பாரதியார் !துவக்கப்பள்ளியின் நுழைவு அறையில் எண்ணற தலைவர்களுக்கு மத்தியில்தான் எனக்கு பாரதியார் பழக்கம் மற்றவர்களை விட தனித்து முண்டாசு ஒரு வித தனித்துவத்தினை கொடுத்திருந்ததும் காரணமாக இருந்திருக்கலாம்! மற்றபடி சிறுவர்மலரில் சின்னவயதில் படித்த பாரதியார் பற்றிய படக்கதைகள் மட்டுமே பாரதியாரை பற்றிய அறிமுகம் மற்றபடி பாடல்களிலோ கவிதைகளிலோ அல்லது கட்டுரைகளிலோ கொஞ்சமும் பாதிப்பு பெற்றிராத இளம் வயது பருவம்!

ஆண்டுவிழா அல்லது எப்பொழுதாவது பள்ளியில் காண்பிக்கப்படும் சுவர் திரை புரொஜெக்டர் படங்களின் மூலம் பாரதியார் பற்றி ஒரளவு அறிந்துக்கொண்டது ! இந்த அளவு அறிமுகமே கொண்டிருந்த எனக்கு, எட்டயபுரம் பாரதி நினைவு இல்லம் நோக்கிய பயணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒரு ஊருக்கு செல்கிறோம் என்ற நினைப்பு மட்டுமே!

மிகச்சிறிய ஊர் தான் என்றாலும் எட்டயபுரம் என்று சொல்லும்போதே ஒரு கம்பீரம் கொள்ளவைக்கும்! பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமே பாரதியாரின் நினைவு மண்டபமும் சற்று தூரம் நடந்து சென்றாலே பாரதியாரின் நினைவு இல்லத்தினை சென்றடைய முடியும் என்பது மட்டுமே ஓரளவுக்கு புரிந்து கொண்டு சகோதரருடன் நினைவு மண்டபம் நோக்கிய பயணம்!

கையில் கேமரா பேக்குடன் மண்டபத்திற்குள் எதோ ஒரு எதிர்பார்ப்புடனே நுழைந்தோம்! - ஏமாற்றம் தராவிட்டாலும் மாற்றம் நடந்துக்கொண்டிருந்தது மண்டபத்தில் மராமத்து பணிகள் என்ற பெயரில் முன்பக்கத்தில் சில பல வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. வாசலில் அமர்ந்திருந்த அலுவலரிடம் கையெப்பம் இட்டு இடதுப்புறம் திரும்பி உள்ள 20X20 அடி அறையில் முழுவதும் படங்களுடன்....!

சார் போட்டோ எடுக்கலாம்ங்களா?

ஒ.கே சார் தாராளமா எடுக்கலாம்! எடுங்க ! - விடுமுறையில் சுற்றி வந்த ஊர்களில் பொதுவிடங்களில் கேமராவோடு ஆயத்தமாக, நினைத்தப்போதெல்லாம் நான் கேட்டிராத வார்த்தைகளடங்கிய குரல்!

தலைவர்களுடனான படங்கள் - பாரதி இல்லாத இருக்கும் படங்களும் உண்டு.பாரதியாரின் இல்லத்தில் சேவை புரிந்த அம்மாக்கண்ணு இன்னும் சில கையெழுத்துபிரதிகள் பாரதியாரின் கையெழுத்து போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்!

கிராமம் ஆதலால் மண்டபத்துக்கே உரிய அம்சங்களின்றி சாதரண மக்களின் தினப்பொழுது அமர்ந்திருந்து பேசும் அரட்டைகள் வெளியில் காட்சிகளாக மெளனமாக நினைவு இல்லம் நோக்கி நடைப்போடுகின்றோம்!

வழியில் தமிழிசை மூவேந்தர்களில் ஒருவரான முத்து சாமி தீட்சிதர் நினைவு மண்டபம் திருவாரூரில் பிறந்து எட்டயபுரத்தில் முக்தியடைந்தவர் !

பாரதியார் நினைவு இல்லம் திறந்திருக்கும் வாசல் முன்பக்க வரண்டாவில் மேஜைகள் நாற்காலிகளுக்கு மத்தியில் தினகரனும், தினமலரும் சிதறிக்கிடக்க ஒருவரும் இல்லை எங்களை தவிர! உள்ளே சென்று பார்ப்பதில் சற்று அச்ச உணர்வு வந்த் போனது! வீட்டின் ஒவ்வொரு வடிவமைப்பும் இரும்பாலான வளைவு படிக்கட்டுகளும் சின்ன சிறு நுழைவாயில் கதவும் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துக்கொண்ட சகோதரனை சற்று ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன்! - இதுநாள் வரையில் இப்படியானதொரு சம்பாஷணைகள் நிகழ்ந்ததே இல்லை!- பல நூல்கள் பற்றிய செய்திகளுடன் திரும்ப திரும்ப இல்லத்தினை வலம் வந்து வெளியேறும் வரையிலும் எங்களை தவிர வேறு யாருமின்றி தனித்தே இருக்கிறது நினைவு இல்லம்!

மூத்த தலைமுறையினரின் வீடுகளுக்கு - கிராமங்களில்- சென்று வரும்போது ஏற்படும் ஒரு வித மனபாரம் - எத்தனையோ விசயங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்த காலத்தில் நம்மால் நம் பெரியவர்களை சரியாக கவனித்துக்கொள்ளவில்லையே என்ற பழி உணர்வு கண்டிப்பாய் வரும்! அப்பொழுது அந்த பெரியவர்களை மனதில் நினைத்து,நினைத்து கால ஓட்டத்தில் பெரிய்வர்களையும் ஒரு கடவுளாக நினைத்து கும்பிட பழகிக்கொள்வோம்! அப்படியானதொரு மன பாரம் தான் அன்று!

எத்தனையோ பாடல்கள் எத்தனையோ கவிதைகள் என குறுகிய காலகட்டத்தில் தம்மை முழுவதும் தமிழுக்காய்,சுதந்திர போராட்டத்திற்காய் அர்ப்பணித்திட்ட பாரதியாருக்கு நாம் ஒன்றும் பெரிதாய் அர்ப்பணித்துவிடவில்லை என்பது நிதர்சனம்!

எத்தனையோ பேர் அவர்தம் கவிதைகளினை பாடலினை பணமாக்கி பெரும் செல்வந்தர்கள் ஆன கதையும் கூட உண்டு! அவர்களுக்கு பொதுவாய் ஒரு வேண்டுக்கோள் உங்களால் செய்ய முடிந்த அளவு செய்து பாரதியாரின் நினைவு இல்லத்தில் அவர்தம் பாடலினை அந்த சுவர்களுக்கு எப்பொழுதும் சஞ்சரிக்கும்படி செய்து விட முயற்சியுங்களேன்!

நான் அமிர்தம் உண்டேன்
இப்பொழுதும் இனி எப்பொழுதும்
எல்லையற்ற தெய்வத்துடன் கலந்துவிட்டேன்
இனி இல்லை எப்பொழுதும் எனக்கு துன்பம்
எப்பொழுதும் எனக்கு விடுதலை!
- பாரதியார்

18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாரதியார் நு டைட்டில் பார்த்தவுடனே நல்லவரைப் பத்தியா இருக்கும்னு நெனச்சிட்டேன் பாஸ். !!!!!!

said...

போகணும் போகணும்னு நினைச்சு இதுவரை போகாத இடம். அந்த கோவிலுக்கு போயிட்டு வந்த உங்களுக்கே தனியா ஒரு கும்பிடு போடணும்....

said...

//Mahesh said...

போகணும் போகணும்னு நினைச்சு இதுவரை போகாத இடம். அந்த கோவிலுக்கு போயிட்டு வந்த உங்களுக்கே தனியா ஒரு கும்பிடு போடணும்.//

ஊருக்கு போகும்போது சிரமம பார்க்காமல் கண்டிப்பா ஒரு முறை சென்று வாருங்கள் அண்ணாச்சி ! :)

said...

எத்தனையோ பாடல்கள் எத்தனையோ கவிதைகள் என குறுகிய காலகட்டத்தில் தம்மை முழுவதும் தமிழுக்காய்,சுதந்திர போராட்டத்திற்காய் அர்ப்பணித்திட்ட பாரதியாருக்கு நாம் ஒன்றும் பெரிதாய் அர்ப்பணித்துவிடவில்லை என்பது நிதர்சனம்!

சர்வ நிச்சயமாய்.

கடைசி யோசனை பளிச்.

அருமையான பதிவு.


நானும் இங்கு சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவில்லத்துக்கு சென்றிருக்கிறேன். உள்ளே போகும் போது ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்க மிகவும் நேரமாயிற்று.

Anonymous said...

அவரை இருட்டடிச்சிட்டீங்களே பாஸ்!!!

said...

பாரதி பற்றிய பகிர்வுக்கு நன்றி.

பாரதி மணி மண்டபம், பாரதி இல்லம், அறிஞர் அண்ணா இல்லம் போன்றவை எல்லா தமிழ் மக்களும் பார்க்க வேண்டிய ஒரு இடம்,

மணி மண்டபம் பக்கத்தில் (100 அடி தூரத்தில்) சிறிய பராசக்தி கோவில் உண்டு.

கரி வேலம் முள் மரங்களுக்கு இடையில் சிறய கோயில். ஒரு ஆள் நடக்கும் அளவில்தான் பாதை இருக்கும்., அங்குதான் அவன் அமர்ந்து காணி நிலம் வேண்டும் பாட்டு எழுதியதை சொல்வார்கள்,

எம்ஜியார் மணிமண்டபம் திறப்பு விழா வந்த போது, மணி மண்டபம் நிகழ்ச்சி முடித்து நடந்தே அந்த கோவிலுக்கு சென்றாராம் (கார் வேண்டாம், பாரதி உலவிய மண்ணில் என் பாதமும் பதியட்டும் என்று நடந்தாராம்.)

அதே போல இன்றும் வைகோ எட்டயபுரம் வந்தால் பாரதி இல்லம் இருக்கும் தெருவிற்குள் காரில் வர மாட்டார், நடந்தே வருபவர் (மதனகோபால் சார் வீட்டு அருகிலேயே Endevour கார் நிறுத்தி விடுவார்).

said...

//சின்ன அம்மிணி said...

அவரை இருட்டடிச்சிட்டீங்களே பாஸ்!!!
/


அங்க போய் பார்த்தப்ப அப்படித்தான் பாஸ் தோணுச்சு !

said...

//ராம்ஜி.யாஹூ said.../

தகவல்களுக்கு நன்றி பாஸ்!

மிக மிக அமைதி நிரம்பிய தெருவும், இல்லமும் நிச்சயம் ஒரு கோவிலுக்கு நுழையும் உணர்வே பெறுவோம் !

said...

இப்படி எழுதப்படும் பதிவுகள் மட்டுமே வருடமொருமுறை அவர் நினைவை மீட்டித் தருகிறது.
பக்கத்திலே இருந்தும் இன்னும் முண்டாசுகாரரையும்,வீரமான மீசைக்காரரையும் பார்க்காமல் இருக்கேன்.இந்த பதிவு படித்ததும் போக வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.நன்றி ஆயில்யா

said...

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி. பதிவு படித்ததும் போக வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது

said...

பிறந்த நாள் நினைவு நாள் பதிவா? அருமை பாஸ்

said...

அடுத்த முறை ஊருக்கு போகும் போது நிச்சயம் செல்லவேண்டும்.

பகிர்விற்கு நன்றி.

said...

லீவ் போட்டுட்டு இதுக்காகவே போகனும்யா....

said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

பாரதியார் நு டைட்டில் பார்த்தவுடனே நல்லவரைப் பத்தியா இருக்கும்னு நெனச்சிட்டேன் பாஸ். !!!!!!/


நான் கூட அப்படித்தான் நினைச்சிட்டேன் பாஸ்:))

said...

பாரதியாரை அவரது பிறந்த நாளிலும் மறைந்த நாளிலும் தான் நினைக்கின்றார்கள். இன்றைக்கு பாரதியாரை நினைக்காமல் ஸ்ரேயா என்ற நடிகைக்கு ஒரு சானலில் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். இதுதான் தமிழனுக்கு கிடைக்கும் கெளரவம் வாழ்க ஜனநாயகம்.

said...

நல்ல பதிவு.

பாரதியார் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

"எங்களை தவிர வேறு யாருமின்றி தனித்தே இருக்கிறது நினைவு இல்லம்!...வருந்தக்கூடியதே.

said...

பாரதியார் குறித்து வழக்கமான விஷயங்களை விட்டு விட்டு புதுமையான முயற்சி. சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, புதுத் தகவலாகவும் இருக்கிறது.

http://kgjawarlal.wordpress.com

said...

// நான் அமிர்தம் உண்டேன்
இப்பொழுதும் இனி எப்பொழுதும்
எல்லையற்ற தெய்வத்துடன் கலந்து விட்டேன்
இனி இல்லை எப்பொழுதும் எனக்கு
துன்பம்
எப்பொழுதும் எனக்கு விடுதலை.//

விடுதலைக்கு பாடு பட்ட மகா கவிக்கு
துனபம் இல்லா விடுதலை.

ஆயில்யன் நல்ல பதிவு.