கூட்ட நெரிசலில் - மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தே விட்டது! -

145 பேர் அதிலும் பெரும்பாலனவர்கள் சிறார்களாம்! செய்தி கேட்கையிலேயே அதிர்வினை தருகிறது!

பலி மிக கொடுமையான விபத்தாக கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்கும் இந்த சோகம் நடந்த இடம் ஹிமாச்சல பிரதேஷத்தின் மலைப்பகுதியில் அமைந்த கோவிலுக்கு செல்லும் வழியில்...!

மிகச்சிறிய பாதை அதனை கடந்துதான் மலையில் பகுதியில் அமைந்திருக்கும் கோவிலுக்கு செல்லவேண்டுமாம்!

மழைகால காலைப்பொழுதில் அதிகம் மலைப்பாறைகள் உருண்டு வந்து மேலே போகும் கீழே வரும் பாதைகளினை அடைத்துக்கொண்டிருப்பதாக தகவல் வருவதை அறிந்த மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடத்துவங்க அந்த துயரம் நடந்தே முடிந்துவிட்டது!

எத்தனை முறையோ இது போன்ற சம்பவங்கள் சின்னதும் பெரியதுமாய் இழப்புக்களினை நமக்கு தந்து சென்றாலும் கூட நாம் நமது அரசுகள் இன்னும் அந்த சம்பவங்களிலிருந்து கொஞ்சம் கூட பாடம் எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை!

செய்திகள் உலகம் முழுதிற்கும் தெரியத் தொடங்கி சில மணி நேரங்களாகிறது!

கூகுள் செய்தி திரட்டி

பிரிவின் துயரம் எப்படிப்பட்டது என்பதை எல்லோருமே அறிந்திருக்கிறோம்!

நம்மால் இம்மியளவுக்கும் உதவி செய்யாமுடியாவிட்டாலும் கூட,மனதளவில் அஞ்சலி செலுத்தி,பலியான ஆன்மாக்கள் அமைதியை அடைய பிரார்த்திர்ப்போம்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பலியான ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசுகள் கவனமாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும்... :(

said...

தன்னுயிருக்கு ஆபத்துன்னதும் மனுஷன் பதறியடிச்சு ஓடுறதாலே எப்படியெல்லாம் துயரம் நடந்துருது பாருங்க.

வருத்தமா இருக்கு(-;

said...

//பிரிவின் துயரம் எப்படிப்பட்டது என்பதை எல்லோருமே அறிந்திருக்கிறோம்!

நம்மால் இம்மியளவுக்கும் உதவி செய்யாமுடியாவிட்டாலும் கூட,மனதளவில் அஞ்சலி செலுத்தி,பலியான ஆன்மாக்கள் அமைதியை அடைய பிரார்த்திர்ப்போம்!//

146 ஆன்மாக்கள் அமைதி அடைய பிரார்த்தனை செய்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/