கத்தி தாவுது மனசு!

என்றைக்கு இந்த விசயம் இண்ட்ரோ ஆனதோ அன்றைக்கு ஆரம்பிச்சு இன்றைக்கு வரைக்கும் எத்தனையோ விதமான மாற்றங்கள் வந்தே விட்டது!

ஆனால் கூட பய புள்ளைங்களும் எதுவும் மாறுனதா தெரியல! நிறைய மாத்திக்கிட்டிருக்காங்க ஆனா மாறாமாட்டிக்கிறாங்க!

என்ன ஆளுங்க பாருங்க டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி மாறுங்கடாப்ப்பான்னு சொன்னா டெக்னாலஜியை அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வழக்கம்போல ரவுண்டு அடிச்சு வந்துக்கிட்டிருக்காங்க!

அப்படி என்னப்பா அந்த விசயம் அப்படின்னு டென்சன் ஆகாம பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கவங்களுக்கு செல்போன் மேட்டர் பத்தி சொல்றேன்!

ஆரம்பிச்ச அன்னிக்கு காதுல வைச்சு கத்த ஆரம்பிச்சாங்க இன்னும் கத்திக்கிட்டுத்தான் இருக்காங்க! சிக்னல் இல்லாட்டியும் சரி,செல்போன்ல சார்ஜ் இல்லாட்டியும் சரி என்னமோ இவுக செல்போன்ல இருக்கற மைக்கும் எதிர் சைடுல இருக்கறவரு போன்ல இருக்கற ஸ்பீக்கரும் வேலை செய்யவே செய்யாது அப்படிங்கற மாதிரி அப்படி ஒரு காட்டு கத்தல்!

டேயெப்பா அதுக்கு நீங்க செலபோன் இல்லாமலே பேசலாம்டான்னு எவ்ளோதான் கிண்டலடிச்சு பாருங்க! அசரமாட்டானுங்க அடுத்த நிமிசம் கால் வந்தா கத்த ஆரம்பிச்சிடுவானுங்க! இது அவுங்களுக்கு பழக்கமான விசயமாகிப்போய்ட்ட ஒண்ணு அதே நேரத்துல காதுக்கு காப்பு மாட்டி விட்ட மாதிரி செல்ப்போனை வைச்சு அழுத்திக்கிட்டு பேசுறதாலதான் அவுங்க கத்துறது அவுங்களுக்கே கேட்கலையாமாம்! அப்படி ஒரு ஆய்வு நடத்தி இருக்கானுங்க!

ஆமாங்க அது தான் நமக்கும் தெரியுமே விடுமுறைகளில் சனிக்கிழமை இரவுகளில், நிலாவே வராத நாளிலும் கூட, நிலா சோறு என்ன பெயரில் குண்டான் சோற்றை தயிர் விட்டு குழைத்து எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் புளிக்குழம்பினையும் ஏந்திக்கொண்டு அப்படியே மொட்டை மாடிக்கு போய் உக்காந்துக்கிட்டு நல்ல இருட்டுல ( அதான் நிலா இல்லாத நிலா காலமாச்சே! ) கையில கொஞ்சம் தரையில கொஞ்சம் சாதம் குழம்பு வைச்சு கொட்டிக்கிட காலத்தினை நினைச்சா....!

ம்ம் நினைச்சுக்கிட்டே இருக்கலாம்ங்க!

எல்லா சோத்தையும் தின்னு முடிச்சதும் செரிக்கறதுக்காக வேண்டி, நல்ல சப்பணம் கொட்டி உக்காந்துக்கிட்டு இரண்டு கையையும் எடுத்து காதுல பொத்திக்கிட்டு...!

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


இப்படியெல்லாம் சவுண்டு வுட்டா அப்ப தெரியும்! அண்ணன்காரன் அடிக்க வர்றதும், அதுக்கு தப்பி தாவி போறதும் பிறகு மாட்டி அடி உதை வாங்குறதும் இப்படியே ரகளை பண்ணிக்கிட்டிருந்தா தின்ன சோறு ஆட்டோமேடிக்கா செரிச்சிடும்ல!

டிஸ்கி:- பதிவுல ஆரம்பிக்கிற மேட்டரும் சரி முடிக்கிற மேட்டரும் சரி சம்பந்தமில்லாம இருக்கணும் ஆனா சம்பந்தமிருக்கணும்! அப்படின்னு டிங்க் பண்ணி எழுதுன மொக்கைதான் இது! - இது டேக் மாதிரி திரும்ப ஒரு ரவுண்டு வர வைக்க மறைமுக பேச்சு வார்த்தைகள் செஞ்சு ஒரு 3 பேரை சரிக்கட்டி வைச்சிருக்கேன்!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

என்னோட ஆயில்யன் இப்படி எதையோ எழுத ஆரம்பிச்சு, எங்கேயோ போறாரேன்னு பார்த்தேன்... இது கூட புது டிரண்டா? முடியலை...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ஏயப்பா... நாங்க வழக்கமாவே இப்படித்தானே எழுதறோம்.. எதையோ நினைச்சு ..எதையோ எழுதி.. அதுல எதையோ புரிஞ்சுக்கிட்டு புரியாம பின்னூட்டம் வந்தப்பறம் தான் எங்க பதிவு புரிஞ்சு..திரும்ப சின்னதா விளக்கம் பின்னூட்டத்தில் குடுத்துன்னு இதுக்கு ஒரு டேக் வேறயா.. :))

said...

ஏதோ சொல்ல டிரை பண்ற மாதிரி தெரியுது..:-)

said...

தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க :))

said...

//தமிழ் பிரியன் said...

என்னோட ஆயில்யன் இப்படி எதையோ எழுத ஆரம்பிச்சு, எங்கேயோ போறாரேன்னு பார்த்தேன்... இது கூட புது டிரண்டா? முடியலை...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ரிப்பீட்டேய்...!

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஏயப்பா... நாங்க வழக்கமாவே இப்படித்தானே எழுதறோம்.. எதையோ நினைச்சு ..எதையோ எழுதி.. அதுல எதையோ புரிஞ்சுக்கிட்டு புரியாம பின்னூட்டம் வந்தப்பறம் தான் எங்க பதிவு புரிஞ்சு..திரும்ப சின்னதா விளக்கம் பின்னூட்டத்தில் குடுத்துன்னு இதுக்கு ஒரு டேக் வேறயா.. :))//

ரிப்பீட்டேய்...!

said...

//சந்தனமுல்லை said...

ஏதோ சொல்ல டிரை பண்ற மாதிரி தெரியுது..:-)//

ரிப்பீட்டேய்...!

Anonymous said...

அப்புறம்??

(கிகீகிகி)

said...

ட்ரெண்ட் செட்டர் ஆயில்யன் வாழ்க.. வாழ்க!!