பிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகுமார்


காதல் சுவை கொட்டிக்கிடக்கும் கவிதைகள்,பயணத்தில் பார்த்ததை தன் பாணியில் வர்ணிக்கும் அழகு - இவரின் பயணத்தின் பிம்பங்களில், ரஜினியும் தேவதையின் தேசங்களும் புகைப்படமாகவும், லேபிளாகவும், கண்டு தொடர்ந்து சென்ற எனக்கு கதைகளும் கவிதைகளும் வர்ணிப்புக்களும் எளிய இனிய சொல்லாடல்களும் ஈர்ப்பினை உண்டாக்கிட பயணத்தின் பிம்பங்களின் வழியே நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கும் இந்த நாள் இனிய ஞாயிறு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!

***************************

எந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளிக்கிறது வானம்! எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி! கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில்! நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு!

நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை! ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள்! பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு காலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்!

ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள்! பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங்காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்!

மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்! வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..!

***************************

டிஸ்கி:- மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் எவ்வித முன் அனுமதியுமின்றி பயணத்தின் பிம்பங்களிலிருந்து எடுக்கப்பட்டது பதிவர் இரா.வசந்தகுமார் மன்னிப்பாராக...! :-)

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!!

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வசந்தகுமார் ;)

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் வசந்தகுமார்.

said...

பூங்கொத்துக்களுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

said...

அன்பு ஆயில்யன்...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றிகள் தவிர..! வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

said...

வசந்த்துக்கு வாழ்த்துக்கள்...

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!!