ஸ்கூல் நினைப்பு!

பள்ளி கூடத்து நினைவுகள் என்றாலே வரிசைக்கிரமமாக சொல்வது முடியாத விசயம்! (அப்ப ஆறாவது டீயுசன் போனோமா இல்ல 8 வது இங்கீலிஸ்க்காக டீயுசன் போனோமான்னு மனசுல ஒரு ஜெர்க்கு வரும்ல அதுதான் இது!)

ஆறாவதில் ஆரம்பிக்கும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஆசிரியரிடம் நாம் முதலில் வாங்கிய அடி அல்லது வாழ்த்து கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும்! (எனக்கு அடி வாங்குனது நல்லா ஞாபகத்துக்கு வருதுப்பா!)

ஒவ்வொரு வகுப்பிலும் வருடங்களை கழித்து மாறிச்சென்றது, மாறி செல்கையில் மறந்த நட்புகள்! சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! - அவ்ளோ ஞாபகம் இருக்காடா உன்கிட்டன்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு நான் எல்லாத்தையும் வீடியோ பைலாக வைத்திருப்பதால் இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!

அவ்வப்போது பீறிட்டு கிளம்பும் எண்ணங்களை நினைவுகளை சொல்லி கொள்ள அருகில் நண்பர்கள் கிடையாது என்ற காரணத்தினாலும், போன் போட்டு அழ,அல்லது சிரித்து மகிழ வாய்ப்புக்கள் மிக காஸ்ட்லியாக இருப்பதாலும், இருக்கவே இருக்கு இணைய தொடர்பில் நட்புகள் என்ற தைரியத்திலும், ஊர் உறவுகள் தங்கள் உணர்வுகளினை பகிர்ந்துக்கொள்ள ஒரு இடம் வலைத்துப்போட்டிருப்பதாலும் இனி அங்கு இருந்தப்படியே உங்களை அவ்வப்போது சந்திக்கிறேன் என்ற செய்தியோடு மீ த எஸ்கேப்பு!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அட நான் கூட இன்னிக்கு தான் ஒரு புது பதுவு ஆரம்பிக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்...

said...

சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! -

நினைவுகள் நிறையவே இருக்கு. அதிலும் 2 ஸ்கூல் மாறினதில் நிறைய நினைவுகள் என் ஞாபக அடுக்குகளில் இருந்து கொண்டு அவ்வப்போது எட்டி பார்த்து விட்டுப் போகும்.

said...

பள்ளிக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. இப்போதும் சில சமயம் கனவிலும் படித்த பள்ளியின் வாழ்வு மீண்டும் வந்திருப்பது போன்ற பிரமை எல்லாம் வந்திருக்கிறது.

Anonymous said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

கானாஸின் பள்ளி கதைகளை நீங்க கேட்டிருக்கிங்களா??

said...

//VIKNESHWARAN said...
அட நான் கூட இன்னிக்கு தான் ஒரு புது பதுவு ஆரம்பிக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்...
//

அப்படியா வாழ்த்துக்கள்:)

said...

//புதுகைத் தென்றல் said...
சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! -
நினைவுகள் நிறையவே இருக்கு. அதிலும் 2 ஸ்கூல் மாறினதில் நிறைய நினைவுகள் என் ஞாபக அடுக்குகளில் இருந்து கொண்டு அவ்வப்போது எட்டி பார்த்து விட்டுப் போகும்.
//

ஆஹா அக்கா! போக வுடாதீங்க புடுச்சு பதிவுல போடுங்க!

said...

//கானா பிரபா said...
பள்ளிக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. இப்போதும் சில சமயம் கனவிலும் படித்த பள்ளியின் வாழ்வு மீண்டும் வந்திருப்பது போன்ற பிரமை எல்லாம் வந்திருக்கிறது.
//

:))

said...

//Thooya said...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

கானாஸின் பள்ளி கதைகளை நீங்க கேட்டிருக்கிங்களா??
//

கொஞ்சம் கதை சொன்னாரு ஆனா கொஞ்சின கதையெல்லாம் இன்னும் சொல்லலை! :(