Photo Sharing and Video Hosting at Photobucket
இரண்டு போலீஸ்காரனுவோ (என்ன மரியாதை வேண்டியிருக்கு?) ஒரு திருடன கையையும் கட்டி,காலையும் கட்டி மோட்டார் சைக்கிளிலும் கட்டித்தான் இழுத்து சென்றிருக்கிறார்கள். கொஞ்சதூரத்தில் சென்றதுமே, அவன் மயங்கிவிட பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றிருக்கிறார்கள்!

பாகல்பூர் போலீஸ் ஸ்டேஷனின் கடந்தகால ஹிஸ்டரி புக்கை பார்த்தா, கிரிமினல்கள்தான் போலீஸ்காரர்களாக பணியாற்றினார்களாம், இப்பவும் அந்த பெருமை அழியாம பார்த்துக்கிட்டு வராங்களாம்..!

மல்லு ஸ்பெஷல் - ஓணம் வாழ்த்துக்கள்!

இன்று கேரளாவில் ஓணம் பண்டிகை,கேரளா மற்றும் வளைகுடாநாடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் விழா! (அரபிக்காரங்க மல்லுக்களுக்கு ஸ்பெஷல் லீவெல்லாம் கொடுக்கறாங்கங்க..!)

நம்ம தமிழ்நாட்டில கூட சென்னையில் லீவு விட்டு கொண்டாடப்படும் விழாவாயிடுச்சுங்க இந்த ஓணம்!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஊரில இருந்தபோதெல்லாம் இதோட 'அருமை பெருமை' தெரியாமா சின்ன புள்ளயாவே இருந்துட்டேன், ஆனா இங்க வந்தப்பிறகுதான் "நல்லாவே" தெரிஞ்சுக்கிட்டேன்!

Photo Sharing and Video Hosting at Photobucket


எல்லோருக்கும் திருவோண திருநாள் வாழ்த்துக்கள்..!

ஆண்டவா! அடுத்த வருச ஒணத்தை, நான் கேரளாவில கொண்டாட ,எனக்கு "அருள்" தர வேண்டும்!
THANKS TO FLICKR

ஹைதராபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம்!

Photo Sharing and Video Hosting at Photobucket
சரியாக இந்திய நேரம் 7.45க்கு ஆந்திர பிரதேச தலை நகர் ஹைதராபாத்தில் உள்ள லும்பினி பொழுதுபோக்கு பூங்கவில், லேசர் ஷோ நடந்துகொண்டிருந்தபோது, வெடித்த முதல் குண்டு வெடிப்பில் சுமார் 20க்கு மேற்பட்டோர் பலியானார்கள். அடுத்த, பத்து நிமிட இடைவெளியில், கொத்தி பகுதியில் ஒரு ரெஸ்ட்ரண்ட் அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 12க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள் மேலும் பல்ர் அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்று முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தாலும், தற்போது ஆர்.டி.எக்ஸ் வகை குண்டுகளால் ,ஏற்பட்ட தீவிரவாதிகளின் சதிச்செயல்! என்று அறிவிக்கப்பட்டுள்ளது




தமிழக "தலை"களின் ராஜாங்க பயணம்..!

கருணாநிதி, ஜெ, ராம்தாஸ்,& காங்கிரஸ் கோஷடி எல்லாம் சேர்ந்து தமிழக நலன் கருதி, மத்திய அரசிடமிருந்து நெறையா நிதி வேண்டி,டெல்லிக்கு ஒரு பிளைட்ல போறாங்க,

Photo Sharing and Video Hosting at Photobucket

அப்ப நம்ம முதல்வரு பிளைட்ல இருந்துக்கிட்டு, நான் ஊருக்கு போய் வர வரைக்கும், என்னால முடிஞ்சது ஏதோ ஒருத்தன் சந்தோஷமா இருக்கட்டுமுனு சொல்லி, ஒரு நூறு ரூபாய் நோட்ட எடுத்து, ஜன்னல் வழியா தூக்கி போட்டுறாரு!

அதை பார்த்த ஜெ அட..! இது என்ன பிசாத்து காசுன்னு, சொல்லிக்கிட்டு இரண்டு ஐம்பது ரூபா நோட்ட எடுத்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டு, இதனால ரெண்டு பேரு சந்தோஷமா இருப்பாங்களேன்னு, பெருமிதமா ஒரு லுக் விட, அத பார்த்த அய்யா என்னாடா.! நாம இங்க இருக்கறதையே மறந்துட்ட மாதிரி, எதிரும் புதிருமான ஆளுங்க போட்டி போட்டுக்கிட்டு தமிழ் மக்களுக்கு நல்லது பண்றாங்களேன்னு, டென்ஷனாகி,கோ.க.மணிக்கிட்டருந்து பத்து, பத்து ரூபா நோட்டா வாங்கி, ஜன்னல் வழியா தூக்கிப்போட்டுட்டு, உங்களால ஒருத்தன் இரண்டு பேருதான் சந்தோசப்படுவாங்க,ஆனா, என்னால ஒரு பத்து பேராவது சந்தோஷப்படுவாங்களேன்னு ஒரு மப்போட சிரிக்க,

பைலட் ரூமுலேருந்து ஒரு சத்தம் வந்தது "இப்ப நான் உங்கள பிளைட்லேர்ந்து தூக்குனேன்னா,டோட்டல் தமிழ்நாடே எவ்ளோ சந்தோஷப்படும் தெரியுமான்னாராம்..!

ஆடி தள்ளு படி.!?

மூன்று மாதங்களுக்கு முன்பே எல்லாருக்கும் தேவையான துணிமணிகளை
எடுத்து,கொடுக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் உண்டு -எங்கள் வீட்டில் மட்டுமல்ல, பல மிடில் கிளாஸ் குடும்பங்களிலும் -எல்லாத்துக்கும் காரணம் ஆடித்தள்ளுபடிதான்!

Photo Sharing and Video Hosting at Photobucket

வியக்க வைக்கும் அளவில் தளளுபடி விலைகள்!ஆட்டோக்களில் அலறும் விளம்பர அறிவிப்புக்கள்!

வித்தியாசமான விளம்பர பலகைகள் என தூள் கிளப்பும் ஆடித்தள்ளுபடி

எனக்கு பர்சண்டேஜ் பரிச்சயம் ஆனது, இந்த ஆடித்தள்ளுபடி விளம்பரங்களையும் பார்த்துதான்!

வீட்டில் அனைவருக்கு தீபாவளி துணிகள் இத்தள்ளுபடியில் எடுக்கப்பட்டுவிடும்.!

கடைசி நேரத்தில போய் துணி எடுத்து டைலருக்கிட்ட கொடுத்த நல்லா தைக்கமாட்டங்கடான்னு,?! அப்பாவோட பர்ஸா காப்பத்க்கிட்ட சந்தோஷத்தில ஒரு பெரிய விஞ்ஞான விளக்கம் வேறு!

Photo Sharing and Video Hosting at Photobucket

பாபு டெக்ஸ்டைல்ஸ்ல துணிங்க நல்லாயிருக்காம்னு அக்கம்பக்கது வீட்டுக்காரங்க சொன்னதை கேட்டு, கூறைநாட்டில் இருக்கும் கடைக்கு, நாஞ்சில்நாட்டிலிருந்து நடந்தே செல்லும் அம்மா!

எது எப்படியோ எனக்கு வருடா வருடம் ஆடித்தள்ளுபடி டிரெஸ் + பாட்டியின் ரெகமண்டேஷனிலும் எக்ஸ்ட்ரா ஆடித்தள்ளுபடி டிரெஸ் என குவிஞ்சுரும்!

இந்த தள்ளுபடி வைபவங்களுக்கு பலத்த எதிர்பார்ப்பும் இருக்கும் அதுபோல எதிர்ப்பும் இருக்கும் (இருக்கத்தானே செய்யும்)

ஆடி தள்ளுபடியெல்லாம் சும்மா லொலலொல விலைய ஏத்தி தள்ளுபடின்னு குறைப்பாணுவோன்னு, சொல்ற கூட்டமும் உண்டு.

Photo Sharing and Video Hosting at Photobucket


அதுவும் நடக்கத்தான் செய்யும் பின்ன இவ்வள கூட்டம் கூடும்போது கடைக்காரன் சல்லிசா கொடுக்க,அவன் என்ன சத்திரமா நடத்துறான்..!

அபி அப்பாவிற்கு ஒரு HAPPY நியூஸ்..!

அரசியல் கூட்டணியின் கூட்டல் கழித்தல் கணக்குகளில் நிச்சயம் மயிலாடுதுறை தொகுதி சிதம்பரத்துடன் சங்கமமாகும் என்று மயிலாடுதுறை பாரளுமன்ற தொகுதி மக்களால் , கவலையுடன் எதிர்பார்க்கப்பட்ட, அந்நிகழ்வு, கடைசியில் நடைபெறவே இல்லை! என்பதில் மகிழ்ச்சியே..!
பல நாடுகளிலும், வாழும் மண்ணின் மைந்தர்களின் வேண்டுகோள், மற்றும் தொகுதி மக்களின் கருத்துக்கள், மற்றும் தற்கால அரசியல் நடைமுறைகளுக்குகேற்ப, இப்பிரித்து சேர்க்கும் திட்டத்திலிருந்து, மயிலாடுதுறை விடுவிக்கப்பட்டது!
ஏதோ ஒரு வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடாமலிருக்க,ஊரின் வரலாற்றுத் தொன்மையும், சமூக வரலாற்றில் ஊரின பெருமையும் தாங்கிய ஒரு வேண்டுகோள் கடிதம் தயாரித்து, அதை தொகுதி மக்கள் வாயிலாக தொகுதி பிரிப்பு குழுவிற்கு சமர்ப்பித்த தமிழ்திணையினருக்கும்,
பல நாடுகளிலிருந்து மயிலாடுதுறையின் மைந்தர்கள் அனுப்பிய வேண்டுகோள் கடிதங்களுக்கும் ,
எதுவும் செய்யாமல் இருந்ததற்காக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும்..!
நன்றி.!
நன்றி..!!
நன்றி...!!!
ஸ்பெஷல் நன்றி.!
அபி அப்பாவுக்கு - இதுலயும் அனானிமஸா நாப்பதுக்கும் மேல மெயில் தட்டி விட்டதற்கு, இவ்விடத்தில் 'ஸ்பெஷல்' நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது..!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றிகளுடன்!

எம்பளாத்தொம்பது போய் எண்பது கூட சேருமா என்ன..!?

கான்பிடென்ஷியல்.!
அபி அப்பா கவலை வேணாம், பாரளுமன்றத்தில் இனி மயிலாடுதுறை, மயிலாடுதுறைன்னு ஒலிக்கும்!ஆனா முதல்ல பழைய மணியை சரி பண்ணனுமே?
சவுண்டே இல்லையே!

கோரிக்கை from வேலம்மாள் Engg


Photo Sharing and Video Hosting at Photobucket


பார்த்ததுமே முதலில் அதிசயமாகத்தான் இருந்தது,

போலீஸை கரெக்ட் பண்ணி,போராட்டம் செய்யும் மாணவர்களை தூரத்துவது,ஹாஸ்டலிலிருந்து அனைவரையும் மூட்டை கட்டுவது, பெற்றோர்களுக்கு அவசரத்தந்தி அனுப்புவது, கடைசியாக ஐடிசி அடிப்பது, போன்ற எந்த நார்மல் காரியங்களும் செய்யாமல், இப்படி ஒரு நோட்டீஸ் விடுவது அதுவும் பத்திரிக்கைகளில்,அனேகமாக தமிழ் நாட்டில், இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்!

நடந்தது இதுதான்;

கல்லூரி மாணவர்,கல்லூரி முன்பு நிற்கும்போது அவ்வழியே சென்ற ஒரு டிரெய்லர் மோதி,பலத்த காயமடைந்து,மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கல்லூரி பேருந்தில் அழைத்துச்செல்ல, மாணவர்கள் முயற்ச்சித்தபோது, கல்லூரிநிர்வாகம், பேருந்தை பயன்படுத்த மறுத்துவிட்டது. இதனால் கோபம் கொண்ட மாணவர்கள்,அண்ணா பல்கலையில் முறையிட, துணைவேந்தர் அக்கல்லூரிக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளுக்கு, அரசுக்கு பரிந்துரைக்கும் என்று கூறிவிட்டார். ஏற்கனவே "நல்ல பெயரை" சம்பாதித்திருந்த இக்கல்லூரி நிர்வாகத்திற்கு, அனேகமாக கிளைமாக்ஸ்தான் என்று தெரிந்ததும்,கடைசியாக, மாணவர்களின், கருணை பார்வை வேண்டி,வெளியிட்டுவிட்டார்கள் இக்கோரிக்கையினை!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

அன்று கொண்டாடிய சுதந்திரம்..!

Photo Sharing and Video Hosting at Photobucket
மாலை நேரங்களில் வகுப்புகள் முடிய ஒரு மணி நேரத்துக்கு முன்பாக எங்க ஒண்ணாம் கிளாஸ் டீச்சர் வந்து எங்க கிளாஸ் பொம்பளை புள்ளைங்களுக்கு கூட்டிட்டு போய் ஜன கண மண டிரெயினிங் கொடுக்கும் போதுதான், நாங்கள் தெரிந்துகொள்வோம் ஆஹா குடியரசு தினமே இல்லை சுதந்திர தினமோவரப்போகுதுன்னு!
கரெக்டா சுதந்திரதினத்திற்கு இரண்டு நாள் முன்பிலிருந்தே எங்க மூணாம் வகுப்பு சார் மதியத்தில எல்லா கிளாஸ் பசங்களையும் ஒண்ண உக்கார வைச்சு,சுதந்திர அடைஞ்சத பத்தி கதை சொல்ல ஆரம்பிப்பாரு! அது மாதிரி கதைகளின் மூலம்தான் காந்தியும் நேருவும் எங்களுக்கு ரொம்ப பழக்கமானார்கள்.திருப்பூர் குமரன் கதை சொல்லும்போதும் சரி,பகத்சிங் கதை சொல்லும்போதும் சரி,நாம நேராவே பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங் உண்டாகும்!

அந்த மாதிரி ஒரு கதையால மனசுல பதிஞ்சவருதான் காந்திஜி

அதுவும் காந்தி வீட்டை விட்டு லண்டன் போறப்ப அம்மாவிடம் வாக்குறுதி கொடுத்து போறத சொல்லும் போது ,

சார்:- காந்தி லண்டன் போறப்ப அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்தாரு
எங்களை பார்த்து, என்ன கொடுத்தாரு?

நாங்க:- வாக்குறுதி கொடுத்தா சார் (கோரஸாக)

மூணாம் சார்: என்ன வாக்குறுதி - ஊண் உண்ணமாட்டேன் - சொல்லுங்கடா!

நாங்க:- ஊண் உண்ண மாட்டேன் (கோரஸாக)

மூணாம் சார்:- மது அருந்த மாட்டேன்

நாங்க:- மது அருந்தமாட்டேன் (கோரஸாக)

மூணாம் சார்:- பொய் சொல்லமாட்டேன்

நாங்க :- பொய் சொல்லமாட்டேன் (கோரஸாக)

இது சொல்லி போய் அவரு அப்படியே நடந்துக்கிட்டாரு நீங்களும் அதுபோல எனக்கு வாக்கு கொடுத்த மாதிரி நடந்துக்கணும் புரிஞ்சுதா..!அந்த டைம்ல தலையாட்டிக்கிட்டு வந்தாலும், ரொம்ப கஷ்டமான விஷயம் வெளிநாட்ல இந்த விஷயங்கள கடைபிடிக்கறது!

முதல் நாளே சாயந்திரம் ஸ்கூல் பரபரப்பாகிவிடும் கிரவுண்ட சுத்தம் பண்ணி வருஷத்துக்கு ரெண்டு தடவை மட்டுமே திறக்கும் மாடிகதவை திறந்து, மொட்டை மாடியை பயந்துக்கிட்டே சுத்தம் பண்ணி,(ஊருலயே மெட்டை மாடி,கிரவுண்டோட இருந்த எலிமெண்டிரி ஸ்கூல் எங்க ஸ்கூல்தாம்ல!)அந்த மொட்டை மாடியில ஒரு பக்கம் தான் சுவரு, மத்த பக்கத்துக்கு போன அப்படியே கிழே ஈஸியா கிரவுண்டுக்குள்ள விழுந்துடலாம்!

காலையிலேயே எழுந்திருச்சி கடைக்கு ஓடிப்போயி சிக் ஷாம்பு (அப்பத்தான் அது அறிமுகமான நேரம்) வாங்கி தலை குளிச்சி 6.30க்கு பள்ளிக்கூடத்துல ஆஜராகிடுவோம்.

சில பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லாரும் வரிசையா வகுப்பிலேயே உட்கார வைச்சு,கொடியேத்தற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி மாடிக்கு ஏத்துவாங்க! லைன்கட்டிப்போயி,லைன் கட்டிநின்னு,லைன் கட்டி மிட்டாய் வாங்கி,லைன் கட்டி திரும்பின பிறகுதான் எங்களுக்கு ஃபீரிடம் கிடைக்கும்!

இதுல ஸ்பெஷல்னு சொன்னா மிட்டாயும் கொடியேத்துறவங்க சொல்ற எதாவது ஒரு கதையும்தான்!

டீச்சர் புள்ளங்கறதால எனக்கு மட்டும் புள்ளை கடை பூரி செட் கிடைக்கும்!இதே காரணத்தால எனக்கு கிடைக்கிற நெறைய மிட்டாய நான் வாங்கி கால் சட்டை மேல் சட்டைன்னு நெறப்பி வைச்சுக்குவேன்.

அடுத்த நாள் அம்மா துணி துவைக்கும்போது வரும் வித விதமான சாயங்கள்தான் எனக்கு ஞாபகப்படுத்தும், ஆகா. நம்ம மிட்டாயெல்லாம் வீணாகிப்போச்சேன்னு..!

கொஞ்சம் பெரிய ஆளான பிறகு, இப்படியான சுதந்திர தினக்கொண்டாட்ட சம்பவங்கள்ல ஆர்வமெல்லாம் போயே போயி எந்த டி.வியில புது படம் போடுவாங்கன்னு யோசிக்க வேண்டியாதாகிடுச்சு!



அப்பப்ப.. எதாவது இந்த மாதிரி பாட்டு கேட்கும்போது,சுதந்திர தினக்கொண்டாட்ட சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்து போயிட்டிருக்கு!


ஜெய்ஹிந்த்..!









சுதந்திரத்தை போற்றுவோம்...!




தம் வாழ்க்கையையே, நம் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்த

பெரியோர்களை

வணங்கி,

போராடி பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம்!

ஜெய்ஹிந்த்..!

நீயெல்லாம் ஒரு....!

முந்தா..நேத்து சைட்ல, கடுமையான வேலை எல்லாம் முடிச்சுட்டு, வந்து அச்தியில அப்படியே கட்டைய சாச்சி, நல்லா தூங்கிகிட்டு இருக்கும்போது..!.

எனக்கு தமிழ்மண்த்துலேர்ந்து ஒரு கடுதாசி - இல்ல - மெயிலுன்னு வைச்சிப்போம்.!
அதுல, "தாங்கள் இதுவரை பதிந்த எந்த பதிவுகளும்,ஒரு பின்னூட்டமுமின்றி இருப்பதாலும், மூத்த பதிவர்கள் - மன்னிக்கவும் - மொத்த பதிவர்களுமே, இதுவரை ஒரு சிரிப்பான்கூட போடாத நிலையில், தங்களால் தமிழுக்கோ அல்லது தமிழ்மணத்திற்கோ, ஒரு பிரயோசனமும் இல்லை என்பதாலும், தாங்களாகவே பதிவு போடுவதை நிறுத்திக்கொள்ளும்படி தமிழ்மணம் முதலில் அன்புடன் கேட்டுக்கொள்கிறது, இதன் மூலம் எதிர்கால சந்ததிக்கு வழி விட்ட பெருமை உங்களையே சாரும் என்பதனையும் இச்சமயத்தில், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்"
நன்றி..!
இப்படிக்கு,
தமிழ்மணம் நிர்வாகிகள்.

ஐய்யயோ..!.ஐய்யயோ...!
நான் முன்றரை வருசமா, குந்த வைச்சு உக்காந்துக்கிட்டு, பாக்குற சைட்லேருந்து, எதாவது பாராட்டு வருமுனு பார்த்தா, இப்படி, ஆப்பு அனுப்பிச்ச்ட்டாங்களே! நான் என்ன பெரிசா குத்தம் பண்ணிட்டேன், ஆபிஸ்ல பொழுது போகம இருக்கறப்ப,நோட் பேடுல எழுதி கிறுக்கறத அப்படியே நெட்டி(ல்லி)ட்டேன்!
அதுக்கு போயி இப்படியா..!
சரி விடுங்கப்பா..என்னோட 'சேவைய' நான் வெள்ளை பேப்பரிலேயே ப்ரிண்ட் எடுத்து பார்த்துக்குறேன்!
பயங்கர கோபத்தோட, கடைசியா ஒரு தரம் பார்த்துட்டு, நம்ம கம்பெனிய மூடிடுவோமுனு, என்னோட வலைப்பக்கத்தை ஒபன் பண்ணினா, உண்மையிலேயே கமெண்ட் இருக்கற இடத்தை காணலைங்கோஓஓஓ...!
அனேகமா பிளாக்கர்காரங்க புடிங்கிவிட்டுருப்பாங்கன்னு நெனைக்கிறென்! (நான் தமிழ வளக்கறதுல எவ்ளோ பிரச்சனை பாருங்க!)

இது எல்லாத்தையும், என் உயிர் நண்பங்கிட்ட 'சாட்'டியதுக்கு அவன் அனுப்பிச்ச படம் & வாசகம் இதுதான்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

நீயெல்லாம் ஒரு ஆளு... த்தூ..!

ஸ்ரீராகவேந்திரர் - ரஜினி

Photo Sharing and Video Hosting at Photobucket

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

அதுநாள் வரையில் சிவன், முருகன் பிள்ளையார், மட்டுமேயிருந்த எங்கள் பூஜையறையில் சுவாமி ராகவேந்திரர் படமும் வைக்கப்பட்டதும் வெள்ளிக்கிழமை விரதம் மட்டுமே அனுசரித்த வீட்டில், கூடுதலாக, வியாழக்கிழமை விரதமும், கடைப்பிடிக்க ஆரம்பித்தது அதற்குபின்னர்தான்.!

இத்தனைக்கும் காரணமானது ஒரு திரைப்படம் 1985ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ஸ்ரீராகவேந்திரர். அறுபதாவது வயதில் எங்கள் பாட்டிக்கு சுவாமி ராகவேந்திரை அறிமுகப்படுத்திய படம்!

ஆக்ஷன் படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ரஜினியை அமைதியின் வடிவமாக, ராகவேந்திரராக பார்க்க, ரஜினி ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்திருக்கும்!

என்னது...! ரஜினி சாமிப்படத்துல நடிக்கிறாரான்னு? பலரும் கேலியாகவும்,ஆச்சர்யமாகவும் எதிர்பார்க்க வைத்த படம்.!

ஆனாலும் ஒண்ணும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ரஜினி தன் பங்கினை சிறப்பாக செய்ததும், அந்த காலகட்டத்திலேயே சிகரெட்டை தொடாமல், அந்த படத்தை நடித்து முடித்தது பத்திரிக்கைகளில் பெரிய சேதியானது!

Photo Sharing and Video Hosting at Photobucket


பாதி ரிப்பேரான டேப்பில் அதிகாலையிலேயே ஆரம்பிக்கும் பாடல்.

ச....

ச ரி க ம ப

ப த நி ச ரி

ம்.. பாடு"ங்கற பாடல்ல ஆரம்பிச்சு, அத்தனை பாட்டையும் போட்டு தெருவையே எழுப்பி,படத்துக்கு ஃப்ரீ பப்ளிச்சிட்டி பண்ணிய அப்பாவும் அந்த படத்த பார்த்துட்டு ராகவேந்திரர் சம்பந்தபட்ட கேசட்கள் வாங்க ஆரம்பிச்சதும்.,

பிள்ளையாரே கதின்னு கிடந்த அண்ணன் பின்னாளில் சந்தனத்தால் நெற்றியில் நெடுகோடு தீட்டி,காவிச்சட்டை அணிந்து அலைந்ததும், எல்லாம் ராகவேந்திரர் படத்தோட எபெக்ட்டாலத்தான்..!

பொருளாதார ரீதியில படத்துக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், ஆன்மீகத்துல ரஜினிக்கு இருந்த இன்ட்ரஸ்ட்-ரசிகர்களிடமும் - அதிகமாக ஆரம்பிச்சது, இந்த படத்துலேருந்துதான்னு, சொன்னா அது தான் உண்மை..!

நல்ல சேதி..! (அர்ஜெண்டானது)

நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இரண்டொரு நாளில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவி ஜோதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த சூர்யா உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஜோதிகாவின் அருகிலேயே தங்கி கவனித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அவருடன் உள்ளனர்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்படியெல்லம் கூப்பிட கூடாது பாப்பாவை..!

Photo Sharing and Video Hosting at Photobucket

நாய்:-என்னை மறந்து போவாளோ ..?

அடப்பாவிகளா.!





அடப்பாவிகளா.! நீங்க பேரு வாங்கறத்துக்காக இப்படி நாட்டோட பேர நாறடிச்சிட்டிங்களே!

கல்யாண சாப்பாடு!



கல்யாண சாப்பாட்டு எப்ப போடப்போறீங்க?

பலர் உங்களை கேட்டிருக்க கூடும், அல்லது நீங்கள் பலரை கேட்டிருக்ககூடும்!,தற்போதைய சுழலில் அது ஒன்றும் அவ்வளாவு பெரிய விஷயமில்லை,(சாப்பாடு போடறத சொன்னேங்க!?) என்றாலும் கூட அது போன்ற காரியஙகளில் ஈடுபடும் பலரின் உழைப்பை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக நோக்குவதில்லை!

கல்யாண வீடுகளில் எல்லாரும் தம் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் கூடி பேசி சிரித்து உண்டு மகிழ்ந்து செல்வதை பல இடங்களில் நாம் பார்த்திருக்கிறேம், பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

பெரும்பாலனவர்கள் தவறவிடும் இடம் சமையல் செய்யுமிடம்தான்!அதுவும் அங்கு ஒரே ஆளா, நின்னுக்கிட்டு ஸ்டோருல இருக்கற அத்தனை வேலைகளையும் கவனிக்கும் மிக்க பொறுமை கொண்ட மனிதர்ககளை!

கல்யாண சாப்பாடு சூப்பருங்க..! இந்த வார்த்தைகளை நாம் சென்று சொல்லும் நபர் பெரும்பாலும் கல்யாணம் நடத்துபவராகவோ அல்லது சமையல் ஹெட் குக்காகவோத்தான் இருக்க கூடும், அல்லது பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோவாகத்தான் இருக்க கூடும். ஆனாலும் உண்மையிலேயே இந்த பாராட்டுக்கு போய் சேரவேண்டியா ஆளு யாருன்னு பார்த்தா,

முதல் நாளே வந்து எல்லா சமையல் பாத்திரங்களேருந்து, மளிகை சாமான் வரைக்கும் எல்லாம் சரிபார்த்து கரெக்ட்டா சமையல்காரர்களுக்கு தேவையானத மட்டும் கொடுத்து திடீரென்று வந்து சமையல் ஆள் கூறும்,

சார்! இலை பத்தாது இன்னும் வேணும்.!

சாதாம் பத்தாது போலிருக்கே இன்னும் ரெண்டு மரக்கா போட்டுடலாமான்னு?

பாயாசம் முடிஞ்சி போச்சு என்ன பண்ணலாம்? போன்ற அவசர கால நடவடிக்கைகளை தனியா தீர்மானிப்பதும்,பெரும்பாலும் அதிகாலை இரண்டு மணி மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் சமையலுக்கு தேவையான் சாமானகளை எடுத்து வைப்பது போன்ற காரியங்களை செய்வதும்,சாப்பட்டுல ஒரு குறையும் சொல்லமுடியாத அளவுக்கு செஞ்சு வைச்சு, மீதமான பாத்திரங்கள் & மளிகை பொருட்களை ஒழுங்குப்படுத்தி திரும்ப கல்யாண வீட்டாருக்கு பத்திரமாக ஒப்படைக்கும் அந்த மனிதருக்குத்தான்!

இத்தனைக்கும் உறவுகள்,நட்புகள் அனைத்தும் வந்திருந்து விருந்துண்டு செல்லும் இது போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினை கூட சரியாக உண்ண நேரமின்றி அவசரவசரமாக எதேனும் கிடைத்த தட்டில் அனைத்திலும் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேளை உணவு தயாரிப்பதை மேற்பார்வையிட போய்விடும், இது போன்ற மனிதர்கள் கண்டிப்பாக உறவுகளிலிருந்து வந்து இப்பணியை மேற்கொள்ள மாட்டார்கள்.!அப்படியே யாரேனும் ஒரிரு உறவினர்கள் சமையலறையில் உலாவி வந்தாலும் அவரை காணும் சொந்தங்கள் அப்படியே அலேக்காக தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்!இது எல்லா கல்யாண வீடுகளிலும் நீங்கள் காணமுடியும்! நட்பு வட்டாரத்திலிருந்துதான் இது போன்ற மனிதர்கள் வந்திருந்து இப்பணியை மேற்கொள்வார்கள்..!

பந்தி போட முந்தியும்,

பந்தி கட்டி பின் பிந்தி செல்லும்,

இம்மனிதர்கள் திருமணத்தம்பதிகளை வாழ்த்த வந்த அன்னலெட்சுமியின் பிரதிநிதிகள், என்று கூட சொல்லலாம்!

சூட்டை கிளப்புவோமா..?!

ஒரு வழியாக வலைப்பட்டறை நடந்து முடிந்து,திருப்தியாக நடத்திவிட்டோமென அமைப்பாளர்கள் மற்றும் பங்கு கொண்ட வலைப்பதிவில் ஆர்வம் கொண்ட அனைவருமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க எத்தனிப்பதற்குள்,எழுப்பப்பட்ட "மாலன் - ஈழத்தமிழர்" பிரச்சனைக்குள் சிக்கி அதற்கு பதிலளிப்பது,அல்லது மறுப்பது என்று பயங்கர டென்ஷனா இருக்கற இந்த டைம்ல,ஆக்சுவலா மாலன் பேச வந்த மேட்டரு என்னன்னு நான் எனக்கு தெரிஞ்ச சொற்ப மேட்டர வைச்சுக்கிட்டு லிங்க பண்ணி பார்த்து இதுவா இருக்குமோ?அல்லது அதுவா? என ரொம்ப குழம்பிபோயிருக்கேன்! யாராவது கொஞ்சம் டீடெயிலா வெளக்குங்களேன்!

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் ரொம்ப யோசிச்சதுல - எப்பவுமே நாம ஒருத்தர குத்தம் சொன்னா அவரு ஆமாம்ன்னு ஒத்துக்கமாட்டரு! பதிலுக்கு நீங்க செஞ்சது மட்டும் சரியா அப்படின்னுத்தான் சொல்வாரு - ராம்தாஸ்க்கிட்டகுடும்ப அரசியல் பண்றீங்களா அப்படின்னு கேட்ட நேரு குடும்பம்,கலைஞர் குடும்பம் & புஷ் குடும்பத்த ஹெல்ப்புக்கு கூப்பிடுவாரு - அதுபோல,

எதோ ஒரு சமயத்தில மார்க்சிஸ்ட் இந்து ராம் பத்தி யாரோ கிழிச்சதுக்கு,மாலன் சார் அப்படியெல்லாம் சொல்லப்படாது,நீங்களும் தான் அரச எதிர்த்துக்கிட்டே,அரசின் அனுமதியோட(பாஸ்போர்ட்),வெளிநாடு போறீங்க,(தலைவர் மகன் உள்பட)பிளைட் ஓட்ட கத்துக்கீறிங்க,மத்த கம்ப்யூட்டர் டெக்னாலஜியெல்லாம் கத்துக்கீறிங்ககற! ரீதியில ரிப்ளை பண்ணியிருப்பாருன்னு நினைக்கிறேன்!

.............?

..............?

...............?

................?!

(அப்ப இது கிடையாதா...???!!!)

கிருத்திகை - ஆடி ஸ்பெஷல் - # 3

Photo Sharing and Video Hosting at Photobucket

ஊரில் இருந்த காலங்களில் விரதமிருந்து வைத்தீஸ்வரன் கோவில் நடந்து சென்று முருகனை வழிப்பட்டு திரும்பிய நாட்களில்,வீட்டில் நான் வரும் நேரம் பார்த்து காத்திருக்கும் என் பாட்டி, வந்ததும் காப்பி போட்டு கொடுத்து, கோயிலிலிருந்து வாங்கி வந்த திருச்சாந்துருண்டையை கொடுக்கும் போது என் ராசா..!அன்று அன்போடு பெற்று,அதை கொண்டு போய் பூஜையறையில் வைத்து வணங்கி,அதைப்பற்றி அதன் பின்னர் வரும் கிருத்திகை வரைக்கும் சொல்லி சொல்லி மகிழ்ந்த என் பாட்டி-வளர்த்த அம்மா- இறந்து இன்றோடு இரண்டு வருடங்களாகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket


வைத்தீஸ்வரன் கோவில் கிருத்திகையையும் மற்றும் பல விசேஷங்களையும் இழந்து இணையத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டிருக்கும் இந்நாளில் சீர்காழியின் கணீர் குரலில் முருகனை வணங்கி நல் வாழ்வு பெறுவோம்!

இடம் மாறும் வாழ்க்கை..?

கோலங்கள் டீ.வீ சீரியல் பிகின்ஸ் கம் மை டியர்!
ராஜ் ப்ளீஸ் கேன் யூ புட் தி சேர் நியர் டூ ஹியர்.தாங்க்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket



வாட் ஏ பீயூட்டிஃபுல் கேர்ள் வித் சாரி! - எர்னஸ்ட் & ப்ரான்செஸ் வியப்பாக!

இப்படியான வசனங்கள் இப்போதைக்கு கேட்க ஆரம்பித்துவிட்டன நம்ம பாண்டிச்சேரியில்!

இது இன்னும் கொஞ்ச நாள்ல காவிரி டெல்டா, கோவை, ஏற்காடு திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதிகரிக்ககூடும்!

அதாவது இந்த எர்னஸ்ட்டும் ப்ரான்செஸும் அமெரிக்க மூத்த குடிமக்கள் வயது முறையே 93 & 89 வயதுதான்!

இவங்க புள்ளையாண்டன் பெற்றோர் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு,தன்னோட குடும்பத்தையும் பார்த்துக்கிறதுங்கறது கஷ்டமான விஷயம்ங்கறது ஒலகமே ஒத்துக்கிட்ட ஒண்ணாகிப்போச்சு அதுவும் எதாவது நோய் வந்தா கேட்கவே வேணாம் முழி பிதுங்கிடும் அதே மாதிரி நிலைமதான் நம்ம ஸ்டீவுக்கும் (புள்ளையாண்டான்) என்ன பண்றதுன்னு ரொம்ப யோசிக்கும்போதுதான் ப்ரெண்ட்ஸ் உதவிக்கு வந்தாங்க!


ஏம்பா.. இவ்வளோ கஷ்டப்படுற பேசாம அவங்களை இந்தியாவுக்கு அனுப்பிச்சுடு! நாம இங்க மெடிக்கலுக்குன்னு செலவு பண்ற காச விட பல மடங்கு குறைவு அதுவுமில்லாம,இங்க இருக்கற இந்திய ஆளுங்களுட்டயும் நான் விசாரிச்சுட்டேன், நம்ம ப்ரெஞ்ச் ஸ்டைல் இன்னும் இருக்கற பாண்டி ரொம்ப நல்ல இடமாம்! நிம்மதியா அவங்களும் இருப்பாங்க. நீயும் இருக்கலாமுனு ஐடியா கொடுக்க, இப்ப ஸ்டீவோட அப்பா அம்மா பாண்டிச்சேரியில அநேகமா நான் முதல்ல சொன்ன டயாலக்கத்தான் பேசிக்கிட்டுருப்பாங்க! .


இங்க நாம பெத்தவங்கள தனியா விட்டுட்டு வெளிநாடு போய் சம்பதிச்சு வாழ்ந்துக்கிட்டுருக்கற காலகட்டத்துல அப்பா அம்மா நல்லாருக்கணுமுனு அவங்கள பாரின் அனுப்பி வைக்கிற புள்ளை என்னைய பொறுத்தவரைக்கும் மேலை நாட்டு நாகரிகத்திலிருந்தாலும் கூட பெத்தவங்கள நல்லா பர்த்துக்கணுமுனு நல்லாவே ஃபீல் பண்றாரு!

நாமளும் இது மாதிரி பெத்தவங்கள கொண்டு போய் விடலாமேன்னு சாய்ஸ் சொல்லலை!

இந்த மாதிரியான வேலை,அவுட் சோர்ஸிங்கு - நமக்கு நல்ல விஷயமா?

சப்பரம் ஒட்டலாமா? - ஆடி ஸ்பெஷல் # 2

இந்த தடவ, கொஞ்சம் பெரிய சப்பரமா வாங்கி தர அப்பாக்கிட்ட சொல்லும்மா? அப்படின்னுதான், ஆரம்பிக்கும் எனது ஆடி மாதம்!

பட், நான் கஷ்ட்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி, சப்பரம் வாங்குனா,அது வரைக்கும் சும்மா இருந்த அண்ணன் அதுக்கு டிரைவராகிடுவான். எனக்கு பயங்கர கோபமா வரும்! பொறுத்துக்கோடா அடுத்த வருஷம் நீ ஓட்டலாம் அப்படின்னு சொல்லி சொல்லியே கடைசி வரைக்கும் நான் ஒட்டவேயில்லை. அண்ணன் ஒட்டறத நிறுத்திய பிறகு, நானும் அது சின்ன பசங்க வேலைன்னு! விட்டுட்டேன்.

காலையில ஆறு மணிக்கு சப்பரத்த எடுத்துக்கிட்டு கிளம்பினா தெருவே வேடிக்கை பார்க்க்கும் கரெக்டா ஒரு மணி நேரத்தில காவிரியை ரீச் ஆகிடுவோம்.போகும்போது ஒண்ணும் ஸ்பெஷல் கிடையாது என்னா மத்தவங்க ஒட்டிட்டு போற பெரிய சப்பரத்த பார்த்து பெருமுச்சு விடுவோம்!(அதான் வாழ்க்கையின் தத்துவம் அப்படின்னு பின்னால உணர்ந்துக்கிட்டேன்)

அங்க பார்த்தா, பயங்கர கூட்டமா இருக்கும் பிரிஞ்சு இருக்கும் புதுசா கல்யாண பண்ணுன ஜோடிங்க,வயசான ஆளுங்கன்னு, இப்படி பட்ட கும்பல்ல சின்ன பசங்களான எங்களை, ஒரு பரிவா பார்ப்பாங்கன்னு அதுக்கு காரணமே நாங்க வைச்சிருக்கற சப்பரம்தான்!

காவிரிக்கு பூஜை பண்ணி சூடம் காட்டும்போது அம்மா என் சாமிக்கும்மா (வருஷம் வருஷம் கத்திதான் ஞாபகப்படுத்தவேண்டும் -ஏண்டா இப்படி சத்தம் போட்டு மானத்த வாங்குற! - இதுவும் வழக்கமானதுதான் )

மஞ்சள் கயிறு கையில கட்டியதும், சப்பரம் ரிடர்ன் ஜர்னி ஆரம்பிக்கும். இப்பத்தான் அந்த சப்பரத்துக்கு அனத்த காலமும் ஆரம்பிக்கும்!

டேய் சியாமளா கோவிலுக்கும் போகணும்,போய் பூ வாங்கி வாடா, அண்ணன் சொல்வதை கேட்டு ஓடிப்போய் பூ வாங்கி வந்து ரொம்ப சேப்டியா வைக்கற இடம் அந்த் சப்பரத்துக்குள்ளத்தான்,ரோடு புண்ணியத்தால எவ்வளவு தடவை கீழ விழுந்தாலும் திரும்ப திரும்ப எடுத்து வைப்பதும் அதனுள்ளேதான் !

சியாமளாதேவி கோயில் வந்தாச்சு உள்ளாற போய் ஒரு ரவுண்டு விட்டுட்டு சப்பரம் போய் நிற்கும் அடுத்த ஸ்டாப் பிள்ளை கடை டேய்..! போய் இட்லி பார்சல் வாங்கிட்டு வாடா! (பார்த்தீங்களா..! அண்ணன் எதுக்கு என்னைய அழைச்சிட்டு போறங்கறத!) பூ வைச்ச இடத்துல இப்ப இட்லி இருக்கும்!

அப்படியே நார்மலாத்தான் போய்க்கிட்டு இருப்போம் புலிமார்க சீயக்காய்தூள் கம்பெனி வரைக்கும் நான் அந்த நெறையா ஒரு மரத்துல நாலு கிளையா இருக்கும் தென்னை மரத்த பிராக்கு பார்த்துக்கிட்டு வந்து ரோட்ட பார்த்த அண்ணன் ரொம்ப வேகமா பஸ்க்கு போட்டியா ஓடிக்கிட்டுருப்பான்,இவ்வளவு நேரமும் நல்லாத்தானேடா இருந்தன்னு!? நான் பின்னாலயே கத்திக்கிட்டு ஒட தெரு திருப்பத்தில சப்பரத்தோட ஒரு சக்கரம் என் காலுல வந்து தட்டுப்படும், அதை பொறுக்கிகிட்டு வீட்டுக்குள்ள போறதுக்குள்ள இன்னெரு சக்கரம் படியிலேருந்து உருண்டுக்கிட்டு வரும் (பின்ன சப்பரத்த அப்படியே அலாக்கா தூக்காம படியில உட்டு ஏத்துனா என்னாவாகும்!) பத்திரமா இரண்டு சக்கரத்தோட கொண்டுபோய் நிப்பாட்டிட்டு அண்ணன் எஸ்கேப்பாக, கையில் நான் சக்கரத்தோட போறத பார்த்து குடும்பமே ஒண்ணு சேர்ந்து எம்மேல குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய தொடங்கும்!(சப்பரம் ஒட்ட ஆசைப்பட்டது ஒரு தப்புங்களா..??)

என் சொந்தக்கதை சோகக்கதை அது கிடக்கட்டும். நீங்க இந்த படத்தை பாருங்க எல்லாரும் இன்னைக்கு எவ்வளோ சந்தோஷமா ஆடிப்பெருக்க கொண்டாடிருக்காங்கன்னு தெரியும்!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket



நன்றி! தமிழககாவல்துறை (பாதுகாப்புக்கு)

நன்றி! தமிழ்முரசு (படத்துக்கு)

நடந்தாய் வாழி காவேரி - ஆடி ஸ்பெஷல் #1

காவிரி டெல்டாக்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, காவிரியில் தண்ணீர் இல்லாத காலங்களிலேயே ஊற்று வெட்டி மிகுந்த உற்சாகமாக கொண்டாப்படும் விழா காவிரியில் தண்ணீர் இருந்தாலோ சொல்லவேவேணடாம்!
Photo Sharing and Video Hosting at Photobucket
எங்கள் ஊரில் காலை ஐந்து மணியிலிருந்தே காவிரி கரைகளில் கூட்டம் கூட தொடங்கிவிடும் ! பெண்கள் காவிரியில் குளித்து, கரையிலேயே இருக்கும் ஆலமரத்தை சுத்தி பூஜை செய்வாங்க.
அங்க இடம் கிடைக்காதவங்க ஆற்றின் படித்துறைகளில் ஒரு மூணு அடிக்கு இடத்தை வளைச்சுப்போட்டு, அழைச்சிட்டு போன குட்டீஸ்கள, செக்யூரிட்டி மாதிரி நிற்க வைச்சு, அந்த படித்துறையை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, மஞ்சளாலான பிள்ளையார் வைத்து அதன் முன் விளக்கு ஏற்றி பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், ரவிக்கைத்துணி, காதோலை, கருகமணி, திருமங்கல்யச் சரடு , வெல்லம்+அரிசி சேர்த்து படைத்து, கற்பூரம் காட்டி, காவிரிக்கு பூஜை செய்து, ஆண்களுக்கு கையில மஞ்ச கயித்த கட்டி விட்டு,
புதிதாக கல்யாணமானவங்களுக்கு பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணி சுமுகமா பூஜையை முடிச்சு, கோவிலுக்கு போயிட்டு வீடு போய் சேருவாங்க!ஊருல இருந்தபோதெல்லாம் அம்மா கூப்பிட்டும்,போக மறுத்து அது பொம்பளைங்க சமாச்சரம்முனு இருந்து,(என்னால யாரும் டிஸ்டர்ப் ஆயிடக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும்தான்) இப்ப ஊரை விட்டு வந்த பிறகு மிஸ் பண்ணிட்டோமேனு ரொம்ப ஃபீல் பண்ண வேண்டியிருக்குங்க!வாய்ப்பு இருக்கறவங்க போய் காவிரியை (ஆற்றை) பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டுவாங்க சரியா.!
Photo Sharing and Video Hosting at Photobucket

ஆஃபர் போட்டிருக்காங்க போலாமா.!

வந்த புதிதில் எல்லா இடங்களிலும், மின்னிய ஆஃபர் விளம்பரங்களை பார்த்து அட நம்ம ஊரு மாதிரியேதானா? இங்கேயும் அப்படின்னு ஆச்சரியப்பட்டேன்.!

ஒரு நாள் ஆபர் போட்டிருந்த சூப்பர் மார்கெட்டுக்கு போனப்பத்தான் தெரிஞ்சுது பெரும்பாலான தலைகள் நம்ம நாட்டுக்காரங்கத்தான்னு! குடும்பத்தோட வந்து, போகும்போது, காரை நெறப்பிக்கிட்டு போறத அதிசயமாத்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்!

Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket


ஒவ்வெரு பொருளையும் விலையோட பெரிய A3 சைஸ்ல வழ வழ பேப்பருல ஃப்ரீயாக கொடுத்தத வைச்சுக்கிட்டு ,நம்மூரு விலையோட கம்பெர் பண்ணி பார்த்து பார்த்து, சில பொருட்கள எப்படி யூஸ் பண்றதுன்னும் நினைச்சு பார்த்து, பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளையும் ஊர் கவலையையும் ஓட்டியிருக்கேன்னா பாருங்களேன்!

ரூமூக்கு யாராவது வந்தா கரெக்டா கேட்கற கேள்வி, “வந்து எத்தனை நாளாகுதுன்னுத்தான்?” எனக்கு ஆச்சர்யமாருக்கும் எப்படித்தான் கண்டுபிடிக்கறாங்களோன்னு?!


அட உங்க ரூம்ல கிடக்கற அத்தனை சூப்பர் மார்க்கெட் ஆஃபர் பேப்பர வைச்சுத்தான் சார் எல்லாரும் ஈஸியா கண்டுபிடிக்கறாங்கன்னு.பக்கத்து ரூம்காரர் சொன்னபிறகுத்தன் அதன் உண்மையான அர்த்தம் புரிஞ்சுது!

சில பொருட்கள் அட இவ்வளவுதானா நின்னக்கவைக்கும் பல் பொருட்கள் ஆ..இம்மாம் விலையான்னு கேட்கவைக்கும்.

எல்லாத்தையும் வாங்குனுமுனு மனசுல நினைக்கத்தோணும்! ஆனா, அட, இத நம்ம ஊருல போயே வாங்கிக்கலாமேனு, இன்னெரு சாய்ஸ அதே மனசு சொல்றத,கேட்டு சும்மா வந்ததுக்கு ஒரு ஹெட்போன்,சைனா பிளேட் போன்ற சின்ன லெவல்லயே முடிச்சுக்கிட்டு, பெருசா ஷாப்பிங் பண்ணா மாதிரி, பெரிய்ய பை கேட்டு வாங்கிக்கிட்டு ஸ்டைலா ஒரு கோக்கோட வெளிய வர்றதுதான் எங்க ஆஃபர் ஷாப்பிங் ஸ்டைலாகிப்போச்சுங்க!