கோவில் மணிகள்!



கோவில் கதவுகளில் அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகளை பார்த்தால் ஒசை எழுப்பிவிடாமல் செல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்?!

மணி ஓசை கேட்டு செல்லுதலும், மணி ஓசை கேட்க செய்வது என்பதும் எல்லோருக்குமே ஒரு அலாதி பிரியம்தானே!

முன்பெல்லாம் - இப்பொழுதும் கூட பழங்காலத்து கோவில்களில் பெரியபெரிய 10’ நுழைவாயில் கதவுகளினை அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் அத்தனை கனமான அந்த மணிகளினை, அதிகம் யாராலும் சீண்டப்படாத அந்த மணிகளினை காணும்போதெல்லாம் எதோ மனத்தில் பாரமேற்றும் நினைவுகள் வந்து செல்லும் எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!

விடுமுறைகளில் சொந்த ஊருக்கோ அக்கம் பக்கத்து ஊர்களுக்கோ செல்ல திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக ஊரின் அருகில் இருக்கும் பழங்காலத்து கோவில்களுக்கு ஒரு முறை விசிட் செய்து மணி ஓசை ஒலிக்க செய்துவிட்டு வாருங்களேன்! - கட்டிடக்கலையில் நம் முன்னோர்களின் திறமையினை காணுகின்றோம் என்ற எண்ணத்தின் வழியாகவும் கூட உங்களின் கோவில் தரிசனம் இருக்கட்டுமே....!

21 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கலக்கல் படம் அண்ணே ;))

said...

:) super photo

Anonymous said...

கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ.

கோபிக்கு ரிப்பீட்டு

said...

படம் ஒரு வாழ்த்து அட்டை போல் இருக்கிறது - வாழ்த்துகள்!!

said...

/எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!/

அழகா இருக்கு...பாஸ். கவிதையாவே ஃபீல் பண்றீங்களே..எப்படி பாஸ்!!

said...

படத்துக்காக ஒரு போஸ்ட்டு ? எஞ்சாய். நல்ல படம் சாரே

said...

நல்ல படம் அண்ணே..

said...

படமும் பதிவும் அழகு !!

வித்தியாசமான சிந்தனை

said...

இன்னொரு ஒளிஓவியரு டோய் :)

said...

/ கைப்புள்ள said...

இன்னொரு ஒளிஓவியரு டோய் :)/

Repeattuuuuuuuuuuu....

said...

Photo superu :))))

Aana post imbuttu seriousa !!!!

said...

ஆயில்யன் இப்படி ஒரு கோவில் மணி பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
படம் அழகாயிருக்கு.நானும் எடுத்திட்டேன்.நன்றி.

said...

/*/எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!/
*/
ம்... எனக்கென்னவோ இப்ப எல்லாம் கோயில்ல ஓவரா கூட்டம் இருக்கிற மாதிரி ஃபீலிங்...

படமும் பதிவும் அழகு.

said...

படமும் கவிதை.. எழுதிய விசயமும் அருமை.. எப்டி பாஸ் இப்பிடில்லாம்‌

said...

அப்புறம் அந்தக் கோவில் கதவுகள்

“கோவில் மணியோசை தன்னை செய்ததாரோ!!!””

அப்படின்னு பாடும். அருமையான போஸ்ட் பாஸ்

said...

எதையோ ஆழமாக சொல்ல வந்து சொதப்பிவீட்டீர்களென தோன்றுகிறது.
நெக்ஸ்ட் மீட் பண்ணாலாம் பாஸ்...

Anonymous said...

//எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!//



எல்லாரும் வெளி நாட்டுல செட்டில் ஆயட்டாங்கனா அங்க எப்புடி ஆளுங்க இருப்பாங்க..ஊர் திருவிழாவ நியாபக படுத்திடீங்களே..


நல்ல படம்..


அன்புடன்,

அம்மு.

said...

காலேஜ்ல படிக்கும் போது எங்க bagல குட்டி குட்டியா 2 - 3 மணி மாட்டிருப்போம் ஸ்டைலுக்கு.. எங்களை ஆகாதவங்க "யானை வரும் பின்னே.. ..."னு பழமொழியை சொல்லி ஆத்திட்டு இருப்பாங்க.. :D

அழகான படம் :) அது சரி, எல்லா பதிவுமே 1ம் இல்லைனு தான் எங்க எல்லாருக்கும் தெரியுமே, எதுக்கு தனியா ஒரு லேபிளு? :P

said...

//அழகான படம் :) அது சரி, எல்லா பதிவுமே 1ம் இல்லைனு தான் எங்க எல்லாருக்கும் தெரியுமே, எதுக்கு தனியா ஒரு லேபிளு? :P//

1ம் இல்லைன்னு தெரிஞ்சும் ஒரு ஆர்வத்தோட எட்டிப்பாக்குறீங்கள அதுக்குத்தான் அந்த 1ம் இல்ல :))

said...

மணி ஓசை பல சமயங்களில் பால்யத்தை நினைவுப்படுத்தும்... உயரே கட்டியிருக்கும் கோயில் மணி கைக்கு எட்டாவிடினும் அப்பாவை தூக்க சொல்லி அதை ஒரு மறை ஒலிக்க செய்யும் பால்யம்... நல்ல பதிவு

Anonymous said...

படம் அழகு !!