ஏலேலங்கடி - 7



தடம் பார்த்து செல்வதை விட,

தடம் பதித்து செல்வதில் தான் வாழ்க்கை!

இருக்கிறது;

இனிக்கிறது;

ஜெயிக்கிறது!

மயிலாடுதுறை!

ஹய்யய்யோ! எங்க ஊரு இப்ப கூகுள் மேப்ல நல்லா தெரியுதே!!!!!!!!!


இதுதான் எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு!


இதுதான் எங்க ஊரு ரொம்ப பிரபலமான பியர்லெஸ் தியேட்டர் (இது எதிர்லதான் எல்லா காலேஜ் பஸ்ஸும் வரும் அப்படிங்கறது ஒரு உபரி தகவல்!)


இதுதான் என்னோட பேவரைட் பெரிய கோவில்!

கூகுள் மேப்பில் எங்கள் ஊரினை நீண்ட காலத்துக்கு பிறகு பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் இருக்கே ஆஹா...! ஆஹாஹா!

போய் வருகிறேன்!






இது நாள் வரையிலும் எத்தனை எத்தனையோ இடர்பாடுகள் வந்து கொண்டே இருந்தாலும் எதற்கும் சளைக்காமல் தன் பணிகளினை செய்துக்கொண்டு இருந்த நிலையில், தலைமையின் வேண்டுகோள் ஏற்று விடைப்பெற்றார்!

புதுவையின் குட்டி காமராஜராக புகழப்பட்ட ரங்கசாமி!

12 ஆண்டு ஒதுங்கியே இருந்து அரசியல் கவனித்து வந்த முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மீண்டும் முதல்வரானர்!

டபுள் சாட் - ஜி சாட்!


அட இது தெரியாம இத்தினி நாளா இருந்துட்டோமேன்னு யாரும் நொம்ப ஃபீல் பண்ணகூடாதுன்னு ரொம்ப அவசரவசரமா இந்த மேட்டரை எலலாருக்கும் சொல்லிக்கிறேன்!

ஏற்கனவே இந்த சேதி தெரிஞ்சவங்க கண்டுக்க வேண்டாம்! - நிறைய பேருக்கு தெரியாமலும் இருக்கு! இன்னுமும் ஒரு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் இன்னொரு பயர்பாக்ஸ் விண்டோவினையும் வைச்சுக்கினு சாட்டிக்கிட்டிருக்காங்க! - பாவம்!

ரெண்டு ஜிசாட்டினையும் இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு இரண்டு யூசர் ஐடியில
இனி நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சாட்டலாம்!


குகூள் சாட் வர்ஷனுக்கு இங்கே

குகூள் லேப் வர்ஷனுக்கு இங்கே

இது ச்சும்மா டிரையல் தானாம் !

எதுவா இருந்தா என்ன? நமக்கு புடிச்சிருந்தா புடிச்சிக்கவேண்டியதுதான்!

ஏலேலங்கடி - 6

தேடி வந்த வாழ்வு!



சிரமப்பட்டு வந்த மக்களுக்கு,

உதவிகளினை தாமாக முன்வந்து வாரி வழங்கிய,

அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!

கண்ணீர் துடைத்து..!



(சமீபத்திய ருஷ்ய - ஜார்ஜிய போரில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி!)


அறிமுகங்களுக்கு அவசியமில்லை!

அன்னிய எல்லைக்கு அப்பாலும் இருக்கின்றன கண்கள்!

இருந்தவைகளை இழந்து

இருப்பவைகளை தேடி, இருப்பவர்களின்

கண்கள் நோக்கி கண்களை காணும்

வாய்ப்பு கிடைத்தால்

கண்ணீர் துடையுங்கள்!

விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!

நி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ!

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

கும்மிமேடை தன்னில் பதிவினை காணும்
திருநாளை காண வாராயோ! (வாராயோ )

தமிழ்மணத்தில் நேத்து ஹீட்டு
அதில் உன் பதிவுதானே ரொம்ப ஹிட்டு
சொல்லாம போக நினைக்காம
சோலோவா நின்னு துடிக்காதே

நாளைக்கும் பதிவு வருமா
அதில் கும்மி மேட்டரேதும் சேருமா?
கமெண்ட் மாடரேசன் தூக்காட்டி
கலாய்ப்பேன் நானும் மறுவாட்டி (வாராயோ...)

கும்மிக்கோலம் கொண்ட மகனே
புது கான பதிவு போடும் குயிலே
புது கவிக்கோலம் பூணும் கவியே
உன் குணக்கோலம் கண்ட இப்புவியே

நம் மொக்கை வாழ என்றும் பதிவிடு
நான் கும்மி ஆட என்றும் வழி கொடு!(வாராயோ...)

கும்மி அடிக்காத கையும் அடிக்காதோ
உன் மொக்கையான பதிவு கண்டு மகிழாதோ
மலராத பதிவுகள் மலரும்
முன்பு புரியாத கதைகள் விளங்கும்
மயங்காத கவிதை மயக்கும்
முன்பு புரியாத சில கவிதைகள் புரியும்

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

ஆயில்யன்:- நி.நல்லவா..! நான் தமிழ்மண பதிவர் வட்டத்தையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் எல்லாரும் கண்ணுலயும் நான் கண்ணீரைத்தான் எப்பவும் பார்க்கணும் அப்படியே வைச்சுக்குவியாப்பா!

நி.நல்லவன் :- அது என் கடமை நீ கவலைப்படாத தம்பி!

ஆயில்யன்:- நன்றி நல்லவா மிக்க நன்றி!

ஏ...!தமிழ்மணமே கும்மி மொக்கையோட நீ நீடூழி வாழணும்!



பாட்டு ரசிகர்களுக்காக பிரத்யோகமாய்....!

ஏலேலங்கடி - 5





நன்றி :- தினமணி

வீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்!


இன்றைய தினமணியின் முகப்பில் இப்படி ஒரு கட்டுரை!

தியாகம் தேசியம் என்று இன்னும் இந்த சொற்களோடு வாழ்ந்த தேசிய போராட்டத்தில் தம் வாழ்வினை அர்ப்பணித்த நல் உள்ளங்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட அவர்தம் மக்களுக்கு கூட நம்மால் சிறு உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறோமே என்பதை எடுத்துச்சொல்லும் சேதி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடி யிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு.
இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலு வுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.

ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40). தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.

காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடி வேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.

கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபா ம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வரு வாய் இல்லை.
அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.

வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தன லெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு - என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.

வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக்தியுடன் சிரிக்கிறார்."ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதி யத்திலாவது என்னை வேலைக்கு சேர்த் துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி வைத்து பாதுகாத்துகொண்டிருக்கிறது தமிழக அரசு!
நன்றி - தினமணி

படிக்கட்டும் அவள்!



பெற்றோர்கள் தம் பிள்ளைகளினை படிக்க சொல்லியே நாம் அறிந்த செய்திகளுக்கு எதிர்மாறாக ஒரு பெண்ணின் அப்பாவுக்கு தன் பெண்ணை மேற்கொண்டு படிக்கவைப்பதில் இம்மியளவும் எண்ணம் இல்லை! - காரணம் பெண் வயதுக்கு வந்த பிறகு வீட்டைவிட்டு அனுப்ப எண்ணமில்லாததுதான்! பழமையில் ஊறிப்போன பாதி பாவி! அப்பெண்ணின் அம்மாவுக்கோ படிப்பறிவு சுத்தமாக கிடையாது! கணவனின் நிழலிலேயே இருந்தவர் அவர்!

இவர்கள் பெற்ற பெண்ணுக்கோ படிக்கும் ஆர்வமும் இருக்கிறது அதற்கேற்ப வாய்ப்புக்களும் வந்து சேர்ந்திருக்கிறது!

பெண்ணுக்கும் படித்தே தீருவேன் என்ற வைராக்கியமும் கூட..

பெண்ணின் மதிப்பெண்ணிற்கேற்ப தொழில்நுட்பகல்லூரியில் இடம் கிடைக்கிறது - அதுவும் அருகாமை நகரிலேயெ

ஆனாலும் பெற்ற தகப்பனாரோ பெண் படித்த பள்ளியில் எனது அனுமதியில்லாமல் என் பெண்ணின் சான்றிதழ்களினை தரக்கூடாது என்ற செய்தியையும் கூறி விட, திகைத்து நிற்கிறாள் பெண் அவள் நிலை கண்டு தன் நிலை நொந்துக்கொள்ளும் தாய்!

பெண்ணின் தாய் எடுத்த முடிவில் இறுதியில் சரணடைந்த இடம் மதுரை உயர்நீதிமன்ற கிளை!

உயர்நீதிமன்றத்தின் உதவியோடு பள்ளியிலிருந்து சான்றிதழ்கள் பெறப்பட்டு அப்பெண் கூடிய விரைவில் கல்லூரியில் சேர்ந்துவிடுவாள்!

ஆனால் பெற்றோர்கள் பிரிந்த நிலைதான் வீட்டினை விட்டு வெளியேறி தம் சொல் கேளாமல் சென்றவர்களை இனி வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி கொண்டு திரியும் பெற்றவர்!

இந்த நூற்றாண்டிலும் கூட தம் கொள்கைகள் தம் மதக்கோட்பாடுகள்தான் பெரிது என்று திரியும் இது போன்ற சில பெற்றோர்களுக்கு அவர்கள் வணங்கும் இறைவன் தான் நல்ல எண்ணங்களையும் நல்ல வாழ்க்கையினையும் வழங்கவேண்டும்!

இது நாள் வரையிலும் தம் கணவனின் நிழலிலேயே வாழ்ந்து தன் பெண்ணின் விருப்பம் நிறைவேறியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்கேற்ப வெற்றி நடைப்போற்று சென்ற அந்த தாய் தான் எடுத்தமுடிவு சரியானதுதான் என்பதனை அவரது தியாகத்தில் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் அப்பெண்ணின் பிற்காலங்கள் உணர்த்த வேண்டும்!

அந்த உள்ளங்களுக்கு...

என் உள்ளத்தினை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுகிறேன்!

வாழ்க நலமுடன் வளமுடன்....!

டிஸ்கி:- பெயர்கள் மதங்கள் மற்றும் ஊர்கள் தவிர்த்த ஒரு உண்மை சம்பவம்!

ஏலேலங்கடி - 4

நம்பிக்கை! நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! இறைவனிடத்தில் நம்பிக்கை! இதுதான் வாழ்க்கை"
- சுவாமி விவேகானந்தர்.


ஒரு மனிதனுக்கு தன் மீது டபுள் மடங்கு தன்னம்பிக்கை இருந்தால் அவனை வாழ்த்தி வரவேற்பதுதான் நம் சமுதாயம் அவனுக்கு செய்யும் நற்செயலாகும்!

வாழைக்காய்!

டிஸ்கி:- சமைத்த பொருட்களின் பெயர்களினை தலைப்புக்களாய் பல பதிவர்களால் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுவிட்ட பிறகு இனி சமைக்கும் பொருட்களின் பெயர்களினை வைத்து ஸ்டார்ட் மியூஜிக் செய்யும் முயற்சியின் வெளிப்பாடாய்...!

>>>>>>>>>

எளிதாய் கிடைக்கக்கூடிய விளை பொருளாக நம் இல்லங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடிந்த வாழைக்காய் முக்கிய விசேஷங்களின் கட்டாயம் சமையலில் சேர்க்கப்படும் ஒரு காய்! கனியாகவும் இருக்கும் - ரொம்ப கனிந்து போச்சுன்னா கண்றாவியாவும் இருக்கும்!

சுமாராக பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லோர் வீடுகளிலும் கொல்லையில் தோட்டம் போடுவதையும் அதில் வாழை போடுவதையும் ஒரு வழக்கமான பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் தமிழ் மக்கள்!

இன்றைய காலகட்டத்தில் 2400 சதுர அடி பிளாட்டில் கான்கீரிட் தவிர்த்து மணலை காண்பதே அரிதாகிப்போய்விட்டது! இன்னும் நெருக்கமாய் வீடுகள் அமைந்து, கொஞ்ச நாள் கழித்து அடுத்தவன் வீட்டு மூச்சுக்காற்று என் வீட்டிற்குள் வருகிறதே என்று மொத்தமாய் மூடிவிடும் வாய்ப்பும் அதிகம்!

சரி சிட்டியை விட்டுட்டு கிராமப்புற போகலாம்ன்னு பார்த்தா, அவ்வ்ப்போது வநது கொல்லும் பலத்தமழைக்கு பயந்து வாழைத்தோட்டம் என்ற ஒரு சொல்லினையே சொல்ல தயங்க ஆரம்பித்துவிட்டனர்!

ஏதோ இருக்கும் ஒரு சிலர் மட்டுமே மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு விளைவிக்கும் வாழைகள் அது தரும் கனிகள் தான் இன்றும் இந்த வாழையின் பெயர் மார்கெட்டுக்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்க காரணமாய் அமைந்திருக்கின்றன!

வாழைக்காய் இரும்புச்சத்து மாவுச்சத்து கொண்ட காய் என்பதால் சிறுவயது முதலே உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேணடிய பொருளாக நம் பெரியோர்கள் கட்டளை இட்டுவிட்டனர் போலும்!

ஆங்கில காய்கறிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு நம் சமையலறைகளினை ஆக்ரமித்து இருந்த காய்கறிகளில் வாழைக்காய்,வாழைப்பூ & வாழைத்தண்டு இவைகள்தான் ஸ்பெஷல்!

ஜஸ்ட் வாழைதண்டு போட்டு சாம்பார் வைச்சு,வாழைக்காய் பொரியல் செய்து,வாழைப்பூ போட்டூ கூட்டு வைத்து சமைத்து சாப்பிட்டாலே ஒரு பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரியான பீலிங்க் இருக்கும் அப்படின்னுயாரும் சொல்லலை ஆனா நான் அப்படி தின்னு நிறைய் தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் இப்ப கிடைக்காம, திங்க முடியாம ஃபீல்பண்றேன்!

சரி எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டங்கள் மட்டும் சொல்றேன்! உங்களுக்கு பிடிச்ச வாழைக்காய் ஐட்டம் எதாவது இருந்தா வாய்ப்பு கிடைச்சா செஞ்சு சாப்பிட்டு வந்து சொல்லுங்க ஒ.கே!



வாழைக்காய் காரக்கறி - அதுவும் கொஞ்சம் காரத்தோட மிளகு சீரகம் போட்டு வாழைக்காயை வில்லை வில்லையா நறுக்கிப்போட்டு செஞ்சா...! ச்சே சான்ஸே இல்லப்பா!( இப்ப அதிகம் உருளைகிழங்கு யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! :-( )

வாழைக்காய் பொறியல் - இது அதிகம் எல்லோருமே சாப்பிட்டிருக்ககூடும்! அழகிய ஸ்கெயர் டைப்புல வெட்டி அதுல தேங்காய் துருவிப்போட்டு.....!

வாழைக்காய் பஜ்ஜி- இது நீளமா வெட்டிபோட்டு பஜ்ஜி போட்டாலும் சரி இல்ல வில்லையாக்கினாலும் சரி சூப்பர் டேஸ்ட் அத்தோட கொஞ்சம் தேங்காய் சட்னி சைடுல உட்டுக்கிட்டா சூப்பரோ சூப்பர்! (வெளியே கடையில செக்கசெவேல்ன்னு விக்கிற பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பு!)

கூடுதல் தகவல்:-

தமிழ் பெயர்:- வாழைக்காய்
ஆங்கில பெயர்:- Plantain, green
அறிவியல் பெயர்:- Musa sapientum

ஏலேலங்கடி - 3

கெலிக்கிற ஒவ்வொரு மனுசனுக்கும் பின்னாலயும் ஒரு கேர்ள் ப்ரெண்ட் குந்திக்கினுருப்பாக!



ஜெயிக்காத ஒவ்வொரு மனுசனுக்கு பின்னால...

கூட்டமா பல கேர்ள் ப்ரெண்ட்கள்! கும்மிக்கிட்டிருப்பாங்க!

ஸோ நண்பர்களே லைஃப்ல கெலிக்கணுமா அல்லாங்காட்டி கவிழ்ந்தடிச்சு கிடக்கணுமான்றதை அப்பாலிக்கா நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க!

டிஸ்கி:- கண்டதும் சுட்டது இங்கே இருந்து - நன்றி சந்தனமுல்லை அக்கா!

நாம் அடிமைகளாகிப்போன அவலம்!

அன்புக்கும் அறிவுக்கும் இன்னும் சில இடங்களில் ஆணவத்திற்கும் அடிமையாகிப்போன வரலாறு மட்டும் கொண்ட மனிதன் இனி மக்கிபோய் பின் விக்கித்து போகும் விலைக்கு போயிருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கும் அடிமைகளாகிப்போய்விட்ட அவலத்தினை சித்தரிக்கும் காட்சிகள்!


19.08.08 செய்திகளில்....!

நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.

கத்தி தாவுது மனசு!

என்றைக்கு இந்த விசயம் இண்ட்ரோ ஆனதோ அன்றைக்கு ஆரம்பிச்சு இன்றைக்கு வரைக்கும் எத்தனையோ விதமான மாற்றங்கள் வந்தே விட்டது!

ஆனால் கூட பய புள்ளைங்களும் எதுவும் மாறுனதா தெரியல! நிறைய மாத்திக்கிட்டிருக்காங்க ஆனா மாறாமாட்டிக்கிறாங்க!

என்ன ஆளுங்க பாருங்க டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி மாறுங்கடாப்ப்பான்னு சொன்னா டெக்னாலஜியை அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வழக்கம்போல ரவுண்டு அடிச்சு வந்துக்கிட்டிருக்காங்க!

அப்படி என்னப்பா அந்த விசயம் அப்படின்னு டென்சன் ஆகாம பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கவங்களுக்கு செல்போன் மேட்டர் பத்தி சொல்றேன்!

ஆரம்பிச்ச அன்னிக்கு காதுல வைச்சு கத்த ஆரம்பிச்சாங்க இன்னும் கத்திக்கிட்டுத்தான் இருக்காங்க! சிக்னல் இல்லாட்டியும் சரி,செல்போன்ல சார்ஜ் இல்லாட்டியும் சரி என்னமோ இவுக செல்போன்ல இருக்கற மைக்கும் எதிர் சைடுல இருக்கறவரு போன்ல இருக்கற ஸ்பீக்கரும் வேலை செய்யவே செய்யாது அப்படிங்கற மாதிரி அப்படி ஒரு காட்டு கத்தல்!

டேயெப்பா அதுக்கு நீங்க செலபோன் இல்லாமலே பேசலாம்டான்னு எவ்ளோதான் கிண்டலடிச்சு பாருங்க! அசரமாட்டானுங்க அடுத்த நிமிசம் கால் வந்தா கத்த ஆரம்பிச்சிடுவானுங்க! இது அவுங்களுக்கு பழக்கமான விசயமாகிப்போய்ட்ட ஒண்ணு அதே நேரத்துல காதுக்கு காப்பு மாட்டி விட்ட மாதிரி செல்ப்போனை வைச்சு அழுத்திக்கிட்டு பேசுறதாலதான் அவுங்க கத்துறது அவுங்களுக்கே கேட்கலையாமாம்! அப்படி ஒரு ஆய்வு நடத்தி இருக்கானுங்க!

ஆமாங்க அது தான் நமக்கும் தெரியுமே விடுமுறைகளில் சனிக்கிழமை இரவுகளில், நிலாவே வராத நாளிலும் கூட, நிலா சோறு என்ன பெயரில் குண்டான் சோற்றை தயிர் விட்டு குழைத்து எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் புளிக்குழம்பினையும் ஏந்திக்கொண்டு அப்படியே மொட்டை மாடிக்கு போய் உக்காந்துக்கிட்டு நல்ல இருட்டுல ( அதான் நிலா இல்லாத நிலா காலமாச்சே! ) கையில கொஞ்சம் தரையில கொஞ்சம் சாதம் குழம்பு வைச்சு கொட்டிக்கிட காலத்தினை நினைச்சா....!

ம்ம் நினைச்சுக்கிட்டே இருக்கலாம்ங்க!

எல்லா சோத்தையும் தின்னு முடிச்சதும் செரிக்கறதுக்காக வேண்டி, நல்ல சப்பணம் கொட்டி உக்காந்துக்கிட்டு இரண்டு கையையும் எடுத்து காதுல பொத்திக்கிட்டு...!

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


இப்படியெல்லாம் சவுண்டு வுட்டா அப்ப தெரியும்! அண்ணன்காரன் அடிக்க வர்றதும், அதுக்கு தப்பி தாவி போறதும் பிறகு மாட்டி அடி உதை வாங்குறதும் இப்படியே ரகளை பண்ணிக்கிட்டிருந்தா தின்ன சோறு ஆட்டோமேடிக்கா செரிச்சிடும்ல!

டிஸ்கி:- பதிவுல ஆரம்பிக்கிற மேட்டரும் சரி முடிக்கிற மேட்டரும் சரி சம்பந்தமில்லாம இருக்கணும் ஆனா சம்பந்தமிருக்கணும்! அப்படின்னு டிங்க் பண்ணி எழுதுன மொக்கைதான் இது! - இது டேக் மாதிரி திரும்ப ஒரு ரவுண்டு வர வைக்க மறைமுக பேச்சு வார்த்தைகள் செஞ்சு ஒரு 3 பேரை சரிக்கட்டி வைச்சிருக்கேன்!

ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

ஈழத்தமிழர் போராட்டத்தில் நாம் வெள்ளி விழாவைக்கொண்டாடி மகிழ்கிறோம்!

- தொல்.திருமாவளவன்!



மிக்க வருத்தமாய் சொல்லியிருந்தால் மகிழ்ச்சி!

மகிழ்ச்சியாய் சொல்லியிருந்தால் மிக்க வருத்தம்!

ஏலேலங்கடி - 2







PIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு!


ஒரு வழியா நானும் வந்துட்டேன் ஆகஸ்ட் 2008 - பிஐடி போட்டியில கலந்துக்க!

இன்னும் பத்தாண்டுகளில் இந்த படம் நாமெல்லாம் கண்காட்சியிலதான் பார்க்கற மாதிரி இருக்கும்!


என் மேல் உள்ள நம்பிக்கை! :-)

எம் மக்கள் மீதிருக்கும் நம்பிக்கை! :-(

இந்த நாள் இனிய நாள் - ஆகஸ்ட் 15

அதிகாலை எழுந்து அவசரவசரமாய் இன்று மட்டும் ஸ்பெஷலாய் வெள்ளைச்சட்டை காக்கி டவுசர் அயர்ன் செய்து அணிந்து நண்பர்கள் குழுவாக பீடு நடை போட்டு பள்ளி சென்று,

தமிழ்தாய் வாழ்த்து....!

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !


பாடி முடித்து,

அதை தொடர்ந்து ஆசிரியர்களின், சுதந்திரத்திற்காய் உழைத்த தலைவர்களின் கதைகள் கேட்டு, அரசு தயவில் வரும் இனிப்பு பெற்று,

முடிவில் தேசிய கீதம் பாடி,

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாமே ஜாகே,

தவ சுப ஆஷிஷ மாகே,

ஜாஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.



களித்திருந்த நாட்கள்! - கனவில் வந்துப்போகிறது

அப்பொழுதும் தெரியவி்்லை இப்பொழுதும் புரியவில்லை

இந்தியமாக உருவகப்படுத்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் இன்னும் தம் எல்லையினை தாண்டி வெளியே வரவில்லை என்று!

எல்லோரையும் ஓட ஓட விரட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அரசியல்வாதிகள் அப்பாவி மக்களின் துணைக்கொண்டு!

தற்போதைய நிலையில் நாம் உருவாக்கம் செய்து வைத்திருக்கும் இந்திய தாயின் நிலைமையும் இந்த தாயின் நிலைமையும் ஒன்றுதான்!


ஒற்றுமையாய் இருங்கள் எம் இந்திய தேசத்து மக்களே! ஜாதி, மத, மாநில,மொழி வேற்றுமைகள் மறந்து....!

வருடந்தோறும் வரும் இந்நாளில் மட்டுமாவது நாம் கொஞ்சம் சிந்திப்போம் தேசத்தினை பற்றி!

ஆம் தேசத்தினை பற்றியே! - தேசத்தை நேசமாய் பற்று!

ஏலேலங்கடி - 1




லேபிள் :- சொல்றதுக்கு ஒண்ணுமில்ல! (சிந்தனை தூண்டல் - நன்றி பரிசல்காரன்!)

ஸ்கூல் நினைப்பு!


பள்ளி கூடத்து நினைவுகள் என்றாலே வரிசைக்கிரமமாக சொல்வது முடியாத விசயம்! (அப்ப ஆறாவது டீயுசன் போனோமா இல்ல 8 வது இங்கீலிஸ்க்காக டீயுசன் போனோமான்னு மனசுல ஒரு ஜெர்க்கு வரும்ல அதுதான் இது!)

ஆறாவதில் ஆரம்பிக்கும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஆசிரியரிடம் நாம் முதலில் வாங்கிய அடி அல்லது வாழ்த்து கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும்! (எனக்கு அடி வாங்குனது நல்லா ஞாபகத்துக்கு வருதுப்பா!)

ஒவ்வொரு வகுப்பிலும் வருடங்களை கழித்து மாறிச்சென்றது, மாறி செல்கையில் மறந்த நட்புகள்! சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! - அவ்ளோ ஞாபகம் இருக்காடா உன்கிட்டன்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு நான் எல்லாத்தையும் வீடியோ பைலாக வைத்திருப்பதால் இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!

அவ்வப்போது பீறிட்டு கிளம்பும் எண்ணங்களை நினைவுகளை சொல்லி கொள்ள அருகில் நண்பர்கள் கிடையாது என்ற காரணத்தினாலும், போன் போட்டு அழ,அல்லது சிரித்து மகிழ வாய்ப்புக்கள் மிக காஸ்ட்லியாக இருப்பதாலும், இருக்கவே இருக்கு இணைய தொடர்பில் நட்புகள் என்ற தைரியத்திலும், ஊர் உறவுகள் தங்கள் உணர்வுகளினை பகிர்ந்துக்கொள்ள ஒரு இடம் வலைத்துப்போட்டிருப்பதாலும் இனி அங்கு இருந்தப்படியே உங்களை அவ்வப்போது சந்திக்கிறேன் என்ற செய்தியோடு மீ த எஸ்கேப்பு!

நீ காத்து நின்னில்லோ...!

ரொம்ப நாளாச்சே..! என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டீயான்னு?

ஒரே மெயில்களின் தொந்தரவு!

சரி ஒரு பாட்டை போட்டு நம்ம பாசத்தை காட்டிக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு!

பாட்டும் போட்டாச்சு!

சுஜாதா பாடிய பாடல் நம்ம வித்யாசாகர் இசையமைப்பில் 2002ல் வெளியான படத்தின் ஹீரோயின் கலக்கல் காவ்யா மாதவன்! (ஹீரோ பத்தி சொல்லணுமா?)

பாடல் வரிகளும் இருக்கு பாட ஆசைப்படறவங்க டிரைப்பண்ணலாம்!

Aaanachandam ponnambalchamayam nin naanachimizhil kandeela
Kaanakkadavil ponnoonjal padiyil..nin oonachinthum ketteela
Ooo…kalappurakkolayil nee kaaathu ninnela..
Marakkuda konil melle meyyolicheela
Paattonnum paadella paalthulli peytheella.. (2)
Nee pande ennodonnum mindeella………..(2)
Mindeela …nee pande ennodonum mindeela… (Karimizhi)


Eeerenmaarum en maaril minnum eee maaramarukil thotteela
Neelakkannil nee nithyam vekkum eee ennathiriyaay minneela
Mudichurul choodinullil nee olicheela
Mazhathazha paaya neerthi nee vilicheela
Maamunnan vanneela maarodu chertheela (2)
Nee pande ennodonnum mindeela.. (Karimizhi)

இளைய (இணைய) தலைமுறை...?


வாழ்க்கை மிகப்பெரிய மைதானம் எல்லோரும் ஒடிக்கிட்டிருக்காங்க!

அதான் ஓடவேண்டிய மைதானத்தில் யாரும் ஓடுவதில்லை!

சிறுவர்கள் பக்கா வசதிகளோடு வீட்டிலேயே, வீடியோ கேம்களிடமோ அல்லது இண்டர்நெட் கேம்களோடோ செட் ஆகிவிட்டனர்!

இது இளையதலைமுறை - இணைய தலைமுறையாக போனதன் பரிதாபம்!

அதிகம் பிரச்சனையே இல்லை என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் பெரும் ஊக்கத்தினோடாக இது போன்ற செயல்களில் ஈடுபட பிள்ளைகளினை தயார் செய்து விட்டார்கள்!

இனி விளையாடு மைதானங்கள் தோறும் பச்சை பசும்புல் வெளிகளினை சுற்றி வருபவர்களாக இளைய தலைமுறை தயாராகிவிட்டது! - பருமனை குறைக்கவும் சர்க்கரை வியாதியினை சரிக்கட்டவும்!

மெல்ல மெல்ல குழுவாய் விளையாட வேண்டிய அவுட்டோர் விளையாட்டுகள் குறைந்து இண்டோர் விளையாட்டுகளாக இண்டர் நெட் விளையாட்டுகளாக மாறிக்கொண்டே வருக்கின்றன!

குழுவில் கூச்சலிடும் சந்தோஷ ஆரவாரமிடும் போக்கு மாறி,தனிமையில் இணைய மனிதர்களிடம் வருத்தம் சந்தோஷம் பகிர்ந்துக்கொள்ளும் நாட்கள் நடக்கதொடங்குகின்றன!

பெரும்பாலும் வெளிப்புற விளையாட்டுகள் என்பது குழு மனப்பான்மை அல்லது நட்பினை வலுப்படுத்தி, மேலும் மேலும் சிந்தனை தூண்டியபடியே புது புது யுக்திகளை களத்தில் கையாளும் முறையினை பெற உதவும் என்பதே மிக முக்கியமானதொரு நன்மை!

ஆனால் அதையெல்லாம் இப்போதைய அப்பா அம்மாக்கள் சுத்தமாக மறுத்து விட்டனர் தம் பிள்ளைகளுக்கு! எங்கே வெளியே போகும் பிள்ளை எதாவது காயத்துடனோ அல்லது உடம்புக்கு ஊறு விளைவிக்கும் விதமான விபத்துக்களோடு திரும்புவானோ என்ற பயம் முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டுவிட்டது!

பார்க்கும் எதுவுமே மிக எளிமையாக இருக்கும் ஆனால் பழகும்போதுதான் மிக கடினமாக இருக்கும்! டிவிக்களில் அல்லது இணையங்களில் விளையாடும் விளையாட்டுகளில் உடல் உறுதி மன உறுதி எந்தளவுக்கு வலுப்படும் என்பது தெரியாது? ஆனால் விளையாட்டுக்களத்தில் அது புரிபடும்!

சைக்கிள் ஓட்டிப்பழகுதல்
விளையாட்டு மைதானங்களில் விளையாடிக்கொண்டிருத்தல்
தெருக்களில் விளையாடுதல்
மரம் ஏறுதல்
இப்படியான விசயங்கள்
இனி இல்லாமலே போகும் சோகம் காணுங்கள்!

பழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9

இயற்கை வாழ்க்கையின் மீது இஷ்டப்பட்டு வாழ நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவு!

சலுகைகள் முழுதும் கிடைக்கப்பெறாமல் அது பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவர்களும் சரி, அரசும் சரி, தன் தினசரி கடமைகளினை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றனர்!

இந்தியாவில் பழங்குடி மக்கள் எஸ்.டி ஆக்கப்பட்டவர்கள்! ஆனால் இவர்களின் வாழ்க்கை இன்னும் எம்டியாகவே இருக்கிறது!

நம் தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களில் சிலரை பற்றி கொஞ்சம் விசயம் தெரிந்துக்கொளவோம்!

முண்டா! - இவர்கள் காடுகளினை சார்ந்திருந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்துவந்தவர்களாம் மிக எளிதில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களால் இப்போது இவர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் நிலைதான்! வில்லும் அம்புடனும் திரிந்த இவர்கள் அதை பெரும்பாலும் தங்களை தாக்கவரும் மனிதர்களினை திருப்பி தாக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறாங்களாம்! - அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல காட்டுல இருக்கற ஆளுங்கள விட நாட்டுல இருக்கற ஆளுங்க ரொம்ப விஷம்ன்னு !

கோயா! - இவர்கள் காடுகளில் விளையும் பழவகைகளினை முதலீட்டாக்கி அதை கொண்டு ஜீவனம் நடத்தியவர்கள்!

காணிக்காரர்கள் - மலையாள தமிழ்நாடு காடுகளில் இவர்கள் வாழ்ந்த கதையினை இவர்கள் பேசும் இரு மொழி கலந்த பேச்சு உங்களுக்கு உணர்த்தும்!

காடர் :- டாப் ஸ்லிப்ல் இவர்கள் வாழந்து வருகிறார்கள்! ஒட்டுமொத்தமாக தேசிய வனவிலங்கு பூங்காவாக மாற்றம் செய்ய வேண்டி டாப்ஸ்லிப்பில் வசிக்கும் இவர்களினை வெளியேற்ற கடும் பிரயத்தனம் செய்கிறது அரசு!

சோளகர் :- இவர்கள் பேச்சு மொழி கன்னடம் தமிழ் இவர்களை கிழங்கு வகை விவசாயம் இவர்களின் தொழிலாக ஒரு காலததில் இருந்து வந்தது!

இருளர் :- பாம்புகள் எலிகளை பிடிப்பதினை தொழிலாக சில சமயம் மேற்கொண்டவர்கள் தற்பொழுது விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்!

இவர்களை போன்றே லம்பாடிகள் குறிச்சான்கள் என மேலும் நிறைய பிரிவினர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு விசயம்!



தம் வாழ்ந்த இடத்தினை,நிலத்தினை விட்டு தொழிலினை விட்டு பிறிதொரு இடத்துக்கு சென்றதாலும், இன்றும் பெரும்பாலோனோர் ஏழைகளாக அரசின் உதவிக்கு கை ஏந்தியபடியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களின் காத்திருப்புக்கு கட்டாயம் நன்மை வந்து சேரட்டும்! அதுவே இது போன்ற பழங்குடியினருக்காக, உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு வேண்டி கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளின் வெற்றியாக இருக்கும்!

******************************************************************************
சம்பந்தா சம்பந்தமில்லாதது!

தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் - தங்கபாலு தலைவர், காங்கிரஸ் தமிழ்நாடு

>>>

தமிழகத்தின் நலனுக்காக எத்தனை அவமானங்களையும் சந்திக்க தயார் - தமிழக முதல்வர், தமிழ்நாடு

தாய்மை அங்கே தனிமையில்...!

வெள்ளிகிழமை விடுமுறை என்றாலே இப்போதெல்லாம் கொஞ்சம் வெறுப்பினை தரும் நாளாகவே மாறியிருக்கிறது!

வியாழன் இரவுகளின் வெகு நேர அரட்டை கழித்து வெள்ளி அதிகாலைகளில் உறங்கப்போனால் சரியான நேரமின்றி உறக்கம் எழும்புகிறது!

பிறபாடு உணவு உண்ணும் எண்ணங்கள் வர மறுக்கிறது! வரும் எண்ணங்கள் எல்லாம் கூடி பேசி கழித்த நாட்களை பற்றியதாகவே இருக்கிறது!

அம்மாவிடம் தொலைபேசிய பிறகும் ஏனோ ஞாபகங்கள் தொடர்ந்தன! தனிமையில் எப்படி அவரின் பணிகள் இருக்கும்! என்பன போன்ற பல எண்ணங்கள்! கடைசியில் இந்த வீடியோவினை காணும் நிலைமையில் முடிவுக்கு வந்தது! பாடலை கேட்டப்பிறகு எனக்கு கிடைத்த சோகம் என்பது மிக மிக குறைவான அளவே என்ற எண்ணம் தான் இறுதியில்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எத்தனை எத்தனை கஷ்டங்களும் போராட்டங்களுமாக கடினமானதாகவே இருக்கிறது என்பதை காண நேர்கையில் வாழும் காலத்தில் பார்க்கும் மனிதர்களிடத்தில்,பழகும் மனிதர்களிடத்தில் வெறுப்பின்றி, அன்பினை மட்டும் பகிர்ந்து சந்தோஷத்தினை மட்டும் தந்து பெற்று செல்ல முற்படுவோம் என்பதை உணர்த்தும் விதமாகவே இருக்கிறது!


அருமையான மனதை கலங்கவைக்கும் பாடல் வெளியான ஈழப்படத்தினை பற்றிய செய்திகளுக்கு இங்கு சென்று பாருங்களேன்!

நம் ஆழ்வார்!

கிட்டதட்ட 10 ஆண்டுகளாகளுக்கும் மேலாகவே விவசாயம் சார்ந்த செய்திகளில் அதிகம் பிரபலமாகி இருக்கும் பெயர் நம்மாழ்வார்!


இந்த பெயரினை பிரபலப்படுத்திய பெருமை கண்டிப்பாய் நம் தினசரி பத்திரிக்கை மீடியாவுக்கே போய்சேரவேண்டும்!

இயற்கை விவசாயம் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டு வரும் நோக்கில் இவர் மேற்கொண்டுள்ள பயணங்கள் பயன் தரும் நிச்சயம்! மிகத்தெளிவான கருத்துக்கள்! பொதுவில் பார்த்தால் இவரின் கருத்துகளையொத்த கருத்தினை உடையவர்கள் இன்றும் கிராமங்களில் டீக்கடைகளுக்கு முன்பு சாலை ஒரங்களில் உட்கார்ந்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பவைதான்!

பத்திரிக்கைகளில் வெளி வர ஆரம்பித்த இவரினை பற்றிய செய்திகள் மற்றும் இவரின் ஆலோசனைகள் பலவும் இயற்கை விவசாயத்தின் நோக்கம் அதனால் நாம் பெறப்போகும் நன்மைகள் நம் வருங்காலத்து தலை முறைகள் பெறப்போகின்ற நன்மைகளினை பற்றிய விளக்கத்தில் கண்டிப்பாக பலரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்தது!

இயற்கை விவசாயம் தொடர்பாக தமிழ் நாடு முழுக்க சுற்றி வரும் இவரினை ஓரிடத்தில் காண்பது என்பது மிக சிரமமான காரியமாம்! நிறைய விவசாயிகளை செய்ற்கை உரங்களின் பய்ன்பாட்டிலிருந்து விடுவித்து இயற்கை விவசாய முறைகளை மேற்கொள்ள பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து வருவதில் தான் தன் அனைத்து முயற்சிகளையும் செலவிட்டு வருகிறார்!

இவரின் மனதில் நிற்கும் பெரும்பாலும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் செயல்படுத்த நினைக்கும் பணி மரம் நடும் பணி ஒன்றுதானாம்! அது சம்பந்தமாக மிக எளிய பேச்சு வழக்கில் இவர் கூறும் விஷயங்கள்! நம் பெற்றோர்கள், நம் தாத்தாக்கள் சொல்லும் அறிவுரை போன்றே அத்தனை எளிமையாய்,நாம் முயற்சித்தாலும் கூட மிக எளிதாய் செயல்படுத்தகூடிய விசயங்கள் தான் இவை!

கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்!

அதெல்லாம் முடியாது நான் படிக்கணும்!




தேவையா இதெல்லாம்...!

தேவையே இல்லை!

கட்டாயமும் கிடையாது!

அட நல்ல பேரும் கூட வராதுங்க!

அப்புறம் எதுக்குங்க இந்த கிழவன் நான் படிச்சே ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிறாரு...?

அதான் மேட்டரூ!

ஒரு விசயத்துமேல ஆசை வைச்சுட்டாரு அதை அடைஞ்சே தீருவேன்னு முடிவும் பண்ணிட்டாரு! அதிகாரமா கேட்கறதுக்கும் ஆள் இல்லாதப்ப படிச்சு பார்த்துடவேண்டியதுதானேன்னு களமிறங்கிட்டாரு! ஆனாலும் இத்தனை வருசமாவா படிக்கிறாருன்னு எல்லாருமே மூக்கு மேல விரலு வைக்கிற அளவுக்கு மனுசன் திரும்ப திரும்ப படிச்சிக்கிட்டே இருக்காரு! பரீட்சை எழுதிக்கிட்டே இருக்காரு!

இன்னும் சொல்லப்போனா விசு படத்து வசனத்தை கூட நாம இவருக்காக யூஸ் பண்ணிக்கிலாம்!

பரீட்சை எழுதினார்;
பரீட்சை எழுதுகிறார்;
பரீட்சை எழுதுவார் - இறைவன் கருணையிலால்......!

ஆனாலும் கூட இவுரு இத்தினி வருஷம் படிச்சுக்கிட்டே ( சரியா படிக்கலைன்னாம் கூட படிச்சிக்கிட்டித்தான் இருக்காரம்!) பரீட்சை எழுதினாலும்,கூட ஆசிரியர்களும் கொஞ்சம் கூட பெருந்தன்மை காட்டாம எழுது ராசா! எழுதுன்னுத்தான் இன்னுமும் பெயிலாக்கிக்கிட்டே வராங்களாம்! :( (அந்தளவுக்கு அவரது படிப்பு இருக்கறது வேற விஷயம்! - உலகத்திலேயே அதிகமான முறை ஒரே கிளாஸ்ல பெயிலான ஆளு இவராத்தான் இருக்கும் போல!)

எல்லாத்துக்கும் மேல கிட்டதட்ட 78 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம - படிப்பை கல்யாணம் பண்ணிக்கிட்ட - பரீட்சை எழுதி பாஸ் பண்ணிட்ட பிறகுதான் கல்யாணமே பண்ணிப்பேன்னு சொல்ற இந்த தாத்தா சிவ சரண் ராஜஸ்தான் இருக்காரு 1969ல பரீட்சை எழுத ஆரம்பிச்சவராம்!

சரி தாத்தா ஒரு வேளை அப்படியே நீங்க பாஸ் பண்ணிட்டாலும் இப்ப இந்த வயசுல போய் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கானு கேட்டதுக்கு அவுரு சொன்ன பதில்!

கண்டிப்பா அதுக்குத்தானே இத்தினி வருஷமா கஷ்டப்பட்டு படிக்கிறேன்! ஒரு 20 - 25 வயசுக்குள்ள இருக்கற பொண்ணா பார்த்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்! (என்னா நெனைப்பு பாருங்களேன்!!)

அது எப்படியோ போகட்டும்! கல்வி மேல இம்புட்டு ஆசை வைச்சிருக்கற இந்த தாத்தா கண்டிப்பா இந்த வருசமாவது பாஸ் பண்ணட்டும்ன்னு நாம சாமிக்கிட்ட வேண்டிக்குவோம்!

கூட்ட நெரிசலில் - மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தே விட்டது! -

145 பேர் அதிலும் பெரும்பாலனவர்கள் சிறார்களாம்! செய்தி கேட்கையிலேயே அதிர்வினை தருகிறது!

பலி மிக கொடுமையான விபத்தாக கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்கும் இந்த சோகம் நடந்த இடம் ஹிமாச்சல பிரதேஷத்தின் மலைப்பகுதியில் அமைந்த கோவிலுக்கு செல்லும் வழியில்...!

மிகச்சிறிய பாதை அதனை கடந்துதான் மலையில் பகுதியில் அமைந்திருக்கும் கோவிலுக்கு செல்லவேண்டுமாம்!

மழைகால காலைப்பொழுதில் அதிகம் மலைப்பாறைகள் உருண்டு வந்து மேலே போகும் கீழே வரும் பாதைகளினை அடைத்துக்கொண்டிருப்பதாக தகவல் வருவதை அறிந்த மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடத்துவங்க அந்த துயரம் நடந்தே முடிந்துவிட்டது!

எத்தனை முறையோ இது போன்ற சம்பவங்கள் சின்னதும் பெரியதுமாய் இழப்புக்களினை நமக்கு தந்து சென்றாலும் கூட நாம் நமது அரசுகள் இன்னும் அந்த சம்பவங்களிலிருந்து கொஞ்சம் கூட பாடம் எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை!

செய்திகள் உலகம் முழுதிற்கும் தெரியத் தொடங்கி சில மணி நேரங்களாகிறது!

கூகுள் செய்தி திரட்டி

பிரிவின் துயரம் எப்படிப்பட்டது என்பதை எல்லோருமே அறிந்திருக்கிறோம்!

நம்மால் இம்மியளவுக்கும் உதவி செய்யாமுடியாவிட்டாலும் கூட,மனதளவில் அஞ்சலி செலுத்தி,பலியான ஆன்மாக்கள் அமைதியை அடைய பிரார்த்திர்ப்போம்!

நட்பு - இனித்திருக்கும் இறுதி வரை

நட்பில் வாழ்ந்தவன் நான்!

நட்பில் வாழ்பவன் நான்!

நட்பில் வாழ்க்கை நலமாக போகும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான்!

நட்பால் வாழ்க்கை போகும் என்று(மே) நம்பாதவன் நான்!

நட்பில்தான் வாழ்க்கையின் இறுதி நாளும் நலமாக போகும் என்றும் கூட நம்புவேன்!

நான் என்ற வார்த்தை பிரயோகம் கூட என்னை மெருகேற்றிய நட்பால் வந்ததுதானே....!






கொஞ்சம் ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னா விட்டுடலாம்! -

நட்புக்கான விளக்கத்தினை காட்சிகளாலேயே சொன்ன ஒரு பாட்டை கேட்டு கொஞ்சம் நட்பா ஆகிடுவோம்!






இணைய நட்பில், இதயம் வாழும் என் இனிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களோடு....!

பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்!

மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அருமையான ஒளி ஒவியத்தில் , சந்தோஷமான பட்டு பாவடை, பட்டு சட்டை சிறுமிகள்!

இளம்வயதில் விழுந்து எழும் பொக்கைப்பல்லின், சிரிப்பில் சிறுமி இயற்கையினை நினைத்து உருகும் அழகில்

என இப்படி நிறைய, ரசிக்கும் திறனுக்கு தீனி போடும் காட்சியமைப்புக்கள் கொண்ட வெகு சில பாடல்களில் இதுவும் உண்டு!

கொஞ்சம் அனைத்து நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கேட்டுப்பாருங்களேன்!

வாழ்வின் அர்த்தம் புரியும்!





நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்...

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்!

”நேரம்” சரியில்லை!


சில நேரங்களில் அரசினாலோ அல்லது ஆள்பவர்களாலோ எடுக்கப்படும் முடிவுகள் பைத்தியக்காரதனமாகவோ தெரிகின்றது! அட்லீஸ்ட் ஆலோசனை சொல்லுபவர்களை (நிறைய படிச்சவங்கதானே இருக்காங்க!??) நினைத்துப்பார்த்தால் கூட இவர்களும் கூட இதற்கு உடந்தையாகி இப்படியான முடிவுகளை ஏற்க வாய்மூடி மெளனியாக இருப்பார்களோ என்று நினைக்கதோன்றுகிறது!- என்ன மேட்டருன்னா....!

"ஜூன் 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தாலுகா தலைநகரங்களில் உள்ள நூலக வாசகர்களுக்கு "நேரம்' சரியில்லாமல் போய்விட்டது! மே 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருந்த நூலகங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் பொது நூலகத் துறையால் புதிய வேலைநேரத்தில் மாற்றிய மைக்கப்பட்டன.

அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் நூலகம் திறக்கப்படும் எனக் கூறி புதிய வேலை நேரத்தில் நூலகங்கள் திறக்கப்படுகின்றன.மற்ற அரசு அலுவலகத்திற்கும் நூலகத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான் நூலகத்திற்கான வார விடுமுறை வெள்ளிக்கிழமை வைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு வேலைநாள். ஞாயிறு நூலகம் இயங்கும். இதற்கு காரணம் விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நூலகத்திற்கு வந்து படிக்கவும் புத்தகம் எடுத்துச் செல்வதற்காகவும்தான்...!

1993-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நூலகங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் செயல்பட்டன. 1993ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்தின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படத் தொடங்கின. காலையில் அரை மணி நேரம் அதிகமாக்கப் பட்டு இரவில் அரை மணி நேரம் குறைக்கப்பட்டது.

இரவு 7.30 மணி வரை, படிக்கவும் புத்தகம் மாற்றவும் வரும் வாசகர்கள் அப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் நூலகம் வந்தார்கள்; அதற்கு ஜெயலலிதா அரசு முட்டுக்கட்டை போட்டு ஏழு மணிக்கே நூலகத்தை இழுத்து மூட ஆணையிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் 2008ஆம் ஆண்டில் நூலக வாசகர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் விருப்பத்தைக் கேட்காமல் அரசே தன்னிச்சையாக நூலக வேலை நேரத்தை தாலுகா நூலகங்களில் மாற்றியுள்ளது பொதுமக்களுக்கும் நூலக வாசகர்களுக்கும் நிச்சயமாக மரண அடிதான். நூலகங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு கங்கணம் கட்டி செயல்படுகிறதா?

பொதுமக்கள் தங்கள் வீட்டு வரி கட்டும் போது நூலக வரி 10 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது; அதாவது ஒருவர் வீட்டு வரி ரூ. 100 கட்டுகிறார் என்றால் நூலக வரி 10சதவீதம் சேர்த்து ரூ. 110 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நூலக வரியை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தனியாக நூலகத்துறையினரிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த நூலக வரியைக் கொண்டு தான் நூலகத்தின் செலவினங்கள் செய்யப்படுகின்றன.

ஆக,நாம் ஒவ்வொருவரும் அரசு நூலகங்களின் பங்குதாரர்களாக உள்ளோம்; நூலக வளர்ச்சியில், அக்கறையில் நூலகத் துறையை விட நமக்குத்தான் அதிக உரிமை உள்ளது.

பள்ளிக்கு மிக அருகில் அரசு நூலகங்கள் இருக்கும்போது, முன்கூட்டியே பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒருமணி நேரம் தங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள அன்றைய நாளிதழ்களைப் படித்து வந்தார்கள்.

அனைத்து நாளிதழ்களையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத மாணவர்கள் காலை நேரத்தில் அரசு நூலகத்தில் இலவசமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்களைப் படித்து மகிழ்ந்தார்கள். பள்ளிக்குச் சென்று முக்கியமான செய்திகளை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்காது. மாணவர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் முன் நூலகத்தைப் பயன்படுத்தினார்கள். பத்து மணிக்கு தான் அரசு அலுவலகங்களுக்கும் தனியார் அலுவலகங்களுக்கும் சென்று வந்தார்கள்.

இவர்கள் அனைவரும் 1-ம் தேதியில் இருந்து நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நூலகம் காலை 10 மணிக்குத் திறக்கப்படும் போது எப்படி வர முடியும்? இவர்களால் மாலை நேரங்களிலும் நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று பிறகு நூலகம் வந்தால் 6 மணியைத் தாண்டி விடும். இதேபோல்தான் வேலைக்குச் செல்பவர்களின் நிலையும். 6 மணிக்குத்தான் அரசு மற்றும் தனியார் துறை வேலை முடியும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி முடிந்து, நகர்ப்புறத்திற்கு வரும்போது 6 மணியைக் கடந்து விடும். முன்பு 6 மணிக்கு மேல் தான் ஆசிரியர்கள் நூலகத்திற்கு வருவார்கள்.

குடிமகன்களின் தாகத்தைத் தீர்க்க டாஸ் மாக் மதுபானக் கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. ஆனால், அறிவு தாகத்தைத் தீர்க்கும் அறிவுச் சுரங்கமான நூலகங்கள் மாலை 6 மணிக்கே பூட்டப்படுகிறது. என்ன கொடுமை ஐயா இது!

நன்றி - தினமணி