தாய்மை அங்கே தனிமையில்...!

வெள்ளிகிழமை விடுமுறை என்றாலே இப்போதெல்லாம் கொஞ்சம் வெறுப்பினை தரும் நாளாகவே மாறியிருக்கிறது!

வியாழன் இரவுகளின் வெகு நேர அரட்டை கழித்து வெள்ளி அதிகாலைகளில் உறங்கப்போனால் சரியான நேரமின்றி உறக்கம் எழும்புகிறது!

பிறபாடு உணவு உண்ணும் எண்ணங்கள் வர மறுக்கிறது! வரும் எண்ணங்கள் எல்லாம் கூடி பேசி கழித்த நாட்களை பற்றியதாகவே இருக்கிறது!

அம்மாவிடம் தொலைபேசிய பிறகும் ஏனோ ஞாபகங்கள் தொடர்ந்தன! தனிமையில் எப்படி அவரின் பணிகள் இருக்கும்! என்பன போன்ற பல எண்ணங்கள்! கடைசியில் இந்த வீடியோவினை காணும் நிலைமையில் முடிவுக்கு வந்தது! பாடலை கேட்டப்பிறகு எனக்கு கிடைத்த சோகம் என்பது மிக மிக குறைவான அளவே என்ற எண்ணம் தான் இறுதியில்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எத்தனை எத்தனை கஷ்டங்களும் போராட்டங்களுமாக கடினமானதாகவே இருக்கிறது என்பதை காண நேர்கையில் வாழும் காலத்தில் பார்க்கும் மனிதர்களிடத்தில்,பழகும் மனிதர்களிடத்தில் வெறுப்பின்றி, அன்பினை மட்டும் பகிர்ந்து சந்தோஷத்தினை மட்டும் தந்து பெற்று செல்ல முற்படுவோம் என்பதை உணர்த்தும் விதமாகவே இருக்கிறது!


அருமையான மனதை கலங்கவைக்கும் பாடல் வெளியான ஈழப்படத்தினை பற்றிய செய்திகளுக்கு இங்கு சென்று பாருங்களேன்!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the firstu

said...

பழகும் மனிதர்களிடத்தில் வெறுப்பின்றி, அன்பினை மட்டும் பகிர்ந்து சந்தோஷத்தினை மட்டும் தந்து பெற்று செல்ல முற்படுவோம் என்பதை உணர்த்தும் விதமாகவே இருக்கிறது!


vazimizigiren

said...

:( நன்றி தங்கள் பதிவுக்கு

said...

பட அறிமுகத்திற்கு நன்றி.. நல்ல உருக்கமான பாட்டு..

said...

ம்ம்ம்...

Anonymous said...

நல்ல பதிவு..நிறைய எழுத நினைத்தேன்..இப்போ எழுத்தில் வரவில்லை..