வாழ்க்கை மிகப்பெரிய மைதானம் எல்லோரும் ஒடிக்கிட்டிருக்காங்க!
அதான் ஓடவேண்டிய மைதானத்தில் யாரும் ஓடுவதில்லை!
சிறுவர்கள் பக்கா வசதிகளோடு வீட்டிலேயே, வீடியோ கேம்களிடமோ அல்லது இண்டர்நெட் கேம்களோடோ செட் ஆகிவிட்டனர்!
இது இளையதலைமுறை - இணைய தலைமுறையாக போனதன் பரிதாபம்!
அதிகம் பிரச்சனையே இல்லை என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் பெரும் ஊக்கத்தினோடாக இது போன்ற செயல்களில் ஈடுபட பிள்ளைகளினை தயார் செய்து விட்டார்கள்!
இனி விளையாடு மைதானங்கள் தோறும் பச்சை பசும்புல் வெளிகளினை சுற்றி வருபவர்களாக இளைய தலைமுறை தயாராகிவிட்டது! - பருமனை குறைக்கவும் சர்க்கரை வியாதியினை சரிக்கட்டவும்!
மெல்ல மெல்ல குழுவாய் விளையாட வேண்டிய அவுட்டோர் விளையாட்டுகள் குறைந்து இண்டோர் விளையாட்டுகளாக இண்டர் நெட் விளையாட்டுகளாக மாறிக்கொண்டே வருக்கின்றன!
குழுவில் கூச்சலிடும் சந்தோஷ ஆரவாரமிடும் போக்கு மாறி,தனிமையில் இணைய மனிதர்களிடம் வருத்தம் சந்தோஷம் பகிர்ந்துக்கொள்ளும் நாட்கள் நடக்கதொடங்குகின்றன!
பெரும்பாலும் வெளிப்புற விளையாட்டுகள் என்பது குழு மனப்பான்மை அல்லது நட்பினை வலுப்படுத்தி, மேலும் மேலும் சிந்தனை தூண்டியபடியே புது புது யுக்திகளை களத்தில் கையாளும் முறையினை பெற உதவும் என்பதே மிக முக்கியமானதொரு நன்மை!
ஆனால் அதையெல்லாம் இப்போதைய அப்பா அம்மாக்கள் சுத்தமாக மறுத்து விட்டனர் தம் பிள்ளைகளுக்கு! எங்கே வெளியே போகும் பிள்ளை எதாவது காயத்துடனோ அல்லது உடம்புக்கு ஊறு விளைவிக்கும் விதமான விபத்துக்களோடு திரும்புவானோ என்ற பயம் முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டுவிட்டது!
பார்க்கும் எதுவுமே மிக எளிமையாக இருக்கும் ஆனால் பழகும்போதுதான் மிக கடினமாக இருக்கும்! டிவிக்களில் அல்லது இணையங்களில் விளையாடும் விளையாட்டுகளில் உடல் உறுதி மன உறுதி எந்தளவுக்கு வலுப்படும் என்பது தெரியாது? ஆனால் விளையாட்டுக்களத்தில் அது புரிபடும்!
சைக்கிள் ஓட்டிப்பழகுதல்
விளையாட்டு மைதானங்களில் விளையாடிக்கொண்டிருத்தல்
தெருக்களில் விளையாடுதல்
மரம் ஏறுதல்
இப்படியான விசயங்கள்
இனி இல்லாமலே போகும் சோகம் காணுங்கள்!

7 பேர் கமெண்டிட்டாங்க:
:(
:(
நியாயமான கவலை..
இந்த அளவு சமூகப் பொறுப்புக்களுடன் எழுதுவதற்குப் பாராட்டுக்கள்
அன்புடன்
சீமாச்சு
எங்க வீட்டுல அந்த அளவுக்கு மோசமில்லப்பா.. எதோ வெயிலடிக்கிற நேரம் இணையத்தில் விளையாட்டு பொழுது சாய்ந்ததும் வெளியே கூச்சலிட்டப்படி ஓடி ஆடி .. விளையாட்டு.. சில சமயம் என் வீட்டு முன்னால விளையாடதன்னு சிலர் மிரட்டறதா வேற கேள்வி..:)
//இது இளையதலைமுறை - இணைய தலைமுறையாக போனதன் பரிதாபம்!//
ஒரு நாளைக்கு 15 பதிவு போடற அளவுக்கு இணையமே வாழ்க்கையாக இருக்கும் ஆயில்யன் தான் இந்த இணைய தலைமுறையின் காரணகர்த்தா என்று பீஜிங்கில் இருந்து ஜார்ஜ் புஷ் அறிக்கை உட்னுகீராறுபா. :))
நியாயமான கவலை,.தவறு என்று தெரிந்தும் எல்லோரும் அந்த தவறை செய்து கொண்டு இருக்கிறோம்.
உண்மை தான்..
Post a Comment