13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..!


//பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!
//
பெங்களூரூ குண்டு வெடிப்பு தொடர்பான பதிவிலிருந்து...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தெளிவாய் ஒரு சேதியினை சொல்லியிருக்கிறது!

இந்தியாவில் மனிதர்களை பீதியில் ஆழ்த்துங்கள்!

ரொம்ப சிம்பிளான சினிமாக்களில் கூட எடுத்து கையாண்ட விசயம்தான் இந்த கான்செப்ட்!

ஆனாலும் கூட அரசு தன் பாதுகாப்பு எந்திரங்களினை எந்த அளவுக்கு முடுக்கி விட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது! (இன்னும் லூசாக்கதான் இருக்காங்க போல - இத்தனைக்கும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைந்த டெல்லியில் சர்வசாதாரணமாக வந்து குப்பை தொட்டியில் குண்டினை போட்டு செல்கின்றனர்!

ஆனால் இந்த முறை ஒரே ஒரு முன்னேற்றம் - லைவ்வாக இருந்த குண்டினை பாம் ஸ்குவாடு அகற்றி அழகாய் கான்கீரிட் மிகஸ்ர் மிஷினை போன்றதொரு உருவமுடைய சிமுலேட்டரில் போட்டு சின்னதாய் வெங்காய வெடியாக வெடிக்க வைத்து அதை டிவிக்களில் லைவ் செய்துள்ளனர்!

குண்டுவெடிப்புக்கள் லைவ் ஆகாமல் இருக்க லையர்கள் ஆட்சிபீடத்தில் இருந்தபடியே ஏதேனும் செய்யவேண்டும் அட்லீஸ்ட் செய்வது மாதிரியாகவாவது நடித்து மக்களிடமுள்ள பீதிகளினை குறைக்கவேண்டும்!

மொக்கையாய் சில கேள்விகள்?

1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்?

2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க?

3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்?

4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன? அலர்ட் பண்றாங்களா? இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா?

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சிந்திக்க வேண்டிய செய்தி ..பதிவாக ..

நீங்கள் கேட்ட மொக்கை கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா ..நண்பரே

வாழ்த்துக்களுடன் ..

said...

நல்ல பதிவு ஆயில்யா.. சோகத்தில் பங்கு கொள்கின்றேன் :(

said...

:(

said...

ஆயில்யன் சார்,

நல்ல பதிவு. உங்கள் கேள்விகள் தொடர்பான என்னுடைய பகிர்தல் இவைதான்:

1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்?

நிச்சயமாக இயங்குகின்றன. எத்தனை இடங்களில் குண்டுவெடிப்புகளைத் தவிர்த்திருக்கிறார்கள் என்பதெல்லாம் செய்தி ஆவதில்லை என்பதால் வெடிக்கின்ற விஷயங்கள் மட்டுமே வெளித் தெரிகின்றன. இந்த மாதிரி விஷயங்களுக்குப் பெயர் போன அஸ்ஸாமில் இருப்பதால் இதனை ஆணித்தரமாக என்னால் சொல்ல இயலும். எவ்வளவு சிக்கலான அபாயகரமான பாதிப்புகள் அந்தத் துறை மற்றும் காவல்துறையால் தவிர்க்கப்பட்டுள்ளன என்று எங்கள் மாவட்ட அளவிலும் நிறுவன அளவிலும் நானே அறிவேன்.

கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்கிற போட்டி இருந்து கொண்டே தானே இருக்கும்? காப்டன் படங்களிலும் அவர் க்ளைமாக்ஸ் வெடிப்பை மட்டும் தானே தவிர்க்கிறார்?

2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க?

பயம் அல்லது வைக்கப்படுவது குண்டா குப்பையா என்று தெரியாததால்.

3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்?

இது ஐடி காரர்களுக்கான கேள்வி.

4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன? அலர்ட் பண்றாங்களா? இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா?

இது சொன்னீங்களே, நூத்தில் ஒரு வார்த்தை. தலைப்புக்கு செய்தி கிடைக்கவேண்டும் என்றால் இவர்கள் எதுவும் செய்வார்கள்.

said...

நல்ல பதிவு ஆயில்யன்! வன்முறை என்பதை தீர்வாக எடுத்துக்கொள்வது நம் சமூகத்தை தவறான பாதைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது வருத்தப்பட வேண்டிய விடயம்... :)
இதில் ஊடகங்களும் சந்தேகங்களை ஏற்படுத்தி போலிசாருக்கே தவறாக ஐடியாக்களை தருவதும் நடக்கின்றது.

said...

ஆயில்யன்,

செய்தி படித்ததிலிருந்து,வருத்தமாக இருந்தது. இந்தச் சோகங்களுக்கு முடிவே கிடையாதா என்று தோன்றுகிறது.
யாரோ அரசியல் செய்ய அப்பாவி மக்களா பலியாவது...
திரு .ரத்னேஷ் அவர்களின் பின்னூட்டம் ஆறுதலாக இருக்கிறது.

said...

‘each time, we are gaining experience’ என்று ஒரு மந்திரி சொல்லியிருப்பது தான் கொடுமையின் உச்சகட்டம் :-(

said...

பதிவு...

said...

ஏனிப்படி இருக்கிறார்கள்...

said...

உலகம் போதுமானதாய் இருக்கிறது என்று ஏன் இவர்களுக்கு புரியவில்லை...:(
(நம்ம ஊரையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

said...

எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் விளக்கம் வேணுங்க எந்த தீவிரவாதி வெடிகுண்டு வைக்கும் பொது அவன் அடையாளங்களை மாற்றிகொலாமல் தான் ஒரு முஸ்லீம் என்பதன் அடையாளமாக தடியோடு வருவான் ஒரு சமுகத்தின் மேல் தேவைல்லாத குற்றச்சாட்டு.

குஜராத் முதல்வர் சொல்றாரு appave நான் சொன்னேன் yaarum kekala பாருங்க இப்ப paam vedichuduchu athu yepadinga

said...

:-((

Anonymous said...

நல்ல பதிவு ஆயில்யன்.

said...

ஏதாவது செய்யணும் பாஸ்.... :((