LOVE பண்ண...!

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!

பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!

இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!

ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!

(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)

இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!

இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ எஸ்கேப்பூ!)

இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு .கே!)

இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!

வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”

இரு கைகளை கொண்டு உழைத்து வாழ வேண்டும் அதுக்கு காரணமாக அமைவது நீங்க எடுக்கும் ரிஸ்க்குகள்தான் ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


47 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நானும் முட்டி மோதி பாக்குறேன் பாஸ் ஒன்னுமே புரியல..

பேசாம அந்த மனுசரு மாதிரியே நானும் குளத்துல போய் தொபுக்கடீர்னு குதிச்சிடட்டா, அப்புறம் நீந்தி வந்தா வாழ்+கை யை புடிச்சிக்கறேன்.

ஐ மீன் ரிஸ்க் :))))))

said...

இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு //

பாஸ் நீங்க அவ்ளோ பெரிய ஸ்கிரிப்ட் வ்ரைட்டரா சொல்லவே இல்ல !!!!!!!

போங்க பாஸ் உங்களுக்குள்ள நீங்க பல திறமைகளை பொதைச்சு வெச்சிருக்கீங்க :)

said...

நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்! //

இதுக்குப்பேருதான் போட்டு வாங்கறதா பாஸ்.
வீக் எண்ட் பார்ட்டியெல்லாம் இதுக்காகத்தானா பாஸ் :))))))))

said...

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! //


ஒன்ஸ் அவுங்கவு(உ)ங்க பிகரா செட் ஆயிட்டாலே அவங்க வாழ்க்கை ரிஸ்க் தானே பாஸ் :)))))))

said...

இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! //

யூத் ஸ்டேஜ தாண்டிட்டா எப்படி இருக்கும் பாஸ், ரஸ்க்கை டீ ல ஊற வெச்சு சாப்பிடறா மாதிரியா :)))))))

Anonymous said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
//

இப்படி ஒரு விளக்கத்தை கோனார் உரைல கூட நான் படிக்கவேயில்லை.
ஹாட்ஸ் ஆப் டு யூ பாஸ்

said...

ஓஹ். இதுக்கு சங்கம்லாம் கூட இருக்கா ஆயில்ஸ்!

said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
//


அப்ப மிச்சமிருக்கற அந்த “ரிஸ்”-ஐ எங்க போய் கொட்டுறது?!

said...

//சென்ஷி said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
//


அப்ப மிச்சமிருக்கற அந்த “ரிஸ்”-ஐ எங்க போய் கொட்டுறது?!///

RIS - ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுக்கிட்டிருந்தா ஆட்டோமேடிக்கா அப்லிப்ட் பண்ணிவிட்டுட்டும் பாஸ் அதான் ல்வ்:)))))))))

said...

பாஸ் உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விசயம் நிறையயயயயயய இருக்கு பாஸ் :)

said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”//

எப்படி பாஸ் இப்படியெல்லாம்?

said...

ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் மாதிரி....

said...

பட விளக்கம்: மேற்சொன்னது ஒன்னும் முடியலன்னா படத்தில உள்ளது மாதிரி பெரிய குளமா பார்த்து குதிச்சிடுங்க.
அங்கயும் ரிஸ்க் இருக்கு!

said...

ஆயில்யன் என்ன சொல்ல வருகிறீர்கள்?

வாழத் தெரிந்தால் (ரிஸ்க் எடுக்க தைரியம் இருந்தால்) வாழலாம் என்று
தானே?

said...

ச்ச்சும்மா கலக்கலா இருக்கு ஆயில்யன்... பின்னுறீயளே..:)))

said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
//

itha padichitu thaan antha botola irukaravar thannila kudichi tharakolaiku tryinga?? :D :D

said...

பயபுள்ள ஒரு மார்க்கமாத்தான் திரியுது...எங்க போய் முடிய போகுதோ???

Anonymous said...

ஆயில்ஸ்,

புரியலையே! இது அதுவா??

said...

நீங்க நெறைய Risk எடுங்க. எங்களுக்கு ரஸ்க் மட்டும் குடுங்க. சாப்பிட்டு வேற வேலை இருந்தாப் பார்க்கலாம்.

said...

ஓகே பாஸ்.. ஓகே... எனக்குப் புரிஞ்சி போச்சி.. இதெல்லாம் எதோட எஃபக்ட்டுன்னு..;-)

said...

//பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்//

பாதி கிணறு தாண்டினா தொபுகடீர்ன்னு கிணத்துக்குள்ள விழுந்திடமாட்டோமா? என்ன பாஸ் இப்பிடி சொல்றீங்க‌

said...

எல்லாம் சரி... நீங்க இதுல எந்த கேடகிரின்னு சொல்லவேயில்லயே:-)

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நானும் முட்டி மோதி பாக்குறேன் பாஸ் ஒன்னுமே புரியல..
பேசாம அந்த மனுசரு மாதிரியே நானும் குளத்துல போய் தொபுக்கடீர்னு குதிச்சிடட்டா, அப்புறம் நீந்தி வந்தா வாழ்+கை யை புடிச்சிக்கறேன்.
ஐ மீன் ரிஸ்க் :))))))///

ம்ம் இன்னும் நிறைய ரிஸ்க் எடுக்கணும்போல உங்களுக்கு புரிய வைக்க :)))))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு //
பாஸ் நீங்க அவ்ளோ பெரிய ஸ்கிரிப்ட் வ்ரைட்டரா சொல்லவே இல்ல !!!!!!!
போங்க பாஸ் உங்களுக்குள்ள நீங்க பல திறமைகளை பொதைச்சு வெச்சிருக்கீங்க :)//

ம்ம் ஆமாம் பாஸ் எல்லாரும் இதே மாதிர்யான கருத்துகளைத்தான் சொல்றாங்க :(

said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! //
ஒன்ஸ் அவுங்கவு(உ)ங்க பிகரா செட் ஆயிட்டாலே அவங்க வாழ்க்கை ரிஸ்க் தானே பாஸ் :)))))))

கிடைக்கிறதும் கிடைக்காம இருக்கறதும் எடுக்கற ரஸ்க் பொறுத்து இருக்கு பாஸ் :)

said...

// சின்ன அம்மிணி said...
//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
//
இப்படி ஒரு விளக்கத்தை கோனார் உரைல கூட நான் படிக்கவேயில்லை.
ஹாட்ஸ் ஆப் டு யூ பாஸ்//

ப்போங்க பாஸ் நீங்க என்னிய நொம்ப்ப புகழுறீங்கோ!!! :)))

said...

//சென்ஷி said...
ஓஹ். இதுக்கு சங்கம்லாம் கூட இருக்கா ஆயில்ஸ்!///

அவ்வ்வ்வ்வ்!

said...

//☀நான் ஆதவன்☀ said...

பாஸ் உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விசயம் நிறையயயயயயய இருக்கு பாஸ் :)///

ம்ம் இப்படித்தான் சொல்லி சொல்லியே நான் நாசமா போய்ட்டேன் :)))

said...

//☀நான் ஆதவன்☀ said...
//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”//
எப்படி பாஸ் இப்படியெல்லாம்?//

நோ நோ அதெல்லாம் வெளிப்படையா ஜொள்ளப்பிடாது!

said...

//அமுதா கிருஷ்ணா said...
ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் மாதிரி....//

அப்படி சொல்லுங்க குட்! உங்களோட இந்த ஆர்வம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :))

said...

//இறக்குவானை நிர்ஷன் said...
பட விளக்கம்: மேற்சொன்னது ஒன்னும் முடியலன்னா படத்தில உள்ளது மாதிரி பெரிய குளமா பார்த்து குதிச்சிடுங்க.
அங்கயும் ரிஸ்க் இருக்கு!//

அவ்வ்வ்வ் குதிக்கிறதுன்னு முடிவு ஆன பிறகு அங்க ரிஸ்க் இருந்தா என்ன இல்லாங்காட்டி என்ன பாஸ்? :)))

said...

// கோமதி அரசு said...
ஆயில்யன் என்ன சொல்ல வருகிறீர்கள்?
வாழத் தெரிந்தால் (ரிஸ்க் எடுக்க தைரியம் இருந்தால்) வாழலாம் என்று
தானே?///

அதே! அதே! :)

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
ச்ச்சும்மா கலக்கலா இருக்கு ஆயில்யன்... பின்னுறீயளே..:)))//

தெய்வமேஏஏஏஏஏ நன்றி! நன்றி!! :)))

said...

//gils said...
//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்” //
itha padichitu thaan antha botola irukaravar thannila kudichi tharakolaiku tryinga?? :D :D///

போங்க பாஸ் உங்களுக்கு நொம்பத்தான் கிண்டலு :)

said...

// நிஜமா நல்லவன் said...
பயபுள்ள ஒரு மார்க்கமாத்தான் திரியுது...எங்க போய் முடிய போகுதோ???///

முடியாது ராசா முடியாது - தொடரும் :))))

said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...
ஆயில்ஸ்,
புரியலையே! இது அதுவா??//

எது அதுவா? இல்ல! இது அது அல்ல, அது இது அல்ல, இது அது எதுன்னு தெரியாம அதுன்னு சொல்லமுடியாது! ஹைய்ய எப்பூடி பதில் மரியாதை :))

said...

// ILA(@)இளா said...
நீங்க நெறைய Risk எடுங்க. எங்களுக்கு ரஸ்க் மட்டும் குடுங்க. சாப்பிட்டு வேற வேலை இருந்தாப் பார்க்கலாம்.//

ரிஸ்க் எடுங்கன்னு சொன்னா ஒரே அட்டாக் பண்ணிட்டீங்க போங்க பாஸ் !

said...

//இய‌ற்கை said...
ஓகே பாஸ்.. ஓகே... எனக்குப் புரிஞ்சி போச்சி.. இதெல்லாம் எதோட எஃபக்ட்டுன்னு..;-)///

ம்ஹுக்கும் வருசா வருசம் மீள்பதிவு போட்டு இதே டயலாக் மட்டும் கரீக்ட்டா போடறங்கப்பா! அவ்வ்வ்வ்

said...

//இய‌ற்கை said...
//பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்//
பாதி கிணறு தாண்டினா தொபுகடீர்ன்னு கிணத்துக்குள்ள விழுந்திடமாட்டோமா? என்ன பாஸ் இப்பிடி சொல்றீங்க‌/./

அதான் சொல்றேன் பாஸ்!

said...

// இய‌ற்கை said...
எல்லாம் சரி... நீங்க இதுல எந்த கேடகிரின்னு சொல்லவேயில்லயே:-)//

குதிக்கிற கேட்டகிரி இல்ல! பாஸ் குதிக்க நிக்கிறவங்களை தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கற கேட்டகிரி இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் :))

said...

இங்கு பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என்னோட கடும் கண்டனங்கள்..;)

அவ்வவ்வ்வ்வ்..பின்ன ராத்திரி வரவுங்க எதை வச்சி கும்மி அடிக்கிறது...இப்படி நீங்களே கும்மிட்டு போயிட்டா!! ;))

said...

ஆயிரம் ஜொல்லுங்க பாஸ்...உங்களுக்கு ஈடு இணையே நீங்கதான் பாஸ்...திகைக்கவச்சுட்டிங்க...

said...

புதிய தத்துவம் 10001.... கலக்குங்க அண்ணே.... ;))

said...

பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சு வாயத்தொறந்து பல மணி நேரமாச்சு பாஸ்...தப்பா நெனக்காதீங்க....எப்பூடி இப்பிடில்லாம்னு ஏற்கெனவே கேள்வி கேட்டுட்டாங்க ...அதுனால புச்சா என்ன கேக்குறது....?

said...

பாஸ் இப்ப நெலம சரியில்ல...இந்த கமெண்டையும் ரிலீஸ் செஞ்சுபுடாதீங்க...
நாலைக்கு கும்மிபுடரேன் கும்மி...

said...

ஹ்ம்ம்க்கும் இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை

said...

எங்கயோ போய்ட்டீங்க!!! ஒன்னுமே புரியல :))