பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்!

மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அருமையான ஒளி ஒவியத்தில் , சந்தோஷமான பட்டு பாவடை, பட்டு சட்டை சிறுமிகள்!

இளம்வயதில் விழுந்து எழும் பொக்கைப்பல்லின், சிரிப்பில் சிறுமி இயற்கையினை நினைத்து உருகும் அழகில்

என இப்படி நிறைய, ரசிக்கும் திறனுக்கு தீனி போடும் காட்சியமைப்புக்கள் கொண்ட வெகு சில பாடல்களில் இதுவும் உண்டு!

கொஞ்சம் அனைத்து நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கேட்டுப்பாருங்களேன்!

வாழ்வின் அர்த்தம் புரியும்!





நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்...

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.நீங்கள் குறிப்பிட்ட அந்த சிறுமிதான், "அழகி"திரை படத்தில் வந்த பெண்.பெயர் மோனிகா அல்லது மோனிஷா

Anonymous said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.இதில் ஆண் பாடுவதும் நன்றாக இருக்கும்..