இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி!

அன்பு சகோதரர் ”கறுப்பியின் தமிழன் - காண்டீபராஜ்” இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களுடன்....!
கவிதைகளால் காதலித்து, காதலித்து, காதலை காத்து வரும் தூணாக...! புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே...!)

எண்ணங்களை எழுத்துக்களாக்கி, ப்ளாக்கி வைக்காமல் மனம்போன போக்கிலேயே காற்றிலேயே கவி எழுதி காணாமல் போகுமாறு செய்துக்கொண்டிருக்கும் சகோதரர் தீவிரமாக இணையத்தில் எழுதிட வேண்டும் என்ற கோரிக்கையினூடாக,பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

என் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...!

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!
***********************************
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
***********************************
எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்
போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!
***********************************
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...
***********************************
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!
***********************************
அவள்
ஓடிக்களைத்ததில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
***********************************
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.
***********************************
காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னமும் ஈரமாய்...
நானும் நீயும் வாழ்ந்த ஊரில்
நம் வருகைக்காய்......
***********************************
டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)


30 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Thamizhan karuppi kku iniya pirandhanaal vaazhthukkal :)

said...

தம்பி கறுப்படிக்கு வாழ்த்துக்கள், இன்னும் பழச நினைச்சு கவிதை பாடாமல் ஆயில்ஸ் போல புதுசு புதுசா பார்த்து ரசித்து கவி படைக்க வேண்டுகிறேன்.

said...

மாப்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-) //


மிச்சம் 620 பக்கத்தையும் பிடிஎப் இல் தரவும்

கறுப்பி ரசிகர் மன்றம்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழன்-கறுப்பி!

said...

வாழ்த்துக்கள் தமிழன்-கறுப்பி

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காண்டீபராஜ்

கவிதைகள் மிகவும் அழகு, கறுப்பியின் மீதான காதலைப்போல :))))))

620 பக்கமாஆஆஆஆஆஆஅ

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழன் அண்ணா.. :)))

said...

அருமையான கவிதைகள்.. :)))

said...

//காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!//

இந்தக் கவிதையை இரண்டுமுறைப் போட்டதின் மர்மம் என்னவோ ஆயில்யன் அண்ணா?? ;)))

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழன்-கறுப்பி!

said...

// நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...//

நல்ல கவிதை வரிகள், நல்ல காதலும் கூட. வெக்கம் கூட ஒரு சாதகமான பதில்தான் போலும்.
ஆமா கடைசில கொடுத்தாங்களா, கொடுக்கலியா?( கண்ணம் வீங்கிப் போனதுக்கு ஒரு தனிக்கவிதை போடனும்.). எப்படி கையிலயா? இல்ல?

தோழமைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெற வேண்டுகின்றேன்.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

பிற‌ந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன் தமிழ்‍‍ கறுப்பி அவர்களுக்கு... :))

கவிதைகள் அனைத்தும் அருமை... 621 பக்கங்களும் கிடைக்குமா...

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி காண்டீபராஜ்..

அப்படியே மிச்ச பக்கங்களையும் உருவி போடறது... நாங்களும் படிப்போம்ல...

said...

கறுப்பிக்கு எனது வாழ்த்துகள்!! :-)

/டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)/

அவ்வ்வ்வ்வ்!!

said...

/டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் /

கொலவெறியா இருக்கும் போல இருக்கே!! :-)

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழன் கறுப்பி ;)))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சாதனைகள் தொடரட்டும்

said...

பூவரசம்பூந்தோட்டக் காவலன் தமிழன் கறுப்பிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கறுப்பட்டி!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

கறுப்பிக்கும் இந்த நண்பனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!

said...

Vaazthukkal thambi!

said...

ungala tag panniteney boss

said...

belated wishes to tamizhan sir

said...

ஹே...நான் இதை நேற்று பாக்கலையே..

நன்றி மக்கள் ...

:)

said...

ஆமா அது நான்தான்...

:))

said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!