ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!

வானொலியில் பாடல்கள் கேட்பது என்பது ஒருவித அலாதியான இன்பம்! என்னவிதமான பாடல்கள் யாருடைய இசை ஆர்வத்திற்கேற்ப ஒலிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் - எதிர்பாரா இன்பம் தரும் ஒரிடம் வானொலி!

தினமும் வானொலியில் பாடல் கேக்கும் பழக்கம் அதுவும் ஃஎப்.எம் ரேடியோவில் மட்டுமே அதிக அனுபவம் 5 வகையான நிலையங்களாக பிரித்து புதுப்பாடல் இளையராஜா மற்றும் .ஆர்.ஆர் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் மிக சவுகரியம்!

எதேச்சையாக கேட்ட பாடல் ஆயிரத்தில் ஒருவன் (2009) படத்தில் இடம்பெற்றிருக்கும் "பெம்மானே" என்று தொடங்கும் பாடல்

திருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!பெம்மானே பேருலகின் பெருமானே..
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ..!
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்!
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே..! (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை..!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்..!
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடை கோனே!

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்!
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே..!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ..!
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே..!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ..!

பெம்மானே பேருலகின் பெருமானே..!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!

பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

பெம்மானே பேருலகின் பெருமானே..

பதிவர் கதியால் அவர்களோட பதிவில் இந்த பாடல் பற்றி விவரமா சொல்லியிருக்காங்க!

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாட்டு கேட்டிருக்கேன். நல்லாருக்கு பாஸ்

said...

Attendance boss :)) Paatu inimae dhaan kekkanum :D

said...

அருமையான வரிகள்! அவற்றிற்கு உயிரூட்டும் குரல்கள்! நல்ல பகிர்வு ஆயில்யன்!

said...

பாட்டு ரொம்ப நல்லா இருந்தது ஆயில்யன்.
வானொலி கேட்கும் வழக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்!!

said...

//பாட்டு கேட்டிருக்கேன். நல்லாருக்கு பாஸ்//

ஆமா பாஸ். நானும் கேட்டுருக்கேன்

said...

\\\சின்ன அம்மிணி said...
பாட்டு கேட்டிருக்கேன். நல்லாருக்கு பாஸ்\\\

ரீப்பிட்டேய் ;)

said...

ஆயில்யன்,இங்கு வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் மனம் பிசைந்து கண்கள் கலங்காமல் விட்டதில்லை.நன்றி உணர்வுக்கு.

said...

இன்றும் என் அலைபேசியில் சேமித்து போகும் போதும் வரும்போதும் கேட்கும் ஒரு பாடல். என் மனதை பிழியும் ஒரு பாடல். நன்றி என்னையும் சுட்டிக்காட்டி இதிலே இணைத்ததற்கு. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

said...

பகிர்வுக்கு நன்றி.

பாடலின் வரிகளே கொஞ்சம் மனசை என்னவோ செய்யுது. சீக்கிரம் கேட்டுருவோம்.

said...

//திருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!//

ஆமாம் முதல் முறை கேட்டப்ப கொஞ்ச நேரம் வேற எந்த நினைவும் இல்லாம மனம் கனத்து போய் அமர்ந்து இருந்தேன்.

said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்.

said...

பாட்டை கேட்டிருந்த்தாலும் பகிர்வுக்கு நன்றி ஆயில்ஸ்!

said...

paadal keeddathum manam kalangi vittathu
urulakkizangu kuruma pottu kalakkum niingal tharpothu unmaiyaagavey kalanga vaithu vitiirgal